இயேசு தம்முடைய எல்லா சந்திப்புத் திட்டங்களையும் காத்துக்கொள்கின்றார் 64-04-18E 1. ஒரு சில நொடிகள் நாம் சற்று நின்று ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்பொழுது நம்முடைய தலைகளும் இருதயங்களும் தாழ்த்தப் பட்டிருக்கையில், நான் வியப்பது... இந்த இரவை இரட்சிப்பின் இரவாக கிறிஸ்துவண்டை வரவும், பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கும், நாங்கள் அமைத்து வைத்திருக்கும் இரவாக இது இருக்கையில் - எத்தனைப் பேருக்கு விண்ணப்பங்கள் உண்டென்றும், "தேவனாகிய கர்த்தாவே, என்னை நினைவில் கொள்ளும். நான் உம்மோடு சரியாக இருக்க விரும்புகிறேன்,” என்றும் எத்தனைப் பேர் கூற விரும்புகிறீர்களென்றும் நான் வியக்கின்றேன்-? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 2. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய பிரசன்னத்திற்காகவும் மற்றும் நீர் வரப்போகின்றீர் என்று உண்மையாக விசுவாசிக்கின்ற உத்தம இருதயமுள்ள மக்களுக்காகவும் நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம்; ஆயிரக் கணக்கான வருடங்களாக இந்த உலகமானது காத்துக் கொண்டிருந்த அந்த மகத்தான சம்பவத்திற்காக அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதே போல நாங்களும், காலமானது செல்வதையும், வரலாறு கடந்து சென்று நித்தியமானது உள்ளே வரத் துவங்கு வதையும் நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த தோன்றுதலை நாங்கள் காண்கின்றோம். ஆகவே எங்கள் இருதயங்கள் அற்புதமான விதத்தில் மகிழ்ச்சியுறுகிறது. பிதாவே, இன்றிரவு நீர் தாமே எங்கள் இருதயங்களை ஆராய்ந்து எங்களை சோதித்துப் பார்க்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்குள்ளே எந்த ஒரு பாவம் இருந்தாலும் அதை வெளியே எடுத்துப் போடும். இந்த வாரத்திலே உம்முடைய மகத்தான பிரசன்னத்தை நாங்கள் கண்டு உள்ளோம். நீர் தாமே இந்த ஜனக் கூட்டத்தில் மத்தியில் சென்று இருதயங்களின் ஆழத்தில் இருந்த எண்ணங்களை தோண்டி எடுத்து அதை எங்களுக்கு வெளிப்படுத்தி, இந்தக் காரியங்களை எங்களிடம் கூறினதை நாங்கள் பார்த்தோம். இப்பொழுது இன்றிரவு, கர்த்தாவே, எங்கள் இருதயங்கள் உண்மையா னதாகவும் உம்மோடு சரியாக இருக்கவும் நாங்கள் விரும்புகிறோம். நீர் தாமே ஆசீர்வதிக்கும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். 3. இங்கே பிரசங்க மேடையில் அல்லது பிரசங்க பீடத்தில் ஒரு பெட்டி நிறைய கைக்குட்டைகள் - தேவையுள்ளோருக்கு செல்லவிருக்கின்ற சிறு பொட்டலங்கள் வைக்கப்பட்டுள்ளன. பரலோகப் பிதாவே, தேவனை விசுவாசிப்பதற்காக விசுவாசம், ஜெபமானது ஏறெடுக்கப்பட்ட இந்த இடத்திலிருந்து அவைகள் அனுப்பப்படும்போது, இங்கு இருக்கின்ற ஒவ்வொரு கைக்குட்டையும், ஒவ்வொரு சிறு துணியும் மற்றும் பொட்டலமும் வியாதியஸ்தரை தொடும் போது அவர்கள் சுகம் அடைவார்களாக என்று நான் ஜெபிக்கின்றேன்; பிதாவே, நீர் தாமே அவர்களை சுகம் ஆக்கும்படியாக இந்த ஜனத்திரளும் நாங்களும் ஒரே மனதோடே கேட்கின்றோம். நாங்கள் கேட்டிருக்கின்றோம் என்பதற்காக இதுவே இந்த நினைவு சின்னமாகும். "கேளுங்கள் அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் ஜெபிக்கும் போது நீங்கள் கேட்பது எதுவோ அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்” என்று நீர் கூறியிருக்கிறீர். நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே; நாங்கள் விசுவாசிக்கிறோம். அது கேட்கப்பட்டு விட்டது. இப்பொழுது தேவனுடைய இராஜ்யத்திற்கென்று இது செய்யப்படுவதாக, இதை இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். ....நீங்கள் உட்காரலாம். 4. ஆம், இன்றிரவு கர்த்தர் நம்மிடம் வரத்தக்கதாக மகத்தான எதிர்பார்ப்பின் கீழாக, நாம் இந்த இரவை வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்காகவும், நம்முடைய ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பைக் கோரும்படிக்காகவும் ஒதுக்கியுள்ள வேளையில், நாம் மறுபடியுமாக இன்றிரவு இந்த மண்டபத்திற்கு வருவது நிச்சயமாக அருமையான ஒன்றாகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை மறுபடியுமாக புதிதாக பிரதிஷ்டை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே இந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்ட வேதாகம வசனமாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் கண்டோம், சரியாக அவர் நமது மத்தியில் இருந்து என்ன செய்தார் என்பதைப் பார்த்தோம் - முன்பு அவர் பூமியில் இருந்த போது செய்த அந்த அதே காரியங்களை இங்கே அவர் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுது, நாம் ஒரு பரிபூரண நாளுக்குள்ளாக, ஒரு பரிபூரண சபையாக ஊழியத்தில் அது மேலெழும்பிக் கொண்டிருப்பதை நாம் காண்போமானால்... நாம் ஆரம்பித்த போது, இக்காலை நாம் கூறிக் கொண்டிருந்தது போல. 5. இக்காலையில் காலை உணவு வேளையில் நிச்சயமாக நாம் ஒரு அற்புதமான தருணத்தைக் கொண்டிருந்தோம். சகோதரரின் அருமையான ஒத்துழைப்பிற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்ட ஏற்பாட்டிற்கு ஆதரவு அளிக்கின்ற இந்த அருமையான மனிதர், இவர்கள் நிறைய பேர்களின் கைகளை நான் குலுக்க வேண்டியவனாக உள்ளேன். அவர்கள் தாமே நம்மை இங்கே கொண்டு வந்து... அது எதைக் காண்பிக்கிறதென்றால் தங்கள் மக்களின் பேரில் அவர்கள் கொண்டு இருக்கிற அக்கறையைக் காட்டுகின்றது. அவர்கள் தங்கள் ஆடுகள் பேரில் அக்கறைக் கொண்டிருக்கின்ற மேய்ப்பர்கள் ஆவர். இந்த மக்களில் சில பேருக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கின்றேன்... எந்த ஒரு மேய்ப்பனும் தன் ஆடுகளுக்கு வைட்டமின்களைக் கொடுக்க வேண்டும் என்று அக்கறைக் கொண்டிருப்பான். இவை ஆவிக்குரிய வைட்டமின்கள். இவை நம்முடைய தேவனுக்கு உள்ளாக ஆடுகள் பலமுள்ள விசுவாசத்திற்குள் வளரும்படிக்கு உதவி செய்பவையாகும். இப்படிப்பட்ட மனிதரை நான் மிகவும் பாராட்டுகிறேன். 6. ஆகவே இப்பொழுது, ''சபை வளர்தல்,'' என்கின்ற கருத்தின் பேரில் இக்காலை நான் பேசுகையில், பாருங்கள், நிலத்தில் இருக்கின்ற ஒரு விதையைப் போன்று தான்... அந்த விதையானது விதைக்கப்படுகையில், அது மகிமையின் மேல் மகிமைக்கு வளருகிறது. சிறிது காலம் கழித்து அது மலருகின்றது, அதன் பிறகு மறுபடியும் திரும்பி விதைக்குச் செல்கின்றது. ஆகவே அது விதைக்கப்பட்ட மூல விதையைப் போலவே இருக்கின்றது. அதைப் போலத் தான் சபையும் இருந்து வருகின்றது. சபைக் காலம் துவங்கினது, இந்த கடைசி நாட்களில்... 7. இருண்ட காலத்திற்கு பின், அது மார்டின் லூத்தருடனும் சீர்திருத்தத்துடனும் ஆரம்பித்தது, விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல் பிரசங்கிக்கப்பட்டது. அவருடைய காலத்திற்குப் பிறகு அவர்கள் சபையை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர், அது மரித்துப் போனது. 8. பிறகு, லூத்தருக்கு அடுத்ததாக சிவிங்க்லி (Zwingly) வந்தார், சிவிங்க்லி கன்னிப் பிறப்பில் விசுவாசம் கொள்ளவில்லை. அவர் சுவிட்சர்லாந்திற்கு சென்றார். இன்னமும் கூட அவர்கள் கன்னிப் பிறப்பில் விசுவாசம் கொள்வதில்லை. ஆகவே சிவிங்க்லியின் போதகமானது என்னவென்றால் இயேசு கன்னிப் பிறப்பில் பிறக்கவில்லை என்பதே. அவர்கள் கூறுவது என்னவென்றால் அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுகின்ற யோசேப்பின் குமாரன் ஆவார் என்பதே. 9. ஆனால் அது கிறிஸ்தவத்தின் முழு அடித்தளத்திலிருந்து முழு ஆதாரத்தையே எடுத்துப் போட்டு விடுகின்றது. அவர் கன்னியின் வயிற்றில் பிறந்தார். அப்படி இல்லை என்றால் உங்களையும் என்னையும் போலவே அவர் ஒரு சாதாரண மனிதன் தான். அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். 10. முடிவாக, சபையானது அங்கே அந்த விதமான ஒரு நிலையை அடைந்தது, மற்றுமொரு சீர்திருத்தம் அதற்குத் தேவைப்பட்டது. ஆகவே தேவன், ஜான் வெஸ்லியை பரிசுத்தமாக்கப்படுதல், ஆவியின் சுத்தத்தைக் குறித்த ஒரு செய்தி உடனே அனுப்பினார். அப்பொழுது அவரும் மற்றும் வைட்ஃபீல்ட், ஆஷ்பரி, இன்னும் அவர்களில் அநேகர் ஆகியோர் அந்த மகத்தான சீர்திருத்தத்தில் தொடர்ந்து சென்றனர். அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வந்தனர். ஆகவே அந்த மகத்தான எழுப்புதலானது அந்த சமயத்தில் இங்கிலாந்தையும் மற்றும் உலகத்தையும் இரட்சித்தது. 11. அவர்கள் என்ன செய்தனர்-? அதைத் துவக்கினவர்கள் மரித்த பின்பு, அவர்கள் உடைய போதகத்தின் பேரில் ஒரு ஸ்தாபனமாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை நிறுவினர். அதன் பிறகு, அலெக்சாண்டர் காம்பெல், ஜான் ஸ்மித், மற்றும் பாப்டிஸ்ட் சபை மற்றும் இன்னும் பிறர், அதிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்தனர். 12. அதன் பிறகு மறுபடியுமாக மகத்தான ஒரு சீர்திருத்தம் வந்தது, பெந்தெகொஸ்தே, வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலைக் கொண்டும், அந்நிய பாஷை பேசுதல், தெய்வீக சுகமளித்தல் ஆகியவற்றைக் கொண்டு, அந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியே வந்தது. அது நீண்ட காலத்திற்கு நிலைத்தது. கலிபோர்னியாவில் அசுசா வீதியில் பரிசுத்தாவியானவர் இறங்கின முதற்கொண்டு இப்பொழுது சுமார் 50 முதல் 80 ஆண்டுகளாகி விட்டது. இங்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான் அது இறங்க ஆரம்பித்தது. ஒரு மகத்தான தருணமானது வந்தது. 13. பிறகு, பெந்தெகொஸ்தே என்ன செய்தது-? ஒன்று- அதை ஒரு ஸ்தாபனமாக ஆக்கினது. ஒன்று, "அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வருகின்றார்,'' என்றது; மற்றொன்று- “ஒரு வெள்ளை மேகத்தின் மேல் வருகின்றார்,” என்கிறது. அவைகள் ஸ்தாபனங்களுக்குள் நேராகச் சென்றது, உடைந்து பிரிந்தது, மக்களின் மத்தியில் இருந்த தங்களுடைய சகோதரத்துவத்தை உடைத்துப் போட்டது. 14. இஸ்ரவேலைப் போன்று, இஸ்ரவேல் நதிக்கரையில் நின்று ஜெய கோஷமிட்ட போது அதை அறியாதிருந்தனர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய சுமார் 40 மைல் தூரம், சுமார் 4 நாட்கள் பிரயாணத்தை மாத்திரம் அவர்கள் செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் அங்கு சென்றடைய 40 ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உணராது இருந்தனர். ஆனால் அது என்னவாக இருந்தது-? கிருபையானது அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை, அக்கினி ஸ்தம்பத்தை, பலியிடப்பட்ட ஆட்டுக் குட்டியை, ஒரு விடுதலையை அளித்தது. ஆனாலும் அவர்கள் தங்களுக்கு நியாயப் பிரமாணம் தேவையாயிருக்கிறது என்றனர். தாங்கள் ஏதாவதொன்றை எடுத்து அதைக் கொண்டு ஒன்றைச் செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்க்க விரும்பினர். யாத்திராகமம் 19-ல் இஸ்ரவேலர் கிருபையை நிராகரித்து நியாயப்பிரமாணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம், தாங்கள் செய்ததிலேயே மிக மோசமான ஒரு தவறொன்றைப் புரிந்தனர். 15. அதன் பின் அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் அங்கே வனாந்திரத்தில் 40 ஆண்டுகளாக இருக்கும்படிக்கு அவர் விட்டு விட்டார். அவர்கள் திராட்சை தோட்டங்களை நாட்டினார்கள். பழத்தைப் புசித்தார்கள். மனைவிகளை விவாகம் செய்தனர், பிள்ளைகளை வளர்த்தனர். அந்த பழைய சந்ததி மரித்து வேறொரு சந்ததி வரும் வரைக்குமாக அவ்விதமாக அவர்கள் இருந்தனர். நாற்பது ஆண்டுகள் கழித்து, அவர்கள் கடக்க வேண்டிய தூரமோ நான்கு மணி நேர பிரயாணமே, ஆனால் அவர்கள் அங்கே சென்று அடையத்தக்கதாக 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. பிறகு ஒரு புதிய தலைவன் யோசுவா வந்தான், அதன் பிறகு அந்த புதிய குழுவுடன் தேசத்திற்குள்ளாக சென்று அடைந்தனர். 16. இப்பொழுது, நாம் கண்ட இது, அழகான ஒரு நிழலாட்டமாக உள்ளதென்று நான் நினைக்கின்றேன். நீண்ட காலத்திற்கு முன்னர் பெந்தெகொஸ்தேயில் இருந்த நம் முற்பிதாக்கள் வளர்ந்தனர். அவர்கள் அந்த பழைய பொதுக்குழுவை, ஜெனரல் கவுன்சிலை அவர்கள் கொண்டிருந்தனர். அதிலிருந்து, ''அசெம்பிளீஸ் ஆஃப் காட்,'' சபையை உருவாக்கினர். அதிலிருந்து UPC- சபை வந்தது. பிறகு ''ஐக்கிய சபை,'' வந்தது இன்னும் பிற வந்தது, அவர்கள் ஸ்தாபனத்தின் மேல் ஸ்தாபனங்களை உருவாக்கி, சண்டை, சச்சரவு செய்து கொண்டிருந்தனர். தேவன், அவர்களை அப்படியே இருக்கும்படி விட்டுவிட்டார். அவர்கள் மனைவிகளை விவாகம் செய்தனர். பிள்ளைகளை வளர்த்தனர், அந்நிய பாஷையில் பேசினர், ஆவியில் சத்தமிட்டனர். ஆனால் இப்பொழுதோ ஒரு புதிய குழுவானது எழும்பி வந்தது உள்ளது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது இன்னும் சில நாட்கள் பிரயாணம் தூரம் மாத்திரமே இருந்தது. அவர்கள் கொண்டிருந்த இந்த எல்லா ஆசீர்வாதங்களும் அருமையானது தான். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். அந்த முழு தேசமே அவர்களுக்கு சொந்தமானதாகும். நாம் இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாக செல்ல ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, இந்த காரியங்களை நாம் பார்க்கும்படியாக கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. பாருங்கள்-? 17. பிரமிட் (Pyramid), கூர்நுனிக் கோபுரத்தைப் போன்று... அந்த கூர்நுனிக் கோபுரமானது எப்படி உருவாக்கப்பட்டு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா-? ஒரு கூர்நுனிக் கோபுர (Pyramid) கோட்பாடு அல்ல, இப்பொழுது, வெறும் ஒரு கூர்நுனி கோபுரம் மாத்திரம். 18. உங்கள் டாலர் நோட்டைப் பாருங்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சின்னம் ஒரு கழுகாகும். ஆம், அந்த மகத்தான கூர்நுனிக் கோபுரத்தின் மேல் "அந்த மகத்தான முத்திரை,” என்று ஏன் அது கூறுகிறது-? அது அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முத்திரையை விட மகத்தானதாக இருக்கிறது. அந்த மகத்தான முத்திரை, அந்த கவனித்துக் கொண்டிருக்கிற கண். 19. அந்த கூர்நுனிக் கோபுரத்தின் மேல் இருக்கின்ற அந்த தலைக் கல்லானது... அது புறக்கணிக்கப்பட்டது. அது கூர்நுனிக் கோபுரத்தின் மீது அது இருக்கவில்லை; இந்நாள் வரையும் கூட அது இல்லை - அந்தக் கல்லின் கல் என்று அவர்கள் உரிமை கோருகிறார்கள். ஆனால் அந்த தலைக்கல்லானது அதன் மேலே வைக்கப் படவே இல்லை. ஏன்-? ஏனோக்கு மற்றும் அங்கே ஆதி நாட்களிலே இருந்த அவர்கள், எகிப்திலே பிரமிடுகளை, கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டினார்கள். அதில் நாம் காண்பது என்னவென்றால் அந்த மூலைக் கல்லானது, அந்த தலைக் கல்லானது புறக்கணிக்கப்படும் என்று அவர்கள் அறிந்திருந்தனர் என்பதே. அவர்களுக்கு சுண்ணாம்புக் கலவை கூட தேவைப்படாத அளவிற்கு அந்த பிரமிட், கூர்நுனிக் கோபுரமானது மிகப் பரிபூரணமாக ஒன்றோடொன்று இணைக்கப் பட்டுள்ளது. ஒரு கல் இன்னொரு கல்லோடு மிக நெருக்கமாக இணையும் அளவிற்கு அது மிக நேர்த்தியான தொழில் நுட்பத்தோடு வெட்டப்பட்டு அக்கற்களுக்கிடையே ஒரு சிறிய பிளேடைக் கூட நீங்கள் வைக்கப்பட முடியாத அளவிற்கு அது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மேலெ ஏழும்பிக் கொண்டே இருக்கின்றது, ஆகவே இப்பொழுது அது மேலே எல்லாம் சமமாக செதுக்கப்பட்டு தலைக்கல் வரும் போது அதற்காக காத்துக் கொண்டு இருக்கிறது. 20. அந்த விதமாகத்தான் தேவன் தம்முடைய சபையைக் கொண்டு வந்தார். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தாவியின் அபிஷேகம், இப்பொழுது ஆவியானவரின் ஊழியம் - அது தான் வார்த்தையை உயிர்ப்பிக் கின்றது - சபையில் இருக்கின்ற அந்த ஊழியமானது சரியாக அவருடைய ஊழியத்தைப் போலவே இருந்தாக வேண்டும். 21. இதைப் போன்று தான்: இங்கே என்னுடைய கையில் நிழலானது இருக்கின்றது. நான் என் கையைக் காணாதிருந்து ஆனால் நிழலைக் காண்போமானால், அது ஒரு விதமான... அது மறையும் போது மங்கிக் கொண்டே சென்று விடுகின்றது. ஆனால் அது மிக மிக நெருக்கமாக ஆகி, எதிர்மறைப் பண்பும் (Negative, நெகட்டிவும்), நேர்ப்படிவமானதும் (Positive, பாஸிட்டிவ்வும்), ஒன்றாக சேர்ந்து இரண்டும் ஒரே காரியமாக ஆகும் வரைக்கும் நெருங்குகின்றது. 22. ஆகவே அதைப் போன்று தான் சபையும் வார்த்தையும் ஒன்றாக இருக்க வேண்டும் - இயேசுவும் தேவனும் சரியாக ஒன்றாக இருந்த நிலையைப் போல. தேவன், உலகத்தாரை கிறிஸ்துவுக்குள் தமக்கு ஒப்புரவாக்கினார். அதே போலத் தான் கிறிஸ்து வார்த்தையாலே அபிஷேகிக்கப்பட்டு எல்லாக் காரியத்தையும் நிறைவேற்றத்தக்கதாக சபையிலே இருந்தாக வேண்டும். அது தான் கடைசி காலத்திலே சபையின் மேலே வருகின்ற தலைக்கல்லாகும். அது லவோதிக்கேயா அல்ல - அதிலிருந்து வெளியே அழைக்கப்படுதலாகும்; சபையிலிருந்து வெளியே வருகின்ற ஒரு மணவாட்டியாகும், வேறு விதமாகக் கூறுவோமானால் சபையிலிருந்து வெளிவருகின்ற ஒரு சபையாகும். எகிப்திலே ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்தை அவர் வெளியே அழைத்தது போன்று. ஆகவே இப்பொழுது நாம் அந்த நாளிலே தான் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த மகத்தான காரியங்களுக்காக நாம் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம். 23. இப்பொழுது, நாளை மதியம் கர்த்தருக்குச் சித்தமானால், ஆராதனையின் இந்தப் பகுதியின் முடிவாக இருக்கப் போகின்றது. ஆகவே நாம் அதை முழுவதுமாக வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஒன்றாக ஆக்கப்போகிறோம். ஆகவே ஜெபிக்கப் பட விரும்புகின்ற எல்லாரும் வந்து ஜெப அட்டையைப் பெற்றுக் கொண்டு ஜெப வரிசையில் வரலாம். இப்பொழுது, நாங்கள் ஜெப அட்டைகளைக் கொடுக்கின்ற காரணம் என்னவென்றால் மக்களை வரிசைப்படுத்தவே. அப்படி அட்டைகள் கொடுக்கப்படவில்லை எனில் அவர்கள் இங்குமங்குமாக சுற்றி, சுற்றி வந்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்கள்... நாங்கள் ஜெப அட்டைகளை அவர்களுக்கு கொடுக்கின்றோம். நீங்கள் ஒரு ஜெப அட்டையைப் பெற்றுக்கொண்டு வரிசையில் வாருங்கள்; அப்பொழுது நீங்கள் காண்பீர்கள்... தேவனுடைய மகிமையானது சம்பவிப்பதை நீங்கள் காண்பீர்கள் என்று விசுவாசியுங்கள். அது மகத்தானதாக இருக்கும். 24. ஆகவே இப்பொழுது, நீங்கள் எங்களுக்கு செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் மற்றும் இங்கே இந்த ஊழியக்கார சகோதரர்கள் மத்தியில் நாங்கள் பெற்ற மகத்தான் வரவேற்பிற்காகவும் மற்ற எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 25. இப்பொழுது, நாளை ஞாயிற்றுக் கிழமையாகும், ஆகவே இந்த சபைகள் திறந்து இருக்கும். நாளைக் காலை இங்கே ஆராதனை இருக்காது. ஞாயிறு ஆராதனை இருக்கும். ஆகவே இங்கே வந்திருப்பவர்களாகிய நீங்கள்... இங்கே நம்முடன் இருப்பதற்காக என்னுடைய பிறந்த இடத்திலிருந்து வந்திருக்கும் சிலர், மற்றும் இங்கே குழுவில் சில நண்பர்கள் எனக்கு உள்ளனர். 26. இப்பொழுது, இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து உதவுகின்ற மனிதர், இவர்கள் தாம். இந்த விதமான கூட்டத்தை அவர்கள் விசுவாசிக்கின்றனர். நான் இந்த நகரத்தில் வாழ்ந்திருந்தால் அவர்களுடைய சபைகளில் ஒன்றைச் சார்ந்தவனாக இருந்திருப்பேன். நிச்சயமாக, ஏனென்றால் நான் விசுவாசிக்கின்ற அதே காரியத்தைத் தான் அவர்களும் விசுவாசிக்கின்றனர். நான் இங்கே வாழ்ந்து இருந்தால் அவர்கள் சபைகளில் ஒன்றில் நான் இருந்திருப்பேன். 27. இந்த வாரம் உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அளித்தவர்களாகிய நீங்கள், உங்களுக்கென ஒரு சபை வீடு இல்லையெனில் நீங்கள் அவர்களோடு சற்று பேசலாம் அல்லவா-? அவர்கள் இந்த அதே காரியத்தைத் தான் விசுவாசிக் கின்றனர். இல்லை என்றால் அவர்கள் இங்கே அதற்கு பிரதிநிதித்துவமாக உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டார்களே, பாருங்கள். ஆகவே அவர்கள் உங்களுக்கு நல்லதையே செய்வார்கள் என்பதில் நிச்சயமே. அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் விசுவாசிக்கும்படிக்கு அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆகவே நீங்கள் இன்னுமாக ஞானஸ்நானம் பெறவில்லை எனில் அவர்களிடம் கேளுங்கள். நீங்கள் இன்னுமாக பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அதைக் குறித்து அவர்களிடமாகக் கேளுங்கள், அப்பொழுது அவர்கள் நீங்கள் சரியாக கிறிஸ்துவிடம் செல்லத் தக்கதாக உங்களுக்கு உதவி செய்து, அவர், திரும்பி வரும் வரைக்குமாக பாதையில் உங்களை சரியாக மேய்த்து வழி நடத்துவார்கள். இப்பொழுது கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.. 28. ஆகவே இப்பொழுது... பிரஸ்பிடேரியன்கள் எப்பொழுதுமே எழுந்து நின்று பிறகு உட்காருவார்கள் என்று கூறப்படுவது உங்களுக்குத் தெரியும். நான் ஒரு பிரஸ்பிடேரியன் அல்ல; ஆனால் நான் விசுவாசிப்பதென்ன எனில் நாம் வார்த்தையை வாசிக்கையில் நாம் எழுந்து நிற்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனென்றால் நாம் எழுந்து நிற்பது என்பது தேவனுக்கு கனம் செலுத்துகின்ற ஒன்றாகும். அது நாம் கொடிக்கு வணக்கச்செயல் புரிவது அல்லது பற்றுறுதிப் பிரமாணம் அல்லது அதைப்போன்ற ஒன்றைச் செய்வது போலாகும். 29. ஆகவே இப்பொழுது, இன்றிரவிற்காக நான் ஒரு வேத வாசிப்பிற்காக பரி. லூக்கா 7-வது அதிகாரம் 36-ஆம் வசனத்திலிருந்து எடுத்துள்ளேன். 30. இப்பொழுது, இங்கே வந்து கொண்டு இருக்கையில், சர்வவல்லமை பொருந்திய ''தேவன் திரை நீக்கப்படுதலைக்,'' குறித்து என்னிடம் வந்த ஒரு கருத்தின் பேரில், இந்த வாரம் முழுவதுமாக நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் உடைய வேதாகமத்தையும் மற்றும் காரியங்களையும் பார்த்துக் கொண்டிருந்த போது, ஏறக்குறைய இருபது பக்கங்களுக்கு குறிப்புகள் எடுத்தேன். அதை எடுத்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக இங்கே என்னால் முடிக்க இயலாது. ஆகவே இன்று இரவிற்கான பொருளை நான் மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் - ஆகவே நான் பொருளை மாற்றியுள்ளேன். 31. இக்காரியங்களை நான் கூறுவது கர்த்தருடைய சித்தம் என்றே நான் விசுவாசிக்கின்றேன். இப்பொழுது பரி.லூக்கா 7-வது அதிகாரம், 36-ஆம் வசனம்; ...பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ, அவர் பரிசேயன் வீட்டிலே பந்தி இருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளத்தைலம் கொண்டு வந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுது கொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து, பரிமளத் தைலத்தைப் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட போது, இவர் தீர்க்க தரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும், இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் (நினைவில் கொள்ளுங்கள், சத்தமாக அல்ல; தனக்குள்ளாக) இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டு பேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாத போது, இருவருக்கும் கடனை மன்னித்து விட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்-? அதைச் சொல் என்றார். சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்து விட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி, ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி : இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன். நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச்சொல்லுகிறேன்; இவள் செய்த அநேகபாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி; அவளை நோக்கி : உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது கூடப்பந்தியிருந்தவர்கள்; பாவங்களை மன்னிக்கிற இவன் யார்-? என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ என்றார். 32. நாம் ஜெபிப்போமாக. 33. கர்த்தராகிய இயேசுவே, இந்த சம்பவமானது அநேக வருடங்களுக்கு முன்னாக நிகழ்ந்த ஒன்றாகும். இது ஒரு உண்மையான சம்பவமாகும்; ஏனென்றால் இது எங்களுடைய வேதாகமத்தின் பக்கங்களில் எழுதப்பட்டு உள்ளது - ஆகவே அது உண்மையான ஒன்று என்று எங்களுக்குத் தெரியும். ஆகவே இப்பொழுது இதை மறுபடியுமாக இன்றிரவு விளக்கமாக வர்ணிக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை, ஆனால் இதை இன்றிரவு மக்களுக்கு ஒரு செய்தியாக நாங்கள் அளிக்க உதவி செய்யும்; அதினாலே அவர்கள் தாமே நீர் இன்னுமாக அதே கர்த்தராகிய இயேசுவாக இருக்கின்றீர் என்பதை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் படிக்குச் செய்யும். நாங்கள் தேவைகள் உள்ள மக்களாக இருக்கின்றபடியால் நீர் தாமே உம்முடைய ஆசீர்வாதங்களை எங்கள் மீது இருக்கும்படியாக ஜெபிக்கின்றோம். கர்த்தாவே, நீர் எங்களுக்கு தேவையாயிருக்கிறீர். 34 இன்றிரவு நாங்கள் விசுவாசிக்கின்றோம், நீர் குருடர் பார்வையடையச் செய்வதையும், செவிடர் கேட்கும்படிச் செய்கிறதையும், சப்பாணிகள் நடக்கும் படிக்குச் செய்கிறதையும் மருத்துவர்களின் அறிக்கையின்படியே வெவ்வேறு நாடுகளில் வெவ்வோறு சமயங்களில் மரித்துப் போயிருந்த ஐந்து பேர்களை உயிரோடு எழுப்பினதையும் நாங்கள் கண்டாலும்... ஆனாலும் கர்த்தாவே, எனக்குத் தெரிந்த வரைக்கும் இன்றிரவு மிகவும் வியாதிப்பட்டிருக்கின்ற காரியமானது என்ன என்றால், பூமியிலே இருக்கும் சபையாகிய கிறிஸ்துவின் சரீரமே. அது மிகவுமாக வியாதிப்பட்டு உள்ளது. கர்த்தாவே இன்றிரவு அதை சுகப்படுத்தும். இங்கே உட்கார்ந்திருக்கின்ற இந்த பாகமானது- இங்கே டாம்பா-வில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற இக்கூட்டமானது, இந்த அருமையான மக்கள் கூட்டமானது - கர்த்தாவே, இன்றிரவு ஒவ்வொரு காயத்தையும் சுகமாக்கும். ஆவியானவர் தாமே இதை எங்களுக்கு அருளட்டும், இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில், அவருடைய கனத்துக்கும், இங்கே நாங்கள் பிரயாணப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இந்த நகரத்தில் அவருடைய மகிமைக்கும் கேட்கின்றோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். அதை நான் இப்பொழுது சில நிமிடங்களுக்கு அதை அழைத்தால்... ஒவ்வொரு இரவும் அவ்வாறே செய்ய நான் முயற்சிக்க வேண்டாம்... 36 உங்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவனாக இருக்கின்றேன், ஏன் என்றால் நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள், ஆகவே நான்... பிரசங்கத்தை எப்பொழுது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாமல், பிரசங்கிப்பதற்கென நீங்கள் மிக அருமையான ஒரு ஜனக்கூட்டம் ஆகும். அவ்விதமாக இருப்பது எதைச் செய்கிறது என்றால் நான் கூறுகின்ற வார்த்தைகளை நீங்கள் ஆகாரமாக உண்கிறீர்கள் அல்லது பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதை ஒரு ஊழியக்காரன் அறிந்து கொள்வதே. 37 நான் உங்களிடமாக வந்த போது... நான் வந்த போது நான் மிகவும் சோர்ந்து களைத்துப் போனவன். பாருங்கள், கிறிஸ்துமஸ் முதற்கொண்டு நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருந்து நேராக நான் மறுபடியும் ஆரம்பிக்கத் தக்கதாக டூஸ்ஸானுக்குச் செல்கிறேன். 38 அங்கிருந்து நேராக வந்து, கடந்த இலையுதிர்க் காலத்தில் வேட்டைப் பயணத்தில் நான் சென்றிருந்த போது கிறிஸ்துவினிடம் நான் வழி நடத்தின ஒரு செவ்விந்தியர் மரபினரின் முழு கூட்டத்திற்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கும் படியாக பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு செல்ல வேண்டும் - முன்னர் அவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர். அவர்களிடையே இருந்த ஒரு தாயார் சுகம் ஆக்கப்பட்டதினாலே அந்த முழு மரபினக் குழுவும் தங்கள் இருதயத்தை கிறிஸ்துவுக்கு அளித்தனர், மருத்துவர்களால் ,அந்தத்தாயை... யாராலும் அவளைத் தொடக்கூட முடியவில்லை. அவள் படுத்திருந்து மரித்துக் கொண்டிருந்தாள். பனி உருக ஆரம்பித்த உடனே நான் திரும்பி வரவேண்டுமென்று அவர்கள் விரும்பினர். பாருங்கள், அங்கே சீதோஷ்ணமானது பூஜ்ஜியத்திற்கு கீழே மைனஸ் 85-க்கு சென்று விடுகிறது. அதன் பிறகு, பனி உருகியது, ஆதலால் நான் எல்லாரையும் அங்கே அழைத்துச் செல்கிறேன், மற்றும் எல்லாரும்... 39 அலாஸ்கா நெடுஞ்சாலையின் மேலும் கீழும் உள்ள ஒரு பெரிய கூட்ட வேட்டையாடுபவர்கள் மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிப்பவர்கள் ஆகியோர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள எல்லாரும் என்னுடன் கூடுகின்றார்கள். ஒரு குறிப்பிட்ட கரடி எங்கே இருக்கும் என்றும், அதன் எடை எவ்வளவு இருக்கும் என்றும், அந்த மிருகம் எங்கே தங்கும் என்றும் அங்கே யார் இருப்பார்கள் என்றும், அவர்கள் என்ன அணிந்திருப்பார்கள் என்றும் அதைக்குறித்த ஒரு குறிப்பிட்ட தரிசனத்தைக் கர்த்தர் காண்பித்ததை அவர்கள் கண்டனர். அது சம்பவிக்கும் முன்னரே அதைக் குறித்துக் கூறினேன். அதற்கு அவர்கள், "அது... இந்த பிரதேசத்தில் அந்த விதமான காரியமானது கிடையவே கிடையாதே,” என்றனர். ஆகவே நாங்கள் நேராக அதனிடத்திற்குச் சென்றோம். அது வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சம்பவித்தது. என் அறையில் அவை வேட்டைப் பரிசுகளாக இன்றைக்கும் தொங்கிக்கொண்டிருக்கிறது, பாருங்கள். அவர்கள், "நாங்களும் கூட ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்புகிறோம்,” என்றனர். அவர்கள் மிகவும் கரடு முரடான மனிதர் என்பது உங்களுக்குத் தெரியும், எல்லா இடங்களிலும் அவர், வித்துக்களைக் கொண்டு உள்ளார். 40 இன்றிரவிற்கான என்னுடைய பொருள் "இயேசு தம்முடைய எல்லா சந்திப்பு திட்டங்களையும் காத்துக் கொள்கின்றார்,” என்பதே ஆகும். நாம் அதைக் குறித்துப் பேசுகையில் அதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நீண்ட நேரம் பேச மாட்டேன். இப்பொழுது, நீங்கள் அதைக் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், இன்றிரவு நம்மிடையே பிரசன்னமாக இருக்கின்ற இந்த ஒன்றை நீங்கள் என்றாவது ஒரு நாளிலே சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். 41 இப்பொழுது, இன்றிரவு நம்முடைய காட்சியமைப்பில் சூரியனானது ஏறக் குறைய மறைந்து இருக்கலாம். சூரியன் மறைகின்ற ஒரு நேரமாய் இருந்தது. இந்த செய்தி கொண்டு செல்பவன் நாள் முழுவதுமாக - ஒருக்கால் 2 அல்லது 3 நாட்களுக்கு ஓடிக் கொண்டு இருந்திருப்பான். அவன் இயேசுவை கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவர் சென்று கொண்டே இருந்தார், ஒருக்கால், ஏறக்குறைய தான் முதல் பெயர்செபா வரைக்குமாக பிரயாணம் செய்திருப்பார். 42 இயேசு தம்முடைய ஊழியத்தில் சென்று கொண்டே... தம்முடைய அற்புதங்களை அதிசயங்களையும் செய்வதற்கும், எல்லா மக்களும் ஒன்று கூடும் இடத்தில்... இங்கே பேசவுமே பிறகு அங்கிருந்து வேறெங்காவது ஒரு இடத்திற்கு செல்ல புறப்பட்டு விடுவார். ''நான் இன்னொரு பட்டினத்திற்கு செல்ல வேண்டும்,” என்று சென்று விடுவார். 43 அது அவருக்குக் கடினமான ஒரு நேரமாக இருந்தது. ஒருக்கால் அவர் கப்பர்நகூமிற்குச் சென்று விட்டிருப்பார், அவர்கள், ''என்ன, அவர் இந்த இடத்தை விட்டுச் சென்று ஒரு வாரம் ஆகிவிட்டதே. அவர் சரியாக எங்கே சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கோ ஓரிடத்திற்கு அவர் சென்றிருப்பார்,” என்று கூறினர். ஆகவே அவர்... ஓ, அவர் மிகவும் களைத்துப் போயிருந்தார். அவருடைய தலை மயிரானது வேர்வையினால் ஈரமாக இருந்தது. அந்த செய்தி கொண்டு செல்பவன் இயேசு பேசிக் கொண்டு இருந்த குழுவிற்கு உள்ளாக வந்து நின்றான். 44 அங்கே இயேசுவும் கூட மிகவும் களைத்துப் போயிருந்தார். நாள் முழுவதுமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். அதிகமாக அவர் பேசி இருந்ததால் அவருடைய வாய் உலர்ந்து போய் இருந்தது. அவருடைய கைகள் சற்று வெலவெலுத்த நிலையில் காணப்பட்டது. சூரியன் மறைய ஆரம்பித்த அந்த நேரத்தில் அவருடைய கண்கள் மிகவுமாக சோர்ந்து போன நிலையில் இருந்தது. அவன் இயேசுவைக் காண விரும்பினான். அவன், அவருக்கு ஒரு செய்தியைக் கொண்டு வந்திருந்தான். 45 அங்கே இயேசு தன்னைச் சுற்றிலும் 12 மனிதரைக் கொண்டிருந்தார், அவர்கள் மக்களை அவரிடம் இருந்து சற்று தூரமாக வைத்து இருந்தனர், ஏனென்றால் அப்படி இல்லையென்றால் மக்கள் கூட்டம் முழுவதுமாக வந்து அவரை நெருக்கி அவர் மீது விழுவர். ஆகவே அவர்கள்... (எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக நான் இதை ஒரு நாடக அமைப்பில் அமைந்துள்ளேன்) ஆகவே இங்கே இயேசுவின் மனிதரை நாம் பார்க்கையில்... செய்தி கொண்டு வருபவன் அந்தக் கூட்டத்திற்கு உள்ளாக வந்திருப்பான், அவன் பிலிப்பிடம் வந்திருப்பான். அப்போது பிலிப்பு இப்படியாகக் கூறி இருப்பான், “ஐயா (அவன் ஒரு வாலிபன்), போதகரை சந்திக்கும்படிக்கு உங்களை அனுமதிப்பதில் நிச்சயமாக எங்களுக்கு விருப்பம் தான், ஆனால் அவர் மிகவும் களைத்துப் போயிருக்கின்றார். நாங்கள் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனென்றால் அவர் சோர்ந்து கீழே விழும் வரைக்கும் பேசிக் கொண்டே இருக்கின்றார். நிறைய கூட்டங்களை நாங்கள் முடித்து வந்து உள்ளோம், சமீபத்தில்... என்னை மன்னியுங்கள், அவரை சந்திக்க அனுமதி அளிக்க முடியாது என்று நான் நினைக்கின்றேன்” என்றான். 46 அதற்கு அந்த செய்தி கொண்டு செல்பவன், "மத சம்பந்தமான அதிகார மட்டத்தில் இருக்கும் ஒரு மிக முக்கியமான நபரிடமிருந்து ஒரு குறிப்பை நான் கொண்டு வந்து உள்ளேன். அது உங்கள் போதகருக்கான ஒரு அழைப்பு ஆகும். ஏனென்றால் இந்தக் குறிப்பை நான் தனிப்பட்ட விதத்தில் அவரிடமாக அளித்து அந்தக் குறிப்பை அவர் தனிப்பட்ட விதத்தில் பெற்றுக் கொள்ளச் செய்வதே எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் கட்டளையாகும்,” என்று கூறினான். 47 ஆகவே அதற்கு பிறகு தான் அவனை கர்த்தராகிய இயேசுவிடமாகக் கொண்டு சென்றார்கள். கர்த்தராகிய இயேசு அவனைப் பார்த்துக் கொண்டு இருக்கையில்; ஒருக்கால் அவர் பேசிக் கொண்டு இருந்த பிரசங்கப் பீடத்திலிருந்து வந்து கொண்டு இருக்கலாம், அவர் பேசத்தக்கதாக சீஷர்கள் அந்த பிரசங்க பீடத்தை அமைத்து இருந்தனர் - அவர் பார்த்துக் கொண்டிருந்த போது, ஆம் அவர் அந்த வாலிபனைப் பார்த்துக் - கொண்டிருந்தார். அவனை அவருக்குப் பிடித்து இருக்கும். 48. அந்த வாலிபன் அவரிடமாக, "ஐயா நான் ஒரு தூதைக் கொண்டு வந்து உள்ளேன். இன்னின்ன நகரத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள ஒரு மனிதன் இருக்கின்றார். அவர் ஒரு பரிசேயர் ஆவார், மதங்களிலே மிகவும், கண்டிப்பானதாகிய பரிசேயரைச் சேர்ந்தவர். அவர் ஒரு இரவு ஆகாரத்தை - ஒரு அருமையான ஒரு தருணத்தை, ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தி இருக்கின்றார். நீங்கள் ஒரு சிறப்பு விருந்தினராக அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகவே அவர்... அந்த விருந்தில் கலந்து கொள்ள அநேகர் விரும்புகின்றனர், ஆனால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் உங்களைத் தேர்வு செய்துள்ளார். மூன்று நாட்களாக இந்த பிரதேசம் முழுவதுமாக உங்களைக் கண்டு பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். இங்கே உங்களை சந்திக்கும்படிக்கு நான் நிச்சயம் மகிழ்ச்சி கொள்கிறேன், ஐயா, இதோ, அவரிடத்தில் இருந்து வரும் இந்த அழைப்பின் குறிப்பை உங்களிடமாக அளிக்கின்றேன்,” என்று கூறினான். 49 அப்பொழுது அவர் அந்த குறிப்பை எடுத்து அதை வாசித்தார். ஆகவே இந்த குறிப்பிட்ட பரிசேயன் ஒரு பெரிய விருந்தை நடத்த இருக்கின்றான் என்றும் அந்த விருந்திற்கு அவர் வந்து, அவனுடனே ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தான் என்று நாம் காண்கின்றோம். ஆகவே இயேசு, சில நிமிடங்களுக்கு நின்று அந்த வாலிபனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.... 50 அவருக்கு நேரமே இல்லாமல், எப்போதும் போல ஓயாமல், பணியில் இருந்தார், நீங்கள் அவருக்கு அழைப்பே கொடுக்க முடியாது. அவர் தீர்மானிக்கிறபடியே அவர் வருவார். சூழ்நிலை என்னவாயிருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல, அவர் வருவார். 51 "நான் அங்கே வருவேன் என்று நீ போய் உன் எஜமானனுக்கு சொல். ஒரு குறிப்பிட்ட நாளிலே, ஒரு குறிப்பிட்ட சமயத்திலே நான் அங்கே இருப்பேன் என்று கூறு,” என்று அவர் கூறினார். 52. அப்பொழுது அந்த செய்தி கொண்டு செல்லும் பணி செய்பவன் புன்னகை செய்து திருப்தி அடைந்தவனாக திரும்பிச் சென்று, தன் எஜமான் யாரிடமாக இந்தச் செய்தியை அளிக்க விரும்பினானோ அதை அந்த நபரிடம் வெற்றிகரமாக அந்த செய்தியை அளித்துவிட்ட, அந்த நல்ல செய்தியை தன் எஜமானனுக்கு அறிவிக்க மலையின் கீழ் நோக்கி ஓடத் துவங்கினான். 53. செய்தி கொண்டு சென்று கொடுக்கும் பணி செய்பவனைக் குறித்து என்ன-? எப்படியாக அவனுடைய காரியமாக இருந்தது-? அவன் என்ன செய்தான் என்பதை தெரிந்து தான் செய்தானா-? ஒருக்கால் தன்னுடைய வாழ்க்கையிலே முதல் முறையாக இயேசுவினுடய பிரசன்னத்தில் நின்று இருப்பான், ஆனால் அவன் தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்பைக்கூட கேட்கவே இல்லை. அந்த தருணத்தை அவன் உபயோகப்படுத்தவில்லை. 54. ஓ, இன்றைக்கும் ஜனங்களிடமாக அதே விதமாகத்தான் இருக்கின்றது. அநேக முறை அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை உணர்கின்றார்கள். ஆனால் மன்னிப்பு கேட்பதே கிடையாது. 55. ஆம் அது... ஒருக்கால் அவனுக்கு இன்னொரு தடவை அந்த தருணமானது அளிக்கப்படாது; மன்னிப்புக் கேட்க அவனுக்கு அளிக்கப்பட்ட கடைசி தருணத்தை அவன் மறுத்து விட்டான். எப்படி அவ்விதமாக அவன் செய்திருக்க முடியும்-? இந்த ஆள் அந்த செய்தியைக் கொண்டு வந்த போது அவன் காரியத்தைக் காணாத படிக்கு மிகவுமாக அவன், சுற்றிலும் போர்த்தப்பட்டு இருந்தான், அதினாலே அவன் தேவனுடைய குமாரனுடய பிரசன்னத்தில் இருந்து மன்னிப்பு கேட்க தவறி விட்டான் அல்லவா, அது எல்லாம், ஒரு வணிகப் பிரகாரமாகவே நடத்தப்பட்டது. 56. ஆகவே உங்களுக்குத் தெரியுமா, இன்றைக்கு உள்ள ஜனங்களைப் போலவே தான் அது இருக்கின்றது. சபை... கிறிஸ்து வணிகப்பிரகாரமான ஒரு காரியமாக ஆகி விட்டார் அல்லது சபையைச் சேர்ந்து கொள்வதானது ஒரு சமூகப் பிரகாரமான காரியமாக ஆகிவிட்டது, அப்படிச் செய்வதானது இன்னும் சிறிது அதிக சமூக அந்தஸ்தை அல்லது அதைப் போன்றதை அதிகமாக அளிக்கின்றது. உங்கள் அக்கம் பக்கத்தினர் மத்தியில் நீங்கள் அந்தஸ்தில் சற்று உயர்கின்றீர்கள். ஒரு பாவி செய்ய வேண்டியதைப் போலவே உண்மையாகவே வந்து மனந் திரும்புவதானது இல்லவே இல்லை. சபைகளில் அநேக முறை மக்கள் சரியாக கிறிஸ்துவின் பிரசன்னத்தில் கொண்டு வரப்படுகின்றனர், பிறகு அவர்கள் திரும்பச் சென்று இந்த, செய்தி கொண்டு வரும் பணி செய்கிறவன் செய்தது போலவே அவர்கள் காரியத்தைச் செய்து விடுகின்றனர். 57. ஓ, அவன் தன்னுடைய முழங்காலிலே விழுந்து... அவர் யார் என்பதை அறிந்த உடனே அவன், “போதகரே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைக் கொண்டு வந்து உள்ளேன். ஆனால் முதலாவதாக நீர் என்னை மன்னிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்,” என்று கூறி இருப்பானானால், அந்த விதமான அணுகு முறையானது, சரியான ஒன்றாக இருந்திருக்கும். அதற்குப் பிறகு செய்யத் தக்கதாக வேறே வேலை இருக்குமானால், அதை பிற்பாடு செய்திருக்கலாம். ஆகவே முதலாவதாக அவன் தன்னுடைய ஆத்துமாவை தேவனுடனே. சரி செய்ய வேண்டும். 58 அதன் காரணமாகத் தான் மிக அதிக அளவில் சுகமளித்தலானது அல்லது சுகமளித்தல் என்று கூறப்படும் காரியமானது தோல்வியில் முடிகின்றது. ஏன் என்றால் முதலாவதாக மக்கள் சுகமளித்தலுக்கே தயாராக இல்லை; அவர்கள் தங்கள் தவறுகளை அறிக்கை செய்ய மாட்டார்கள். ''உங்கள் குற்றங்களை ஒருவருக்கு ஓருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்” என்று வேதம் கூறுகின்றது. ஆகவே அதைச் செய்வதற்கு நமக்கு விருப்பமில்லை. சுகமளித்தலை எடுத்து முன்னே சென்று பிறகு பின்னே சென்று நாம் செய்து கொண்டு இருந்ததை செய்வோமானால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் முதலாவதாக, உண்மையாக வந்து தேவனுடன் தங்களைச் சரி செய்துக் கொள்வது என்பதான காரியமானது, அதைச் செய்ய மக்களுக்கு விருப்பம் கிடையாது. அதனால் தான் மக்கள் அநேகர் அதே நிலையில் நடந்து வந்து, அதே விதமாகவே திரும்பிச் செல்கிறார்கள், அவர்கள் சுகமடைவதில்லை. அந்த எல்லா காரியங்களைக் குறித்தும் தேவனுக்குத் தெரியும். 59. இப்பொழுது, செய்தி கொண்டு செல்லும் வேலை செய்யும் இந்த ஆள் ஒரு மிக அருமையான காரியத்தைச் செய்தான் என்று நாம் நினைக்கலாம். "அவனுடைய இடத்தில் நான் மாத்திரம் இருந்திருப்பேனானால்-!, நான் மாத்திரம் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாகச் சென்று அவருக்கென ஒரு செய்தியைக் கொண்டு சென்று இருந்தால், முதலாவதாக நான் செய்வது என்னவென்றால்...” என்று நாம் நினைக்கலாம். நீங்கள் என்ன செய்வீர்கள்-? அங்கு சென்று அதைக் குறித்து என்ன கண்டறிய வேண்டும் என்று உங்கள் ஸ்தாபனம் கூறியிருப்பதைக் குறித்து தான் நீங்கள் அக்கறை செலுத்துவீர்கள் அல்லவா-? அல்லது பரலோகம் எப்படி அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று காண நீங்கள் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு இருப்பீர்களா-? அல்லது அவருடைய சமூகத்தில் நீங்கள் கூறுகின்ற முதல் காரியமானது, “தேவனாகிய கர்த்தாவே, பாவியான என்னை மன்னியும்” என்று இருக்குமா. நீங்கள் செய்ய வேண்டிய சரியான காரியமாக அது இருக்கும். 60. இப்பொழுது, அந்த நபர் வந்து திரும்பிச் செல்கையில் இயேசு அவனை கவனிக்கையில், இந்த விதமாக அவருடைய மனதில் தோன்றியிருக்கும்... “ஏன் அந்த பையன் அந்த விதமாகச் செய்யவில்லை-?” அவன் யாரைச் சந்தித்தான் என்பதை கவனிக்காததினாலா-? 61. இதை நான் கூறுவேனாக. அவபக்தியானதாக அல்ல. இதை நான் கூறட்டுமா-? இந்த கூட்டத்தில் அல்லது வேறெந்த கூட்டத்தில் நடப்பதினால் அல்ல, ஆனால் நான் நினைப்பது என்னவென்றால் இன்றைக்கு காரியமானது அப்படித் தான் இருக்கின்றது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிகிற உணர்வு நிலை மக்களுக்கு இல்லை, வேதாகமமானது சரியாக அடையாளம் காட்டப்படுவதை அவர்கள் காண்கின்றனர். அது யாராக இருக்கிறது என்று அறிந்து கொள்கின்ற உணர்வு நிலை அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஒன்றைக் கண்டு, “ஓ, அது மிகவும் அற்புதமானது, அது மிக அருமையான ஒன்றாகும். நான்..." என்று தான் கூறுவார்கள். ஆனால் அது என்னவாய் இருக்கிறது என்று அறிகின்ற உணர்வு நிலையில் நீங்கள் இல்லை. அப்படி அறிகின்றதான காரியமாக இருக்குமானால், மனந்திரும்புதலானது நடந்து கொண்டு இருக்கும், மக்கள் அழுது கொண்டும், கதறிக் கொண்டும் இருப்பார்கள். நகரத்தில் இரு பெரும் எழுப்புதல் உண்டாகி இருந்தது உங்களில் பாதிப் பேர் காலைப்பொழுதிற்கு முன்னதாகவே தாழ்ப்பாளிடப் பட்டு இருப்பீர்கள். அது சரியே, அது என்ன என்பதைக் குறித்ததான உணர்வு நிலையானது நமக்கு இருக்குமானால், ஆனால் நாம் அநேக முறைகள் கடந்து சென்று, அதைக் குறித்த உணர்வு நிலை நமக்கு இல்லாது இருப்பதால் அதைக் காணத் தவறுகிறோம். 62. அந்தப் பையன் அதை உண்மையாகவே உணர்ந்திருக்க மாட்டான் என்று நான் நினைக்கிறேன். அந்த மகத்தான நிர்வாகியாகவும், இளவரசனாகவும் அல்லது மிக பக்தியான மனிதனாகிய இந்த பரிசேயன் மத்தியில் அவன் வளர்க்கப்பட்டு இருந்தான். அவன் அந்த பரிசேயனுடன் வளர்க்கப்பட்டபடியால் அவன் அந்த மதத்தின் பட்சயமாகவே சார்ந்திருந்தான். அந்த பரிசேயன் இயேசுவைப் பார்த்து நகைத்து அவரைக் குறித்து பரியாசம் செய்தான் அல்லது அவர்கள் செய்த விதமாகவே அவனும் செய்தான், அந்நாளிலே அவர்கள் அவ்விதமாகச் செய்தனர். அவன் அந்த தகவலை வெறுமனே போட்டு விட்டுச் சென்றான். அது அவன் கொண்டு போய் சேர்க்க வேண்டிய ஒரு சாதாரண தகவலே தவிர மற்ற ஏதும் இல்லை. அவர் அங்கே உட்கார்ந்திருந்தார். செய்தியை கொண்டு செல்லும் வேலையைச் செய்த அந்த மனிதன் அவருடைய பிரசன்னத்தில் இருந்தான். அவனைப் பொறுத்த வரையில் காரியமானது அவ்வளவு தான். அவருடைய பிரசன்னத்தில் இருந்தது அவனைப் பொருத்த வரையில் அதில் எந்த ஒரு அர்த்தமும் கிடையாது. ஆனால் அவர் யார் என்று அறிகின்ற உணர்வு நிலையில் அவன் இருந்து இருப்பானானால், அந்த பையன் மரித்தோரிலிருந்து இன்று எழுந்து, இந்த வாரத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் உட்கார்ந்து இருப்பானானால், அதைக் குறித்து ஏதாவதொன்றைச் செய்திருப்பான். நம் எல்லாரையும் குலுக்கி இருக்கும் ஒரு சாட்சியை உடையவனாக இருந்திருப்பான். ஆனால் அவரை அறிகின்ற உணர்வு இல்லாமல் அக்கறை அற்றவனாக இருந்தான். 63. இப்பொழுது, இங்கே இந்த காட்சியில் ஏதோ ஒரு தவறானது காணப்படுகிறது. அது வெறுமனே... அது சரியான ஒன்றாக இல்லாது இருந்தது, அந்த பையன் களைத்துப் போய் சோர்வுற்று நடந்து சென்றதை இயேசு பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் அந்த முழு காட்சி அமைப்பானது - அங்கே ஏதோ தவறு இருந்தது. அந்தப் பரிசேயர் இயேசுவை வெறுத்தனர். அவர்கள் அவரை வெறுக்கையில் அவர்கள் எந்த முகாந்திரத்தைக் கொண்டு இயேசுவை சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ள அழைத்திருந்தனர்-? அந்த பரிசேயன் தன் சட்டைக் கைப் பகுதியில் ஒன்றை பின்னர் பயன்படுத்துவதற்காக இரகசியமாக மறைத்து வைத்திருந்தான். (பழங்கால சூதாட்ட உச்சரிப்பு ஆகும்) ஏதோ ஒரு தந்திரத்தை, வைத்திருந்தான். அவன் பின்னர் உபயோகப்படுத்த ஒரு தந்திரத்தை இரகசியமாக வைத்திருந்தான். ஏனென்றால் அவர்கள் இயேசுவை வெறுத்தனர். இப்பொழுது, சரியாக அப்பொழுதே இயேசு அதை அறிந்து கொண்டார் என்று நான் நம்புகிறேன். பாருங்கள், மக்கள் காரியங்களை ஒருங்கே கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும். 64. என் தாயார் “ஒரே இறகுள்ள பறவைகள் ஒன்றாக ஒருங்கே காணப்படும்” என்னும் பழமொழியைக் கூறுவது வழக்கம் (birds of featherflock together, என்னும் கருத்திற்கு ஒரே குணாதிசயம் உள்ள மனிதர் ஒருமித்து ஒன்றாகச் செயல்படுவர் என்று அர்த்தம் - தமிழாக்கியோன்), பருந்துகளும் புறாக்களும் ஒன்றாகச் சேர்ந்து உண்பதை உங்களால் காணமுடியாது. அவைகள், அவைகளில் ஒன்று செத்ததைத் தின்னும் வகையாகும். புறாவால் பருந்தின் உணவைத் தின்ன முடியாது. ஏனென்றால் புறாவிற்கு பித்த நீர்(பை) இல்லை. அதினால் பருந்தின் உணவை ஜீரணிக்க முடியாது. 65. ஆகவே ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருந்தாலொழிய உங்களால் விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் ஒன்றாகக் காண முடியாது. ஏதோ ஒரு தவறு இருந்தது. அந்த பரிசேயன் ஒரு தந்திர காரியத்தைச் செய்யும்படிக்கு வைத்து இருந்தான். அதை அவன் இயேசுவிடமாக பிரயோகிக்க விரும்பினான். 66. இப்பொழுது, நீங்கள் ஜனங்களை எடுத்துக் கொள்வீர்களானால், இளம் வயதினரை, வாலிபப் பிள்ளைகளை எடுத்துக் கொள்வீர்களானால் வயதானவர் களோடு இருக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் இடையே பொதுவான காரியங்களைக் கொண்டிருப்பார்கள். திருமணமான இளம் தம்பதியரும் தங்களிடையே பொதுவான காரியத்தைக் கொண்டு இருப்பார்கள். வயதான மக்களை பார்ப்போமானால் அவர்களும் சிறு பிள்ளைகளுடன் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் பொதுவான ஒன்று இருக்கும். 67. ஒரு சிறு பெண் எப்பொழுதுமே தன்னுடைய பாட்டியுடனே இருப்பதை நீங்கள் காண்பீர்களானால், அங்கே ஏதோ ஒன்று தவறாக இருக்கின்றது. அவர்களுக்கு இடையே மிக அதிக வருடங்கள் வித்தியாசம் இருக்கின்றது. ஒன்று, அவள் பாட்டியின் செல்லப் பிள்யைாக இருக்க வேண்டும். அல்லது பாட்டி ஒரு பை நிறைய மிட்டாய்களை வைத்திருப்பாள் என்று தான் இருக்கும், பாருங்கள். ஏதோ காரியங்கள் இருக்க வேண்டும். எனக்கும் ஒரு பேரப் பிள்ளை உள்ளது, ஆகவே எனக்குத் தெரியும். பாருங்கள், ஏதோ ஒரு காரியமானது இருந்தாக வேண்டும். அந்த சிறு பெண் எப்போதும் பாட்டியுடனே இருக்கிறது என்றால், பாட்டி ஒரு பை நிறைய மிட்டாய் வைத்திருக்க வேண்டும் அல்லது வேறெதாவது இருக்க வேண்டும். ஆகவே இந்த பரிசேயன் ஏதோ ஒரு தந்திர காரியத்தை வைத்திருந்தான். 68. அவர்கள் எல்லோரும் ஒன்று கூடியிருந்த ஒரு ஊழியக்காரர் கூட்டத்தில் இது எல்லாம் சம்பவித்தது. அந்த கூட்டத்தில் மையத் தலைப்பாக தன்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்ளும் அந்த நபரைக் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று, அவர்கள் விசுவாசிக்கவில்லை, ஏன் என்றால் தங்கள் போதகங்களைக் கொண்டு பார்க்கையில் அவர்களைச் சார்ந்திருந்து அவர்களோடே இசைந்து செல்லாத ஒரு மனிதனை அவர்களால் தீர்க்கதரிசியாகக் காண முடியவில்லை. ஆகவே இந்த ஊழியக்காரர் கூட்டத்தில் அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று தீர்மானித்தனர். 69. ஆகவே அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று இந்தப் பரிசேயன் அவர்களுக்கு நிரூபிக்க விரும்பினான். அவர்களுடைய தீர்மானம் நிச்சயமானதே என்று நிரூபித்து, இயேசு அந்த நகரத்திற்கு வருகை தருவதற்கு முன்னதாகவே சபை மக்களுக்கும், அந்நகர மக்களுக்கும், அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று காண்பிக்க அவன் விரும்பினான். அதற்கு முன் இயேசு அந்த நகரத்திற்கு வந்ததே கிடையாது. ஆகவே அவர் வருவதற்கு முன்னரே, அவர் யார் என்று வெளிப் படையாக காண்பித்துவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்த ஆவியைப் பாருங்கள்-! அது இன்னுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறது: அவர் யாரென்று வெளிக் காண்பித்து விட வேண்டும், அவர் அங்கே நடத்த இருக்கின்ற கூட்டத்திற்கு இடர் உண்டாக்கி தடைசெய்ய ஏதாவதொன்றைச் செய்யவேண்டும் 70. ஆகவே நாம் இங்கே காண்பது என்னவென்றால், "நான் ஒரு இரவு ஆகார விருந்தை ஏற்பாடு செய்வேன், அதற்கு எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி, நகரத்தில் இருக்கும் எல்லா மக்களையும் இங்கே வரவழைப்பேன், அப்பொழுது அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று நாம் நிரூபிப்போம். நாங்கள் அதை நிரூபிப்போம்” என்று அந்த பரிசேயன் கூறினான். 71. ஆதலால், இந்த காரியதைச் செய்வதானால் அவன் சிறிது உயர்வு; ஒருக்கால் அவன் குருக்களில் ஒருவனாக ஆகிவிடலாம் அல்லது ஏதாவது ஒரு பதவி பெறலாம் என்று அந்தப் பரிசேயன் நினைத்து இருக்கக்கூடும். அப்படிச் செய்வதன் மூலம் தன்னுடைய குழுவில் மிகப்பிரபலம் வாய்ந்தவனாக ஆகியிருப்பான். அந்த விருந்தில் அவன் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து அவன் பரியாசம் செய்து அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று நிரூபித்து அவரை தர்மசங்கடமான ஒரு நிலைக்கு தள்ள வேண்டும் என அவன் விழைந்துக் கொண்டிருந்தான். அப்படிச் செய்வானானால் அவன் பரிசேயர்கள் மத்தியில் ஒரு பெரிய ஆளாக, ஒரு மிக மகத்தான மனிதனாக போற்றப்படுவான். 72. இப்பொழுது, நாம் காண்பது என்னவென்றால் அந்த தகவல் கொண்டு செல்லும் பணி செய்யும் நபர் திரும்ப வந்து தன்னுடைய எஜமானிடம், ''நான் அவர் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தேன், அவர் உத்தரவாதமும் அளித்தார். அவர் இங்கே இருப்பார். ஏனென்றால் அவர் நடந்து கொண்ட விதமானது அவர் கண்டிப்பாக இங்கே இருப்பார் என்றே காண்பித்தது. அவர் கட்டாயம் விருந்தில் பங்கெடுப்பார்,” என்று கூறினான் என்று காண்கிறோம். அது சரி. 73. இப்பொழுது அந்த பரிசேயன் ஒரு குறிப்பிட்ட தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். எல்லாம் சரியாக இருக்கும் நேரத்தில் அந்த விருந்தை அமைக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஒருக்கால் இன்றிரவு நாம் நம்முடைய இந்த நாடகத்தில் என்ன காண்கிறோம் என்றால், அவன் விருந்தை அமைத்த. நேரமானது திராட்சைகள் பழுத்திருந்த காலமாக இருந்தது. திராட்சைப் பழம் விளைகின்ற காலத்தில் நீங்கள் பாலஸ்தீனாவில் அல்லது கலிபோர்னியாவில் இருந்தது உண்டானால் மிகப்பெரிய திராட்சைப்பழக்குலைகள் சாறு ஒழுகின்ற அளவிற்கு பழுத்துக் காணப்படுவதை நீங்கள் காணலாம் அங்கே அந்த பிரதேசம் முழுவதிலும், பள்ளத்தாக்கிலும் அந்த திராட்சைப் பழங்களின் நறுமணத்தால் நிறைந்து காணப்படும். அந்த விருந்தை எப்பொழுது நடத்த வேண்டும் என்று அந்தப் பரிசேயனுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே அவன் அந்த குறிப்பட்ட காலத்தை, அவன் குறித்தான். ஒரு குறிப்பிட்ட நாளிலே அவர்கள் இந்த விருந்தை நடத்த இருந்தனர். 74. முடிவாக அந்த விருந்தானது நடக்க இருந்த அந்த நேரமானது வந்தது, அப்பொழுது அந்தப் பரிசேயன் எல்லோரும் வரும்படியாக அவர்களுக்கு அழைப்பு கொடுத்தான், பிரசித்திப்பெற்ற எல்லாரையும், எல்லா கழகங்களையும் மற்றும் பிறரையும், தான் வசித்த நகரத்தில் இருந்த, எல்லாரும் கூடி பழகுகின்ற இடமாகிய கிளப்புகள் (Clubs) எல்லாவற்றிற்கும் அழைப்பு விடுத்தான். அவனுடைய மகத்தான அரண்மனைக்கு அவர்கள் எல்லாரும் வர இருந்தனர். அந்த அரண்மனை மிக உயர்ந்த ஒரு இடத்தில் அமைந்து இருந்தது. அங்கே நகரத்தில் ஒரு பெரிய சொத்தாக அது இருந்தது. ஆகவே இந்த விருந்தானது நடத்தப்பட வேண்டிய தருணமானது வந்தது. அங்கே இருந்த முற்றமானது மெருகேற்றப்பட்டது, மேஜைகள் எல்லாம் சீராக அமைக்கப்பட்டன, விருந்தின் அறையும் ஆயத்தப் படுத்தப்பட்டது. 75 அதன் பிறகு, அவன் தன்னுடைய விருந்தாளிகள் வரும் போது அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். விருந்து வைப்பவர் எவரும் அதைச் செய்வர். ஆகவே அவன் குதிரைத் தொழுவ பணியாளர்கள் என்று அழைக்கப்பட்ட சில பணியாளர்களை அவன் வேலைக்கு அமர்த்தினான், ஏன் என்றால் அவனுடைய விருந்து வைப்பவர், இல்லை, அவனுடைய விருந்தாளிகளில் சிலர் இரதங்களில் வருவார்கள், சிலர் கோவேறுக் கழுதையின் மேலேறி வருவார்கள், சிலர் நடந்து வருவார்கள். ஆகவே, ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கின்ற எவருமே தங்களுடைய விருந்தாளிகளை உபசரிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆகவே இந்த பரிசேயன் எல்லாக் காரியத்தையும் ஏற்பாடு செய்தான், தன்னுடைய எல்லா வேலைக்காரரையும் ஏற்பாடு செய்து அவர்களை தயாராக இருக்கும்படிக்குச் செய்தான்; குதிரைகளைக் கொண்டு சென்று வைப்பதற்கான குதிரை லாயத்தில் குதிரைத் தொழுவ பணியாளர்களை அழைத்து வந்தான், அக்குதிரைகளுக்குத் தேவையான தீவனங்களும் மற்றும் பொருட்களையும் தயாராக வைத்தான். 76 பிறகு அழைப்பிதழ்களை வாங்கிப் பார்க்கும் பணியைச் செய்ய வேண்டிய அறைகளைக் காப்பவர்கள் அல்லது ஒரு வாயிற்காப்போனை அவன் ஏற்பாடு செய்திருந்தான். ஏன் என்றால், ஒருவன் அழைக்கப்பட்டு இருந்தாலொழிய விருந்தில் பங்குக் கொள்ள முடியாது - அதனால் அழைப்பிதழ்களைப் பார்க்க வாயிற்காப்போன் நியமிக்கப்பட்டான். விருந்தில் யார் யார் பங்கெடுக்கப் போகின்றனர் என்பவர்களுடைய பெயர் பட்டியலை அவன் வைத்து இருந்தான். அவர்கள் வரும் போது தங்கள் பெயர் இருப்பதை அடையாளம் காட்டுவர், பிறகு அவர்களால் உள்ளே செல்ல முடியும். 77. பிறகு, அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று... அவர்கள் சிறிது நேரத்திற்கு என்ன செய்வார்கள் என்பதை நாம் சற்றுப் பார்ப்போமாக, நான் கிழக்கத்திய நாடுகளில் இருந்து உள்ளேன், உங்களில் அநேகர் கூட அங்கே இருந்து இருக்க வகை உண்டு, அவர்கள் எப்படி அதைச் செய்வார்கள் என்று. நான் கவனித்து இருக்கின்றேன். அது மிகவும் கவனத்தைக் கோருகின்ற ஒன்றாகும். நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களானால், காரியங்களெல்லாம் சரியாக செய்து முடிக்கப்பட்ட பிறகு, அவர்கள் வாசலண்டை வருகையில் முதலாவதாக, வாயிற்காப்போன் அவர்கள் யார் என்று கேட்பான். அப்பொழுது அவர்கள் தாங்கள் யார் என்று கூறுவர். அவன் தன்னிடம் உள்ள பெயர் பட்டியலைப் பார்த்து அங்கே பெயர் இருப்பதைக் காண்பான். அவன் அதை உறுதிப்படுத்தும்படிக்கு பெயர் பட்டியலை சரி பார்ப்பான். பிறகு அவன் செய்வது என்னவென்றால், அவன் விருந்தாளி உடைய கோலை எடுத்து அதை மூலையில் வைப்பான். விருந்தாளி நடந்து வந்து இருந்தால் அல்லது ஒரு குதிரையில் வந்திருந்தால், குதிரை தொழுவப் பையன்கள் அவன் வந்திருக்கும் குதிரைகளை ஓட்டிப் பத்திரமாகக் கட்டி குதிரை லாயத்தில் நிறுத்தி வைப்பார்கள். 78. இப்பொழுது அடுத்ததாக விருந்திற்கு அழைக்கப்பட்ட அந்த மனிதன் செய்வது என்னவென்றால் அவன் விருந்து அளிக்கப்படும் மண்டபத்திற்குள்ளே செல்கிறான். அங்கே மண்டபத்திற்கு உள்ளே வீட்டு வேலையாட்கள், கால்களைக் கழுவும் வேலை செய்யும் பணியாளர்கள் அங்கே இருந்தனர், மிகக் குறைந்த சம்பளத்திற் கான வேலை அதுவாகும், காலைக் கழுவும் பணியாள். 79. அதைக்குறித்து சற்று சிந்திப்போமானால் - நாம் நம்மை ஏதோ ஒரு பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்கிறோமே - நம்முடைய கர்த்தர் பூமியிலே தம்மை ஒரு கால்களைக் கழுவும் பணியாளராக அடையாளப்படுத்திக் கொண்டார். சரியாக அதைத் தான் அவர் செய்தார். ஆனால் நாமோ நம்மை ஒரு பெரிய நபராகக் கருதிக் கொள்கிறோம்-! நாம் இங்கே பள்ளிக்குச் சென்று சிறிது கல்வியைப் பெற்றுக் கொள்கிறோம், சில பெரிய வார்த்தைகளை உச்சரிக்கும்படியாக அவைகளைக் கற்கிறோம், பிறகு திரும்பி வந்து கோட்டு சூட்டுகளை அணிந்து வெளியே சென்று டாக்டர், முனைவர் பட்டம் பெற்றவர் என்றும், ரெவெரெண்ட், சங்கை என்றும் மற்றும் பெரியவர் என்றும் அழைக்கப்பட விரும்புகிறோம். 80. சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரிய அருங்காட்சியகத்தில் (Museum) இருந்தேன். 150-பவுண்ட எடை (69-கிலோ - தமிழாக்கியோன்) கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் என்னென்ன இரசாயனங்கள் இருந்தன என்பதைக் குறித்த ஒரு மதிப்பீட்டை நான் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒரு மனிதன் உருப்படுத்தப்படுகையில் அவனுடைய மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா-? அவனுடைய மதிப்பு 84-சென்டுகள் (Cent) மட்டுமே. பிறகு நீங்கள் 84 செண்ட் மதிப்புள்ளவர்களின் மீது 10 டாலர் மதிப்புள்ள ஒரு தொப்பியை அணிந்து, 500 டாலர் மதிப்பு மிக்க ஒரு மிங்க் கோட்டை அணிந்து கொண்டு, உங்கள் மூக்கை மேலே உயர்த்திக் கொண்டு நிற்கின்றீர்கள். ஒரு மழை பெய்யுமானால் அது உங்களை மூழ்கடித்து விடும். ஆகவே, உங்கள் சரீரமானது வெறும் 84 சென்ட் மதிப்புள்ளதாக இருக்கையில் (சரியே-!) நீங்கள் உங்களையே ஒரு பெரிய ஆளாகக் கருதிக் கொண்டு உங்கள் சரீரத்தைப் பேணி காத்துக் கொள்கிறீர்கள். ஆனால் கோடிக் கணக்கான மதிப்பு வாய்ந்த உங்கள் ஆத்துமாவைக் குறித்து உங்களுக்கு அக்கறை இல்லை, அல்லது நீங்கள் அதைக் குறித்த எந்த ஒரு செயல்பாட்டையும் செய்வது இல்லையே-! அந்த வித்தியாசத்தை அந்தக் கருத்தை எப்படி நாம் பெறப் போகிறோம்-! 81. இப்பொழுது, இந்தக் காலைக் கழுவும் பணியாளன் அவர்கள் உடைய பாதங்களைக் கழுவும் வேலையைச் செய்ய வேண்டியவனாக இருந்தான். இப்பொழுது... நீங்கள் பாலஸ்தீனாவில் பிரயாணம் செய்யும் போது, அந்த பாலஸ்தீன அங்கியானது ஒரு தளர்ந்த துணியாக இருக்கும். அது கீழே தொங்கும். ஆகவே அவர்கள்... மிருகங்களும் மனிதரும் ஒரே அடிச்சுவட்டில் தடம் பின்பற்றி நடந்து வருவார்கள் - மிருகங்களும் கூட அந்த அடிச்சுவட்டிலேயே தடம் பின்பற்றி நடந்து வரும்... அப்பொழுது அந்த மிருகங்கள் நடந்து வந்த தடத்தில் இருந்து புழுதியானது மேலெழும்பி வரும், அந்தப் புழுதியில் ஒருவிதமான துர்நாற்றம் இருக்கும். அவர்கள் கால்களின் வியர்வையில் அப்புழுதி கலந்து விடும். அவர்கள் உடைய கால்களில் பாதரட்சைகளைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த பாதரட்சைகள் வியர்வையினால் நனைந்து ஈரமாகி, பிசுபிசுப்பானதாக இருக்கும். 82. ஆகவே, அந்த மிருகங்கள் நடந்த பாதையில் இருந்து வரும் இந்த துர்நாற்றமானது, தளர்ந்து கீழே பாவாடையைப் போலத் தொங்கிக் கொண்டு இருக்கும் இந்த பாலஸ்தீன வஸ்திரம் மண்ணில் படும் போது இந்த புழுதி அந்தத் துணியில் ஒட்டிக் கொண்டு அவர்களுடைய பாதத்தில் பட்டு அவர்களுடைய கால்கள் முழுவதுமாகப் பரவி விடும். அந்த மிருகங்கள் நடந்து சென்ற அந்த தடப் பகுதியைப் போலவே இவர்களுடைய கால்கள் துர்நாற்றம் அடிக்கும். ஆகவே அந்த பரிசேயர்கள் வைத்திருந்த வீடுகளுக்குள் வரும் போது (அந்த பரிசேயன் பெர்சியா நாட்டிற்கு ஆட்களை அனுப்பி அந்த அருமையான உயர்-ரக கம்பள விரிப்பு களையும் மற்றவைகளையும் வாங்கி இருந்தான்) முழுவதும் துர்நாற்றம் நிறைந்தவனாக உள்ளே வந்து, விருந்து வைப்பவன் முன்பாக நிற்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே அந்த துர்நாற்றத்தைப் போக்க ஒரு வழியை அவர்கள் வைத்திருந்தார்கள்; அவர்கள் கால் கழுவும் பணியாளன் ஒருவனை வேலைக்கு அமர்த்தி இருப்பார்கள், அவன் அங்கே தங்கி இருந்தான். 83. நீங்கள் உள்ளே வந்தவுடனே உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆள் குதிரைகளை அல்லது உங்கள். கால்நடை பிராணியை தொழுவத்திற்குக் கொண்டு சென்று அவைகளுக்குத் தீவனத்தைப் போடக் கொண்டு சென்றிருப்பான் (அவ்விதம் செய்ய ஒரு கூட்டம் பையன்கள் இருந்தனர்). அங்கே அந்த வாயிற்காப்போன் அவன் கையில் வைத்திருக்கும் பெயர் பட்டியலைப் பார்த்து உங்களை அடையாளங் கண்டு கொள்வான். பிறகு கால் கழுவும் பணியாளன் உங்கள் கால்களைக் கழுவுவதற்கு தயாராக நீங்கள் இருப்பீர்கள். 84. அப்பொழுது நீங்கள் உள்ளே கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கே உட்கார்ந்து உங்கள் காலை வைக்கையில் அவன் பாதரட்சையை இழுத்து கழற்றி அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைப்பான், அதனால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று அவன் அறிந்து கொள்ள ஏதுவாகும். இங்கே மற்றுமொரு பகுதியில் அவன் ஒரு சிறிய காலணியை வைத்திருப்பான். அவன் உங்கள் கால்களை கழுவி முடித்த பிறகு - தூசியை முழுவதுமாக கழுவி முடித்து சுத்தம் செய்து நீங்கள் சோர்வு நீங்கி இதமாக உணரும்படிக்குச் செய்து, பிறகு துணியினாலான இந்த சிறிய காலணியை அவன் அணிவிப்பான். 85. நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானங்களில் அதைக் காணலாம். இரவு நேரங்களில் நீங்கள் அணிந்துக்கொள்ளும்படிக்கு அவர்கள் உங்களுக்கு அதை அளிப்பார்கள், நீங்கள்... பெண்கள் தங்கள் நீண்ட காலுறைகளை அணியாது இருக்கையில் தங்கள் கால்களில் அணிந்திருக்கும் அந்த சிறிய காரியங்களைப் போல, என் மனைவியும் மகளும் சில நேரங்களில் அதை அணிந்திருப்பதை நான் காண்கிறேன். அது ஒரு சிறிய... அதை என்னவென்று அழைக்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் உங்கள் கால்களில் போட்டுக் கொள்ளும் போது அது காலுறையின் (Socks) பாதப் பகுதியைப் போன்று இருக்கும். 86. அந்த காலணி அதைப் போன்ற ஒன்றாக இருந்திருக்கும், "அது சிறிது உயர் தரமானதாக இருக்கும், ஏனென்றால் நீங்கள் அந்த அழுக்கான பாதரட்சையை போட்டுக் கொண்டு அங்கே போடப்பட்டிருந்த அந்த கம்பள விரிப்புகளில் நடக்க விரும்ப மாட்டீர்கள். ஆகவே, உங்கள் பாதங்கள் கழுவப்படும். பிறகு நீங்கள்... அடுத்ததாக உங்களுக்கு அணிவிக்கப்படுவது என்னவென்றால்... இந்த சிறிய பூட்ஸை, காலணியை உங்கள் காலுக்கு அணிவிப்பார்கள், அதை நான் பூட்டி என்று அழைப்பேன். 87. அதற்குப் பிறகு என்ன இருக்குமென்றால், அங்கே தன்னுடைய தோளின் மேல் ஒரு துடைக்கும் துவாலைத் துணியுடன் ஒரு மனிதன் நின்றிருப்பான், அவன் தன்னுடைய கையில் தைலத்தை வைத்திருப்பான். அது ஒரு வாசனைத் தைலம் ஆகும். இப்பொழுது, அந்த பாலஸ்தீன சூரியனின் கதிர்கள் நேரடியாக உங்கள் கழுத்தில் படும்போது, அது உங்கள் சருமத்தை சுட்டுப் புண்ணாக்கும், இன்னொரு காரியம் என்ன என்றால், அங்கே மேலெழும்பும் அந்த தூசியானது சில சமயங்களில் அவர்களுடைய தாடிகளிலும் தலைமயிர்களிலும் ஒட்டிக்கொள்ளும். ஆகவே இங்கே ஒரு மனிதன் தன் கையில் வாசனைத் தைலத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறிய பாத்திரத்தைப் பிடித்து நின்று இருப்பான். நீங்கள் அந்த தைலத்தை உங்கள் கையில் எடுத்து உங்கள் முகத்திலும், கழுத்திலும் பூசிக் கொள்ளலாம், பிறகு இந்தத் துணியைக் கொண்டு துடைத்து உங்கள் தலை முடியை வாரி சரி செய்து கொள்ளலாம். இப்பொழுது சில சமயங்களில்......, 88. இந்த தைலமானது கிடைப்பதற்கு மிகவும் அரிதான ஒன்றாகும், ஏனென்றால் அது மிகவும் அருமையான வாசனையைத் தருகின்ற ஒன்றாகும். அவர்கள் அதை மிக உயர்ந்த மலைகளில் வளருகின்ற காட்டு ரோஜாச் செடியிலிருந்து அதை எடுப்பார்கள். பூவின் இதழ் விழுந்த பிறகு அந்த ரோஜா எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அதன் மேல் ஒரு சிறிய பழம் போல வளரும். அவர்கள் அதை எடுத்து பிழிந்து இந்த வாசனை தைலத்தை செய்வார்கள். சேபா, நாட்டு ராஜஸ்திரீ சாலமோனைக் காண வந்த போது, இந்த அருமையான தைலத்தை தன்னுடன் கொண்டு வந்து, சாலமோனுக்கு கொடுத்தாள் என்று கூறப்படுகின்றது. அது கிடைப்பதற்கு மிக அரிதான ஒன்றாகும். அந்த மலைகளுக்குள் செல்வதே மிக கடினமான ஒரு காரியமாகும். 89. அதற்குப் பிறகு, அவர்கள் அந்த தைலத்தை எடுத்துத் தங்கள் தாடியிலும் கழுத்திற்குக் குறுக்கிலும் பூசிக் கொண்டு அந்த துணி துவாலையால் துடைத்து தங்களை சுத்தம் செய்த பிறகு, விருந்து வைப்பவனை - தங்களுக்கு அழைப்பு கொடுத்த நபரை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். பாருங்கள். தங்கள் உடல் முழுவதுமாக தூசியினால் நிறைந்து அந்நிலையில் உள்ளே செல்வது சரியல்ல என்று அவர்கள் உணர்ந்து இருப்பார்கள். அதன் காரணமாகத் தான் கால் கழுவுதல் இருந்தது, புரிகின்றதா. அவர்கள் மேல் துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது. அதனால் தான் அவர்கள் கால்கள் கழுவப்பட வேண்டியிருந்தது. அவர்கள் அணிந்து இருந்த அந்த பெரிய பாதரட்சைகளை அப்படி அணிந்து கொண்டு அந்த உயர்-ரக கம்பள விரிப்புகளில் நடப்பது என்பது சரியானதாக இருக்காது என்று அவர்களுக்குத் தெரியும். அப்படியே அந்நிலையில் செல்வார்களானால் அவர்கள் தர்ம சங்கடமாக உணருவார்கள். ஆனால் இப்பொழுது அவனுடைய பாதமானது கழுவப்பட்டு விட்டது. அவன் சுத்தம் பண்ணிக் கொண்டு தயாராக இருக்கின்றான். அந்த தைலத்தினால் பூசப்பட்டதினால் அவனின் மீது நறுமணம் வீசுகின்றது. தலை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுதல் என்று அவர்கள் அழைக்கின்றனர், அந்த தைலத்தை தங்கள் முகத்தில் பூசி பிறகு ஒரு துணியைக் கொண்டு அதைத் துடைத்து விடுகின்றனர். இப்பொழுது அவன் புது மலர்ச்சி கொண்டவனாக அவன் இருக்கின்றான். 90. இப்பொழுது அடுத்ததாக அவன் செய்வது என்னவென்றால், அவன் தனக்கு அழைப்பை விடுத்திருந்த விருந்து அளிப்பவனை சந்திக்கின்றான். தன் உடல் முழுவதுமாக தூசியால் நிறைந்து விருந்தளிப்பவனை சந்திக்க அவனுக்கு விருப்பமே இராது. அதனால் தான் அவன் சுத்தம் செய்து கொண்டு புதுமலர்ச்சி உடனே இப்பொழுது ஆயத்தமாக இருக்கின்றான். 91. பிறகு விருந்தளிப்பவன் கதவண்டையில் அவனைச் சந்திப்பான், முத்தமிட்டு வரவேற்பளிக்கும் ஒரு வித்தியாசமான முறையை அவர்கள் கொண்டிருந்தனர். அது இன்னும் சில சபைகளில் கைக்கொள்ளப்படுகிறது. அவர்கள் கரத்தைப் பிடித்து இந்த விதமாக திருப்பி (ஆண்கள்) ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வர். இந்த விதமாக தோளின் மேல் கைப்போட்டு ஒருவருக்கு ஓருவர் கழுத்துப் பகுதியில் முத்தம் கொடுப்பார்கள். ஆகவே விருந்தளிப்பவன் உங்களை முத்தமிடுவானானால், நீங்கள் மகிழ்ந்து வரவேற்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம். அது வரவேற்பின் முத்தமாகும். இப்பொழுது, உங்கள் சரீரம் முழுவதுமாக தூசியினால் நிறைந்த நிலையில் விருந்தளிப்பவன் உங்களுக்கு முத்தமிட நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே வரவேற்பின் முத்தமானது உங்களுக்கு அளிக்கப்படும் முன்னர் நீங்கள் முழுவதுமாக சுத்தமாக்கப்பட வேண்டும். ஆனால் ஓ-! உங்களுக்கு வரவேற்பின் முத்தமானது அளிக்கப்பட்ட பிறகு நீங்கள் முழுக்க முழுக்க சகோதரனாகி விடுவீர்கள். அவ்வளவு தான். உங்களாலே... இன்றைக்கு நீங்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வரவேற்கப்படும் நல்லுணர்வை பெறுவீர்கள் ஆனால் நீங்கள் அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகவே உணர்வீர்கள். அவன் உங்களுக்கு வரவேற்பின் முத்தத்தை அளித்திருந்தான். 92. யூதாஸ் மாய்மாலமாக இயேசுவுக்கு முத்தம் கொடுத்தது உங்களுக்கு நினைவு இருக்கிறதா-? பாருங்கள், விருந்தளிப்பவன் அவனுக்கு முத்தமளித்தால் அது வரவேற்பாகும். அது ஒரு நண்பனின் முத்தமாக இருந்தது - உதடுகளில் முத்தம் அல்ல, ஆனால் கழுத்தில் முத்தமளித்தல் - அவன் விருந்தாளிகளை கழுத்தில் முத்தமளித்தான். 93. இப்பொழுது, நாம் கவனிப்பது என்னவென்றால், அப்படிச் செய்யும் போது நீங்கள் உள்ளே செல்லலாம் என்று அர்த்தம். நீங்கள் குளிர்சாதன பெட்டியைத் திறந்து (காட்சியானது இன்றைய நாளாக இருக்குமானால்) ஒரு பெரிய சாண்ட்விச் தின்பண்டத்தை நீங்களே எடுத்துக் கொண்டு கட்டிலின் மேல் படுத்துக் கொண்டு அதை சாப்பிடுவதானது - நீங்கள் அந்த வீட்டில் வரவேற்கப்பட்டிருக்கிறீர்கள், அதனால் நீங்கள் தாராளமாக அந்த வீட்டில் இருக்கின்றீர்கள். "வருக, வருக, உள்ளே வாருங்கள், அது... நீங்கள் வீட்டில் நல்லுணர்வுடன் இருக்கின்றீர்கள். அந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினராகவே உணர்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் வீட்டினுள் இருக்கிறீர்கள். 94. இப்பொழுது, உங்களுக்கு இந்த காரியங்களெல்லாம் செய்யப்படும்படிக்கு பார்த்துக் கொள்கிறீர்கள், தைலத்தால் அபிஷேகிக்கப்படுகிறீர்கள், எல்லாவற்றையும் சுத்தமாக்கிக் கொள்கிறீர்கள், அப்பொழுது நீங்கள் முத்தமிடப்பட்டு வரவேற்கப் படுகிறீர்கள். பிறகு நீங்கள் உள்ளே சென்று அங்கே விருந்தில் எல்லாருடைய கரங்களை குலுக்குகிறீர்கள். உங்கள் நண்பர்களை சந்திக்கிறீர்கள். விருந்தளிப்பவன் உங்களுக்கு முத்தமிட்டு உங்களை உள்ளே வரவேற்று உள்ளான். ஆகவே இப்பொழுது, நீங்கள் விடுதலையாக தாராளமாக அங்கே இருக்கலாம். அங்கே இருக்கின்றவர்களில் ஒருவராக உங்களால் உணர முடிகிறது. உங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சுத்தமாக்கப்பட்டு உள்ளீர்கள். உங்களுக்கு வரவேற்பின் முத்தம் அளிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது நீங்கள் அவர்களில் ஒருவராகி விட்டீர்கள். உள்ளே சென்று ஐக்கியம் கொள்ளுங்கள். 95. இப்பொழுது, இந்த சமயத்தில் அங்கே பின்புறத்தில் ஒரு தனி இடத்தில் இரும்பு சட்டத்தில் ஆட்டு இறைச்சியை வைத்து நெருப்பில் சுட்டுக் கொண்டு இருந்தனர் என்று நான் கற்பனை செய்து பார்க்கின்றேன். அதன் வாசனையானது பிரதேசம் முழுவதுமாக பரம்பியிருந்தது, அதனோடு கூட திராட்சைப்பழங்களின் வாசனையும் மற்றவையும் இருந்தன. அங்கே சுற்றிலும் வேலியண்டையில் ஏழை மக்கள் அந்த வாசனையால் நாவூறிக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே அழைக்கப்படவில்லை, இந்த விருந்திற்கு புகழ் பெற்றவர் மாத்திரமே அழைக்கப்பட்டு இருந்தனர். ஆகவே விருந்தானது மிக அருமையாக நடந்து கொண்டு இருந்தது. எல்லாமே மிக அருமையாக நடந்தேறிக் கொண்டிருந்தது - முழு வீச்சில் நடந்துக்கொண்டிருந்தது. 96. இப்பொழுது, அந்த பரிசேயனும் மற்றும் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் கண்ணாடி குவளைகளை, டம்ளர்களின் முனைப்பகுதியை ஒருவருக்கொருவர் மிருதுவாக உரசி, அங்கே அச்சமயத்தில் பாலஸ்தீனாவில் இருந்த உடல்நலத்திற்கு அருமையானதாக இருந்த மிகச் சிறந்த திராட்சைப்பழ ரசத்தை அருந்திக் கொண்டு இருந்தனர் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தபடியால், அவர்களால் அதை வாங்க முடிந்தது. அவர்கள் ஒவ்வொருவரும், பெண்கள் தங்கள். அருமையான ஆபரணங்களுடன் இருந்தனர், அப்பெண்கள் அங்கே மூலையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர், அங்கே சுவரோர மெத்தை இருக்கையில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர், அது அந்நாளின் வழக்கமாக இருந்தது; ஆண்கள் திராட்சைரசம் பருகிக் கொண்டே பேசிக் கொண்டு மகிழ்ந்டு இருந்தனர்; ஆசாரியனும் மற்றும் எல்லா ரபீக்களும் மற்றும் எல்லோரும் ஒரு மகத்தான தருணத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். விருந்தானது மிக அருமையாக முழு வீச்சில் நடந்துக் கொண்டிருந்தது. 97. ஆகவே அப்பொழுது இயேசுவானவர் - அவர் வழக்கம் போல ஓய்வுக்கு இடம் இல்லாமல் அலுவல் மிக்கவராக இருந்தார், அவருடைய ஊழிய அட்டவணை யானது தொடர்ந்து நீண்டுக் கொண்டே இருந்தது - அவர் எப்போதுமே தம்முடைய சந்திப்பு திட்டங்களை (appointments) காத்துக் கொள்கிறார். நீங்கள் அதன் மேல் நம்பிக்கை வைத்து காத்து இருக்கலாம். அவர் தம்முடைய சந்திப்பு திட்டத்தை காத்துக் கொள்கிறவர், ஆவார். 98. இப்பொழுது, அங்கே அறைக்குள்ளாக நோக்கிப் பார்த்து என்ன நடக்கிறதென்று சற்று நாம் பார்ப்போம். அங்கே ஒரு பரிசேயன் தன்னுடைய குவளையில் ரசத்தை உறிந்து குடித்துக் கொண்டு “ரபீ என்ன ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியுமா-?” என்று கூறிக் கொண்டு இருந்தான், அந்தப் பெரிய சம்பாஷணை ஆனது தொடர்ந்துக் கொண்டே இருந்தது, வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைக் குறித்தும் மற்றவற்றைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர். அங்கே விருந்தானது முழு வீச்சில் நடந்துக் கொண்டிருந்தது. அது ஒரு மகத்தான விருந்தாக இருந்தது. 99. ஆனால் கவனியுங்கள். அங்கே இயேசு யாராலும் கவனிக்கப்படாதவராக சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டிருந்தார். தாம் வாக்கு கொடுத்த தம்முடைய சந்திப்பு திட்டத்தை அவர் காத்துக் கொண்டார். ஆகவே அவர் அங்கு வந்தார். அவர் எப்போதுமே தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். அவர் தம்முடைய எல்லா வாக்குத் தத்தங்களையும் நிறைவேற்றுகிறார். ஆனால் அவரைக் கவனியுங்கள். அவர் அழுக்கு நிறைந்தவராக அழுக்காக அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தார். அப்படிக் கூறுவதை நான் வெறுக்கிறேன். அவ்விதம் கூறுவது என்னைக் கொன்று போடுகிறது. பாருங்கள், அவருக்கு அழைப்பு அளிக்கப் பட்டு இருந்த போதிலும், அவருடைய பாதம் அழுக்காக இருந்தது, அவர் வாசனைத் தைலத்தால் அபிஷேகிக்கப்படவில்லை, அவருக்கு வரவேற்பின் முத்தமானது அளிக்கப்படவில்லை. 100. அது நம்முடைய நவீன எழுப்புதல்களைப் போன்று தான் இருக்கின்றது. (ஃப்ரெஞ்ச் பாஷைக்காரர்கள் அவரை "ஜெசு,” என்று அழைக்கின்றனர். அழுக்கான பாதத்துடன் “ஜெசு,”) உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா-? விருந்திற்கான அழைப்பு அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது, அவரும் அங்கே வந்து உள்ளார். அதோ அங்கே அவர் இருக்கின்றார். எப்படியோ ஒரு வழியில் அவர் உள்ளே வந்தார். கவனிக்கப்படாத நிலையில் அங்கு இருந்தார். அங்கே யாராலும் கவனிக்கப்படாத ஒரு தனிமை மிக்க மனிதனாக அங்கே அவர் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். நம்முடைய நவீன எழுப்புதல் கூட்டங்களிலும், விருந்துகளிலும், மத சம்பந்தமாகக் கூடி வருதல் என்று அழைக்கப்படுகிற காரியங்களில் புதிதான சூழ்நிலையில் எப்படி ஒருவர் தடுமாற்றமாகக் காணப் படுகின்றாரோ அதே போல தான் அவர் அங்கே இருந்தார். 101. ஒரு புதிய சூழலில் தடுமாற்றம் கொண்டிருக்கும் ஒருவனைப் போன்று அங்கே அவர் இருந்தார், யாருமே அவர் இருப்பதைக் கண்டு கொள்ளவே இல்லை. இயேசுவானவர் அந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அங்கே இருந்த அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் மற்ற காரியங்களில் மிக பரபரப்பாக இருந்தார்கள். ஆனால் அவர் அங்கே வந்த போதோ அவருக்கு வரவேற்பு கூட அளிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தார். 102. அங்கே கால்களைக் கழுவிக் கொண்டிருந்த பணியாளனுக்கு என்ன ஆயிற்று-? அவருடைய காலைக் கழுவும் அந்த தருணத்தை அவன் எப்படி நழுவவிட்டான்-? எனக்கு மாத்திரம் அந்த தருணமானது கிடைத்திருந்தால் மிக அருமையான ஒன்றாக இருந்திருக்கும். அதை நான் விரும்புகிறேன். ஓ என்னே-! அவர் வர இருக்கின்றார் என்று மாத்திரம் நான் அறிந்து இருப்பேனானால், நான் அங்கே நின்று கொண்டு அவருக்காக காத்திருப்பேன். அவருடைய வருகைக்கு நான் தயாராக இருந்திருப்பேன். எப்படி அவன் அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டான்-? அந்த கால் கழுவும் பணியாளனை மிகவுமாக நாம் கடிந்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் நாமும் கூட அதே காரியத்தைச் செய்து அதை அறியாமல் இருப்போம், பாருங்கள். அவன் அவரைத் தவற விட்டான். ஓ. என்னே-! 103. கவனியுங்கள். இன்றைக்கு நம்முடைய அழைப்புகளுக்கும் கூட அவர் வருகின்றார். அவர் நம்மிடையே வருகின்றார். அதைக்கூற எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் நான் அதைக் கூறியாக வேண்டும். அன்று அவர் மக்களுடைய பார்வையில் எப்படி அழுக்காக அங்கே உட்கார்ந்து காணப்பட்டாரோ, அதே விதமாகத் தான் நம் மத்தியில் அவர் அவ்விதமாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளார். அது முற்றிலும் சரியே - அவரை பரிசுத்த உருளையர் என்றும் மற்ற பெயர்களைக் கொண்டும் அழைக்கின்றனர். ஆனாலும் நாம் ஒரு எழுப்புதலுக்காக கூக்குரலிட்டுக் கொண்டு இருக்கிறோம். அவர் வருகின்றார். அவர் வந்து நிற்கின்ற போது, அந்த விருந்தில் அவர்கள் அவருக்கு என்ன செய்தனரோ அதே போலத் தான் நாமும் அவரைக் கவனிக்காமல் இருந்து விடுகிறோம். 104. யாரோ ஒருவர் தேவனுடைய ஆவியினால் எழும்பி "ஆமென்” என்று கூச்சலிடும் போது அல்லது அந்த விதமாகச் செய்யும் போது அல்லவென்றால் இயேசு அந்த வழியாகக் கடந்து செல்லும் போது அப்படிச் செய்தால்... என்ன ஆகும் தெரியுமா, அவர்கள் சபையிலிருந்து வெளியே தூக்கி எரியப்படுகின்றனர். ஆம், அப்படிக் கூறுவதானது சபைக்கு மிகப் பயங்கரமான அவமானம் என்றும், மக்களுக்கு அவமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்; ஆம், இயேசு தாமே அந்த வழியாக கடந்து சென்றார். 105. அவர் வந்து வார்த்தையை அடையாளம் காண்பித்து, அப்போது அவர் செய்தது போல இன்றைக்கும் அவர் செய்வதைக் காணும் போது இன்று மக்கள் "அது குறி சொல்லுதல் ஆகும், ஏதோ ஒரு மனோதத்துவம் ஆகும் அல்லது ஏதோ ஒரு தீய ஆவியாகும்” என்று கூறுகின்றனர். அங்கே அவர் அழுக்கு படிந்தவராக உட்கார்ந்த் இருந்தாரோ அதே போலத் தான் மக்களின் முன்னிலையிலும் அவர் அழுக்காக இருக்கின்றார் - தேவனுடைய வார்த்தையாகிய இயேசு. ஆனால் நாமோ அதைக் குறித்து ஒன்றுமே செய்வதில்லை. நாம் நம்முடைய ஸ்தாபனத்திலோ அல்லது நம்முடைய சமுதாய அந்தஸ்திலோ மிகுந்த ஈடுபாடுள்ளவர்களாக உள்ளோம். அவருடைய நாமத்தைக் கொண்டு நாம் அழைக்கப்படுவதில் வெட்கம் கொள்கிறோம். கூறப்போனால் நாம் இயேசுவைக் குறித்து வெட்கமடைகின்றோம். 106. அவர் அழுக்காக இருந்தபடியால் அவரைக் குறித்து அவர்கள் வெட்கம் அடைந்தார்கள். அவ்விருந்தில் இருந்த விருந்தாளிகளுக்கு அவர் யார் என்று தெரியாது இருந்தது. அவர் மிகவும் அழுக்காக இருந்தபடியினால் அவரைக் குறித்து வெட்கம் அடைந்து இருந்தனர். 107. அதே போன்று தான் இன்றைக்கும் உள்ளது. அவர்கள் இன்னுமாக அவரைக் குறித்து வெட்கம் கொண்டு உள்ளனர். ஏனென்றால் அவரை எந்தெந்தப் பெயர் வைத்து அழைக்க முடியுமோ அப்படி எல்லாம் அழைத்து அவர் மேல் அசுத்தத்தைக் கொட்டிக் குவிக்கின்றனர். அதை பரிசுத்த உருளையர்கள் என்றும் மற்றும் அவர்கள் மனதுக்கு தோன்றுகின்ற எல்லா அவப்பெயர்களையும் கொண்டு அழைக்கின்றனர். அதைக் குறித்து யாரும் ஒன்றுமே செய்வதில்லை. அதோ அவர் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பாதம் அழுக்காக உள்ளது, யாருமே கண்டு கொள்ளாத ஒரு மனிதாக விருந்தில் இருக்கின்றார், மதப் பிரகாரமான கூட்டத்தில் யாராலுமே கவனிக்கப்படாமல் அசட்டை செய்யப் பட்டவராக இருக்கின்றார். அவர் அழைக்கப்பட்டுள்ளார். ஒரு எழுப்புதலுக்கு வர வேண்டும் என்று அவரை நாம் கேட்கின்றோம். அவர் வரும் போதோ, அங்கே விருந்தில் எப்படி அவரை நடத்தினார்களோ அதே விதமாகத் தான் அவரை நாம் நடத்துகிறோம், அவர் வந்து நம்மை அடையாளம் காண்பித்து உள்ளார். ஆனால் அவரை வரவேற்று உரையாட யாருக்குமே விருப்பமில்லை. 108. "அவர் தாமே ஒரு விதமான ஒரு தந்திர வித்தையோ அல்லது அல்லது, அல்லது ஏதோ ஒரு விதமான அற்புதத்தைச் செய்து இருப்பாரானால், அவர் பிலாத்துவிற்கு முன்னால் அவர் செய்தது போல.... அந்த ஒரே ஒரு தருணம் தான் பிலாத்துவிற்கு இருந்தது, அவன், அவரை நோக்கிக் கேட்டான், அவர், ஏதாவது ஒரு காரியத்தை செய்ய அதைத் தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினான், "ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் செய்கிறாரா பார்க்கலாம்” என்றான். அவன் முதலாவதாக மனந்திரும்பி இருக்க வேண்டும்-! 109. நரகத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்ற இந்த கொடூரமான உலகமானது இன்றிரவு அதைத் தான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது, அது தன் பாவங்களுக்காக மனந்திரும்பியாக வேண்டும். ஸ்தாபன அங்கத்தினர்களும் தங்கள் அவிசுவாசத்திற்காக மனந்திரும்பி அவருக்காக நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார். அப்போது அவர் செய்தது போலவே இப்பொழுது தம்மைத் தாமே அடையாளம் காண்பிக்கின்றார். அந்த பரிசேயன் எப்படிப்பட்ட ஒரு மனப்பான்மையைக் கொண்டு இருந்தானோ அதே போன்றதான ஒரு மனப்பான்மையை மக்கள் இன்றைக்குக் கொண்டு உள்ளனர். அதே விதமான ஒரு மனப்பான்மையை உடையவர்களாக இருக்கின்றனர் - அவருக்கு அழைப்பு விடுத்த பிறகு, அவர் வந்த உடன் கண்டு கொள்ளாமல் அப்படி உட்கார வைத்து விடுவது. அவர் அவர்களுக்குத் தேவை இல்லை. ஒரு வழக்க மரபிற்காக அவரை அழைக்கின்றனர், அவ்வளவு தான், அவர் அதை அறிந்திருக்கின்றார். 110. அவரைக் கழுவி சுத்தப்படுத்துவதற்கு பதிலாக, அவரின் பேரில் இருக்கின்ற நிந்தையைக் கழுவி சுத்தப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் அப்போது செய்த விதமாகவே இன்று நாம் அவருக்குச் செய்திருக்கின்றோம். எழுந்து நின்று "நீங்கள் தவறான கருத்தைக் கொண்டு இருக்கிறீர்கள். அது தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது ஆகும். அதைத்தான் அவர் வாக்குத்தத்தம் செய்து இருக்கின்றார். கடைசி நாட்களில் அவர் தம்முடைய ஆவியை ஊற்றுவேன் என்று கூறியுள்ளார். நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம்” என்று கூறுவதற்கு பதிலாக, அதற்கு பதிலாக அவர்கள் அன்று செய்தது போல நாமும் கண்டு கொள்ளாமல் அமர்ந்து உள்ளோம். ஒரு தீர்மானத்தைச் செய்ய நாம் பயப்படுகிறோம். 111. அவர்களின் ஒருவர் எழுந்து, ''அங்கிருப்பது நசரேயனாகிய இயேசு அல்லவா. அவர் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நான் நினைக்கின்றேன்,” என்று கூறி இருந்தால் எப்படி இருக்கும்-? அவர்கள் அவ்விதம் செய்யாதது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா-? அவர் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவர்கள் விசுவாசிக்காததினாலே. 112. இன்றைக்கும் கூட அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர் ஒரு கல்வி புகட்டும் ஆசிரியர் மாத்திரமே என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர், ஒரு ஸ்தாபனம் மாத்திரமே என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர் இன்னுமாக ஒரு தீர்க்கதரிசி யாக இருக்கின்றார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அங்கே இருந்தவர்கள், அவர் யாராக இருப்பார் என்ற கேள்விக்கு உரியவராக்கி, ஐயப்பாட்டை கொண்டு அவரை அப்படியே விட்டு விட்டனர். இன்று கூட அவர் யாராக இருக்கின்றார் என்கின்ற ஐயப்பாடானது, கேள்விக்குறியானது அப்படியே உள்ளது. அவருக்காக ஒரு தீர்மானம் எடுத்து நிற்க யாருமே தயாராக இல்லை. அவர்கள், ''சரி, அவருக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, பாருங்கள். நான் ஒரு சபையைச் சார்ந்திருக்கிறேன். அதோ என் மேய்ப்பர் இருக்கின்றார், அவர்கள் எல்லோரும் சரியாக இங்கே உட்கார்ந்து உள்ளனர். நான் ஒரு நல்ல மனிதன்,” என்று மாத்திரம் கூறுகின்றனர். இயேசு அங்கே அழுக்கு படிந்த பாதத்துடன் உட்கார்ந்து உள்ளார், யாருமே அவரைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை. அந்த அதே வேதாகமமே அங்கு ..... 113 இப்பொழுதோ நாம் நடந்து சென்று கைகளைக் குலுக்கி புத்தகத்தில் நம்முடைய பெயரை பதிவு செய்து கொள்கிறோம். மெத்தோடிஸ்டுகளும் நம்மை சேர்த்துக் கொள்ள அவர்களுக்கு பிடிக்கவில்லையெனில் நாம் பாப்டிஸ்ட்களிடம் செல்கின்றோம். அவர்கள் நம்மை எட்டி உதைத்து வெளியே தள்ளின பிறகு நாம் நசரீன்களிடம் செல்கிறோம். ஒருத்துவக்காரர்களும் நம்மை எட்டி உதைத்து வெளியே தள்ளுகின்றனர், பிறகு நாம் இருத்துவக்காரரிடம் செல்கிறோம். இருத்துவக்காரர் நம்மை எட்டி உதைத்து வெளியே தள்ளின பிறகு நாம் திரித்துவக்காரரிடம் செல்கிறோம். ஆகவே நம்மால் எந்த ஸ்தாபனத்தையுமே பொறுத்து இருக்க முடியவில்லை, எல்லாமே குளிர்ந்து போய் விறைத்துப் போய் அசைவற்று இருக்கின்றன. அதே விதமாகத் தான் எல்லாமே, நாம்..., 114. இயேசு வரும் போது, நாம் அவர் யார் என்று கூட அறிந்துக் கொள்வதில்லை. அதைக் குறித்து நமக்கு அக்கறை கிடையாது. அந்த விதமாகத் தான் அவர்கள் செய்கின்றனர். ஆனாலும் நாம், "கர்த்தராகிய இயேசுவே வாரும், கர்த்தராகிய இயேசுவே வாரும்,” என்று கூக்குரல் இடுகிறோம், அவரும் வருகின்றார். அப்பொழுது நாம் என்ன செய்கிறோம்-? அவர்கள் அங்கே செய்த அதே காரியத்தைத் தான் செய்கிறோம்-? என்ன-? அவர்கள் எதையாவது ஒன்றைக் கூறினால் நாம் ஏற்றுக் கொள்கிறோம்; யாராவது ஒருவர் கேட்பார்கள், அதைக் குறித்து பரியாசம் பண்ணுவார்கள், ஆகவே, அவர் அழுக்குப் படிந்தவராக உட்கார்ந்து இருக்கும்படிக்கு அவர்கள் அப்படியே விட்டு விடுகின்றனர். அது "ஒரு அசுத்த ஆவி” என்று அழைக்கப்படுகிறது. 115. நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் ஒரு நாளிலே, “இந்த மனிதன் பெயல்செபூலினாலே இதைச் செய்கிறான்,” என்று கூறின போது இயேசு அவர்களிடம், "எனக்கு விரோதமாக நீங்கள் சொல்கிறீர்களே, அது உங்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால் ஒரு நாளிலே பரிசுத்தாவி வந்து இதே காரியத்தைச் செய்யும். அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை சொல்லப்பட்டால் கூட அது மன்னிக்கப்படுவது இல்லை” என்று கூறினார். உங்களுக்குப் புரிகின்றதா. அழுக்குப்படிந்த பாதத்துடனே இயேசு, உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? தேவனை நேசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் மக்கள் தங்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளிலும் மற்றும் தங்கள் ஸ்தாபனங்களின் முறைமை களிலும் மிகவுமாக ஊறிக் கலந்திருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா-? 116. "உங்கள் பாரம்பரியங்களினாலே தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்,” என்று இயேசு கூறினார். அதோ அங்கே அவர் இருந்தார், வார்த்தையும் அங்கே மெய் நிலையில் இருந்தது, ஏனென்றால் அது மாம்சமாக்கப்பட்டு அவர் தான் கிறிஸ்து என்று சரியாக நிரூபிக்கப்பட்டு இருந்தது. மக்களும் தங்கள் பாரம் பரியங்களைக் கொண்டு வார்த்தையானது மற்ற மக்களுக்கு பலனை அளிக்கும்படிக்கு விடவில்லை. அதைத் தான் அவர் செய்துக் கொண்டிருந்தார், அவர் வார்த்தை எப்படிப்பட்டது என்று காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார், பாருங்கள். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் விசுவாசிக்கவில்லை . 117. ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று வேதாகமம் கூறி இருந்தது, வேதாகமமானது, "உன் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்,” என்று மோசே கூறினான் - உபாகமம் 18:15; அவர் என்ன செய்வார் என்று வேதாகமம் சரியாக முன்னுரைத்து இருந்தது. இதோ அவர் வந்து அதை அந்த மக்களின் மத்தியில் செய்துக் கொண்டிருந்தார். 118. ஆகவே அன்றைக்கு இயேசுவுக்கு எப்படி ஒரு அவப்பெயரானது இருந்ததோ அதே போல இன்றும் ஒரு அவப்பெயர் இருக்கும்படிக்கு நாம் அவரை அப்படியே விட்டு விட்டோம். இன்று மக்கள் அதற்கெதிராக காரியங்களை கூறும்படிக்கு செய்து உள்ளோம். வேதாகமமானது, "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியிருக்க “அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்று விட்டது. அதைப் போன்ற ஒரு காரியமானது கிடையவே கிடையாது,” என்கின்றனர். நாமோ அதற்காக நின்று அதைக் குறித்து ஏதாவதொன்றைக் கூற இன்னுமாக நாம் வெட்கப்படுகின்றோம். நாம் விசுவாசிக்கின்றோம் என்று உரிமை பாராட்டுகின்ற அதைக் குறித்த நம்முடைய சாட்சியைச் சொல்ல நாம் வெட்கப்படுகிறோம். அவரைக் கழுவி சுத்தப்படுத்துவதற்கு பதிலாக, அவர் இங்கே இருக்கின்றார் என்பதற்காக ஆனந்த கண்ணீரால் அவருடைய பாதத்தைக் கழுவ முயற்சிக்காமல், அவர் அப்படியே அழுக்காக உட்காரும்படிக்கு கண்டும் காணாமல் விட்டு விடுகிறோம். ''அதற்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அதைப் போன்ற ஒன்றிற்கு என்னுடைய ஒத்துழைப்பை நான் கொடுக்க மாட்டேன், அதன் மேல் என் கைகளைக் கூட நான் போடமாட்டேன். பாருங்கள்-? 119. அதே போன்று தான் உள்ளீர்கள். வேறொரு பெயரில் உள்ள அதே பரிசேயர் கூட்டம். அதே காரணத்தால் தான் நாம் அவர் அப்படியே உட்கார்ந்துக் கொண்டு இருக்கும்படிக்கு மறுபடியுமாக நாம் செய்திருக்கிறோம். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று நாம் விசுவாசிப்பதில்லை. நாம் அவரைக் குறித்து வெட்கம் அடைகிறோம். ஏன்-? அதே காரணம் தான். நாம் அதை விசுவாசிப்பதில்லை, மக்களும் கூட.., இல்லை ஐயா. 120. அவர் வந்து, அவர் விரும்புகின்ற எதையுமே செய்யலாம். அவர்களோ தங்கள் வழிகளில் நன்றாக அமைந்து பொருந்தி விட்டனர். அவர்களோடு எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அந்த விதமாகத் தான் அவர்கள் இருப்பார்கள் என்று வேதாகமம் கூறி உள்ளது உங்களுக்குத் தெரியும் அல்லவா-? சரியாக அப்படித் தான். அவர்கள் அனலுமின்றி குளிருமின்றி வெது வெதுப்பாகவும் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்.... 123. அங்கே யாருமே இல்லாதிருந்தார்கள். ஆகவே என்ன நடந்தது என்று அவள் சற்று யோசிக்க ஆரம்பித்தாள். "ஓ, இப்பொழுது என் நினைவிற்கு வருகிறது. அங்கே இருக்கின்ற அந்த பரிசேயன், பாஸ்டர்.பரிசேயன் ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் செய்து உள்ளாரே, எல்லோரும் அங்கே சென்றிருக்கின்றனர். ஓ இன்றைக்கு வருமானம் மிகக் குறைவாக இருக்குமே." ஆகவே அவள் அங்கே தெருவில் சாவகாசமாக செல்கின்றாள், மெதுவாக நடக்க ஆரம்பிக்கின்றாள், "சரி, அந்த விருந்து முடியும் வரைக்கும் நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவள் கூறுகிறாள். அவள் மிக மோசமான ஒரு வழியில் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தாள். ஆகவே அவள் தெருவில் நடந்து செல்கிறாள். 124. சிறிது நேரம் கழித்து அவளுடைய பசி கொண்ட வயிறானது ஆட்டு இறைச்சி வறுவலின் வாசனையை நுகர்ந்தது, "ஓ, அது மிக அருமையாக உள்ளதே. அதைப் போன்ற ஒன்றை என் வாழ்க்கையில் நான் சாப்பிட்டதே கிடையாதே," என்று அவள் நினைத்தாள். ஒருக்கால் அவள் தன்னுடைய பெற்றோரால் தெருவில் விடப்பட்டு இருக்கலாம். 125. நாம் அநேக முறைகள் சிறு பிள்ளைகள் குற்றம் புரிதலைக் குறித்து நினைப்பது உண்டு என்று உங்களுக்குத் தெரியும். அது சிறு பிள்ளைகள் குற்றம் புரிதல் அல்ல, அது முழுவதுமாக பெற்றோர் குற்றம் புரிதலே ஆகும். பிள்ளைகளுக்கு ஜெபிக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவுமே கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அம்மா எங்கோ ஓரிடத்தில் சீட்டு விளையாடும் விருந்திற்கும் (அவளுடைய மதப்பிரகாரமான சீட்டுக்கட்டு விருந்து) அப்பா எங்கோ ஓரிடத்தில் உள்ள கோல்ஃப் (Golf) பந்து விளையாடும் மைதானத்திலும், உடன் பிறந்த சகோதரி ஒரு வாலிபனுடன். தெருவில் சென்று ஓடிக் கொண்டு... ஒருக்கால் அவர்கள் பழமை நாகரீக ஜெபப் பீடத்தையும், சீட்டுக் கட்டுகளுக்கு பதிலாக வேதாகமத்தையும் வீட்டில் வைத்து, நீண்ட காலத்திற்கு முன்னரே தொலைக்காட்சி பெட்டியை வீட்டின் கதவிற்கு வெளியே தூக்கி வீசி எறிந்து இருந்தால் காரியமானது சற்றும் வித்தியாசமானதாக இருந்து இருக்கும். அவ்விதமாகச் செய்வது ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கியிருக்கும். ஒரு சினிமாபடக் காட்சிக்கு நீங்கள் எல்லோரும் சென்றால் தவறான ஒன்றாகக் கருதப்படும். ஆகவே பிசாசு அதை சரியாக நம் முன்னே வைத்து விட்டான்; அவன் அதை நேராக வீட்டிற்குள்ளாகவே கொண்டு வந்து வைத்து விட்டான். பாருங்கள்-? பாருங்கள்-? 126. அவள் பசியாக இருந்தாள். அவள் அந்த ஆட்டிறைச்சி வறுவலின் வாசனையை முகர்ந்தாள். அவள், "ஓ, அதன் வாசனை மிக அருமையாக இருக்கிறதே, வாசனையே இவ்வளவு அருமையாக இருக்குமானால் ஆட்டு இறைச்சியின் பொரித்த துண்டானது ஒரு மனித வாய்க்குள் எவ்வளவு ருசியாக இருக்கும். அதன் ருசி எப்படி இருக்குமென்று எனக்குத் தெரியாது. நான் இன்னும் சற்று நடப்பேனாக,” என்று அவள் கூறிக்கொண்டாள். 127. இப்பொழுது, அவள் அந்த மனிதருக்கு மிக அருகாமையில்... அவளாலே செல்ல முடியாது, ஏனென்றால் அவள் அருவருக்கத்தக்க கறை படிந்த ஒரு ஸ்திரீ ஆவாள். அம்மனிதரோ சுய நீதி பரிசுத்தமிக்கவர்கள் ஆவர். ஆகவே அவர்களால்..... அவர்கள் இருந்த இடத்தினருகில் அவளாலே செல்ல முடியவில்லை. அவள் ஒரு பாவி என்று கருதப்பட்டாள். 128. என்ன நடக்கிறதென்று பார்க்கும்படிக்கு அவள் சற்று அருகாமையில் நடந்து சென்றாள், அவர்கள் எல்லோரும் அங்கே நின்றுக் கொண்டு இருப்பதை அவள் கண்டாள். அவர்கள் மலைத்துப்போய் அங்கே எண்ணெயில் இந்த செம்மறி ஆட்டு இறைச்சியானது (ஆட்டுக்கடா) பொரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கையில் அவர்களுடைய வாயிலிருந்து உமிழ் நீர் வழிந்தோடிக் கொண்டு இருந்தது; மிக அருமையான உணவு வகைகள் அங்கே தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. என்ன அருமையான ஒரு தருணமாக அது இருந்தது-! 129. அவள் ஜனக்கூட்டத்திற்குள்ளாக இந்த விதமாக உற்று நோக்க ஆரம்பித்தாள், அப்பொழுது அவளுடைய கண் பார்வை இயேசுவின் மீது பட்டது. "அவர் யார்-? அவருடைய பாதமானது அழுக்காக உள்ளதே. அவர் என்று எனக்கு... அவர் யாரென்று எனக்கு யாராவது சொன்னால் நலமாக இருக்குமே-? ஐயா, அவர் யாரென்று...-?” சட்டென்று அந்த ஆள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவளுடன் எந்த ஒரு தொடர்பும் கொள்ளக் கூடாது என்று விரும்பினான். அவள் ஒரு பாவியாவாள். கடைசியாக வேறு ஒருவரை கேட்கின்றாள், அங்கே ஒரு சிறு பெண் விசுவாசித்துக் கொண்டு இந்த ஸ்திரீ பார்த்துக் கொண்டு இருந்தபடியே அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடமாக, "அம்மா, தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். அங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து இருக்கின்றாரே, அவர் யார்-? அப்படிப்பட்ட ஒரு நபர்... அவர் யார்-?” என்றாள். 130. ''ஆம், அவர் யார் என்று உனக்குத் தெரியுமல்லவா-? தீர்க்கதரிசி என்று நம்பப்படுகின்ற, நசரேயனாகிய இயேசுவைக் குறித்து அவர்கள் பேசுவதை நீ கேட்டது இல்லையா-? என்றார்கள். "ஓ, ஆமாம். அஹ் - அஹ். அங்கே இருப்பவர் அவர் தானா-?" "அவரே தான்" 131. "அப்படியா, அவர் கழுவப்படவே இல்லையே, அங்கே உள்ளே செல்கின்ற ஒவ்வொருவரும் கழுவப்பட்டு தைலத்தால் அபிஷேகிக்கப்பட்ட பிறகு தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அவரைப் பாருங்கள். அவரை, கழுவாமல் அப்படியே விட்டிருப்பது சரியல்ல." 132. அவளுக்கென அளிக்கப்பட்ட அந்த தருணத்தை அவள் கொண்டு இருந்தாள். யாரோ ஒருவர் கூறியிருந்த ஒரு சம்பவமானது அவளுடைய நினைவிற்கு வந்தது. ஒரு காலத்திலே சீகார் பட்டிணத்தில் இருந்த சமாரியாவில் தன்னைப் போலவே விபச்சாரத் தொழிலில் இருந்த ஒரு பெண்ணினுடைய ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்பட்டிருந்தது. ஆகவே இவளுக்கும் ஒரு தருணமானது அளிக்கப்பட்டு இருக்கின்றது என்று அவள் உணர்ந்துக் கொண்டாள். ஆனால் இப்பொழுது எப்படி அவரிடமாக அவளால் செல்ல முடியும்-? அவருக்கு தேவை ஒன்று உள்ளது என்பதை அவள் கண்டாள், அவருக்கு பணிவிடை செய்ய அவள் விரும்பினாள். ஆனால் அவரிடமாகச் செல்ல முடியவில்லை. அப்படித் தான் காரியமானது இருந்தது. அப்பொழுது அவள், “நான் என்ன செய்வது-? அவருக்கு தைல அபிஷேகம் பண்ணப்படவில்லை, அவருடைய பாதங்கள் அழுக்காக உள்ளது. யாரும் அதைக் குறித்த கவனத்தைக் கொள்ளவே இல்லை. ஓ, நான் மாத்திரம் அங்கே செல்வேனானால், அது தான் உண்மையான மனந்திரும்புகின்ற இருதயமாகும். என்னால் அங்கே செல்ல முடியும் என்றால்...'' என்று அவள் நினைத்தாள். 133. இப்பொழுது அவள் நினைக்கின்றாள். அவளுடைய மனதிற்கு ஒன்று தோன்றுகிறது. "நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியுமா-? எனக்குத் தெரியும்.” 134. தெருவில் செல்கின்றாள். அவளால் முடிந்தவரைக்கும் வேகமாகச் செல்கிறாள் அங்கே சிறு சந்திற்குள் செல்கின்றாள். அந்த பழைய க்ரீச்சென்னும் ஒலி எழுப்புகின்ற மரப்படிகளின் மேல் ஏறுகின்றாள், கதவை திறந்து உள்ளே சென்று, மேலே இருக்கின்ற ஒரு பையை இழுத்து அவளிடமாக எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்க்க பணத்தை எண்ணினாள். அவள், 'அபிஷேகிக்கும் தைலம் வாங்க இவ்வளவு பணம் போதுமா-? தேவையான பணம் உள்ளதா என்று பார்க்கலாம். இருபது ரோம தினசரி காசுகள் உள்ளன. ஒருக்கால் இது போதுமானதாக இருக்கலாம். சற்று பொறு. என்னால் அதை செய்ய முடியாது. அவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார், இந்த பணம் எனக்கு எப்படி கிடைத்ததென்று அவருக்கு தெரிந்து விடும். எந்த விதத்தில் இந்த பணத்தை சம்பாதித்தேன் என்று அவர் அறிந்து கொள்வார். என்னால் இதை செய்ய முடியாது' என்று கூறிக் கொண்டாள். ஆகவே, ஒருக்கால் அவள் பணத்தை திரும்ப உள்ளே வைத்து இருப்பாள். 135. அவள் பணத்தை உள்ளே வைத்த போது, ஏதோ ஒன்று அவளுடைய இருதயத்தில் பேசிக் கொண்டே இருந்தது, "ஓ, அவர் அங்கே அழுக்காக அப்படியே உட்கார்ந்து இருக்கும்படிக்கு விட்டுவிடுவாயா-? உன்னுடைய பாவங்களை எடுத்து போடக்கூடிய ஒரே மனிதனாகிய அவருக்கு உன்னால் பணிவிடை செய்ய முடியும் என்கின்ற போது அவர் அந்த இடத்தில் அழுக்காக அப்படியே உட்கார்ந்து இருக்கும்படிக்கு விடப்போகிறாயா-?” என்று கூறினது. அப்பொழுது அவள் “சரி, அவருக்கு தெரிகிறதோ, அல்லது தெரியாமல் போகிறதோ, எப்படி இருந்தாலும் சரி, நான் போகப் போகிறேன்,” என்று தனக்குள்ளாகக் கூறிக் கொள்கிறாள். 136. அவள் தெருவில் சென்றாள், ஒரு அங்காடிக்குள்ளாகச் செல்கின்றாள், அங்கே நீண்ட கொக்கி போன்ற மூக்கைக் கொண்ட ஒரு ஆள் உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறான், "சரி, உனக்கு இங்கே என்ன வேலை, என்ன வாங்கப் போகிறாய்-?" என்று கேட்டான்.. 137. அப்பொழுது அவள், “உங்களிடம் இருப்பதிலேயே சிறந்த தரமுள்ள பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணி எனக்கு வேண்டும், மலிவான விலை கொண்ட ஒரு தைலமல்ல; சிறந்த தைலம் எனக்கு வேண்டும்,” என்று கேட்டாள். அவளுக்கு ஒரு விசேஷித்த காரணம் ஒன்று இருந்தது. 138. அதைப் போன்று தான் நாமும் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். நம்மிடம் உள்ள சிறந்ததை அவருக்குக் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம், நாம் எப்படி இருக்கின்றோமோ அந்த எல்லாவற்றையுமே அளிக்க வேண்டும், நமக்கு வயதாகி மரித்துக் கொண்டிருக்கும் போது நம்மை அவருக்கு அளிப்பதல்ல; நம்முடைய வாலிப வாழ்க்கையை அவருக்கு அளிக்க வேண்டும். நம்மிடம் இருப்பதிலேயே சிறந்ததை அவருக்கு அளிக்க வேண்டும். 139. அதோ அங்கே பாருங்கள், சிறந்த ஒன்றை அவள் வாங்கினாள். அவள் மேலே சென்று "எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கலாம்,” என்றாள். கடைக்காரன், "இதை வாங்குவதற்கு முதலாவதாக உன்னிடம் பணம் இருக்கின்றதா," என்று கேட்டான். அந்த ஸ்திரீ எப்படிப்பட்டவள் என்று அவனும் கூட அறிந்திருந்தான். அதனால் தான் அவன். ஆம், அவளிடமாக பணம் இருந்தது. "இதை எடுத்துக் கொண்டு எங்கே செல்லப்போகின்றாய்-?” ''ஒரு விசேஷித்த காரியத்திற்காக நான் வாங்கிச் செல்கிறேன்.” 140. அவள் புறப்பட்டுச் செல்கின்றாள். ஆனால் அவளுக்கு எந்த ஒரு அழைப்பும் கொடுக்கப்படவில்லை. ஆகவே எப்படி அவள் உள்ளே செல்லப் போகிறாள்-? நீ இயேசுவுக்கு ஊழியம் செய்ய விரும்பினால், உள்ளே செல்லத்தக்கதாக எப்படி ஆயினும் அவர் ஒரு வழியை உனக்கு உண்டு பண்ணுவார். எப்படியோ ஒரு விதத்தில் அவள் உள்ளே சென்றாள். 141. அங்கே இயேசுவானவர் இன்னுமாக உட்கார்ந்துக் கொண்டிருந்தார். அவள் அங்கே உள்ளே சென்ற உடனே அவளுடைய இருதயம் மிக வேகமாக அடிக்கத் துவங்கினது. ''ஓ என்னே-! என்னை சந்திக்க மனமில்லாமல் அவர் என்னை திருப்பி விட்டால் என்ன ஆகும்-?” என்று அவள் நினைக்க நேர்ந்தது. அவள் நினைப்பதற்கு அநேக காரியங்கள் இருந்தன. "அவர் இங்கே வந்து, 'நடத்தை கெட்ட ஸ்திரீயே, இங்கே என் பிரசன்னத்தில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்-? நான் தேவனுடைய குமாரன் என்று உனக்குத் தெரியாதா-? நீ இங்கே என்னுடைய பிரசன்னத்தில் இருக்கவே கூடாதல்லவா-? என்று சொல்வாரானால், ''அவளுக்கு ஏறக்குறைய மாரடைப்பே வந்து விட்டது. அப்பொழுது அவள், ''நான் என்ன செய்வது-? ஆனால் அவருக்கு அருகில் நான் சென்று தானாக வேண்டும். இந்த தருணத்தை நான் விட்டு விடக்கூடாது. ஒருக்கால் எனக்கு இருக்கும் கடைசி தருணமாக இது இருக்கலாம்,” என்று அவள் நினைத்தாள். உங்களுக்கும் கூட ஒரு கடைசி தருணமாக இருக்கக்கூடும் (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). 142. அவள் இயேசுவைப் பார்த்தாள், அவளுடைய இருதயம் வெடிக்கும் அளவிற்கு ஆனது. அவள்- அவள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கின்றாள் என்பதை அவள் அறிந்து இருந்தாள். நீங்கள் அவருடைய பிரசன்னத்திற்குள் செல்லும் போது ஏதோ ஒன்று சம்பவிக்கின்றது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தோடுவதை அவள் கவனித்தாள், அவள் தன் கையில் தைலப் பெட்டியை வைத்து நின்றுக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அவருடைய பாதத்தில் விழுந்தாள். அப்பொழுது அவள், "என்னால் மேல் நோக்கிப் பார்க்க முடியாது. நான் மிக அசுத்தமுள்ளவளும் குற்ற உணர்வுமிக்கவளாக இருக்கிறேன். என்னால் மேலே நோக்கிப் பார்க்க முடியாது," என்று நினைத்தாள். அவள் அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்ணீர் அவருடைய பாதத்தின் மேல் விழ ஆரம்பித்தது. அப்பொழுது அவள் அவளுடைய பாதங்களை தன்னுடைய கைகளால் அந்த விதமாக கழுவ ஆரம்பித்தாள் - கண்ணீரை அவருடைய பாதத்தில் இருந்து துடைக்க முயன்று, அவருடைய கால்களை தன்னுடைய கண்ணீரால் கழுவ ஆரம்பித்தாள். ஆகவே சிறிது நேரம் கழித்து .... 143. அவருடைய பாதத்தை துடைக்க எந்த ஒரு துவாலைத் துண்டையும் அவள் வைத்தி இருக்கவில்லை. அப்பொழுது அவளுடைய தலை மயிரானது கீழே தொங்கிக் கொண்டு இருந்தது. உடனே அவள் அவருடைய பாதத்தைத் தன் தலை மயிரால் துடைக்க ஆரம்பித்தாள். 144. அவ்விதம் செய்வதற்கு நம்முடைய சகோதரிகளுக்கு நேரம் இருக்கிறதா-? இன்றைக்கு அப்படிச் செய்ய முயல்வார்களானால், அதைச் செய்வதற்கு அவர்கள் தலை கீழாக நிற்க வேண்டும். தங்கள் தலைகளை தங்கள் கால்களைப் போல் உபயோகித்துத் தான் நிற்க வேண்டும். தேவன் தம்முடைய எல்லா வாக்குத் தத்தங்களையும் காத்துக் கொள்ளுகிறார் என்பதை ஸ்திரீகள் உணர்கிறார்களா என்று நான் அதிசயிக்கிறேன். கத்தரிக்கப்பட்ட தலை மயிருடன் நீங்கள் உள்ளே வருவதானது முற்றிலுமாக முடியாததாகும் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தம்முடைய எல்லா வாக்குத் தத்தங்களையும் காத்துக் கொள்கிறார். நீங்கள் உங்கள் தலைமயிரை கத்தரிக்கும் போது நீங்கள் செய்வது என்ன என்பதை நீங்கள் உணர்கிறீர்களா-? நீங்கள் வல்லமையை நிராகரிக்கிறீர்கள். ஒரு ஸ்திரீ தன்னுடைய தலை மயிரைக் குட்டையாக கத்தரித்து வைத்துக் கொண்டால் அவள் ஜெபிக்கவும் கூட முடியாது என்று வேதாகமம் கூறுகிறது. தன் தலை மயிரைக் கத்தரிக்கும் போது தன்னுடைய புருஷனை கனவீனப்படுத்துகிறாள். 145. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், ஒரு ஸ்திரீ தேவனுடைய கற்பனையில் ஒன்றைக் கைக் கொள்ளாததினால் இந்த எல்லா காரியங்களும் நடக்கும்படியாக ஆனது. ஒன்றை மாத்திரமே கைக்கொள்ளாமல் மற்றவற்றைக் கைக் கொள்வது உங்களை உள்ளே கொண்டு சென்று விடும் என்று எண்ணுகிறீர்களா-? அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள்-! ஒருக்கால் ஊழியக்காரர்கள் சில சமயங்களில் இதைக் கூற போதுமான தைரியம் கொள்ளாதவர்களாக இருக்கலாம். இந்த ஒரு முறை இதை நீங்கள் கேட்கப்போகிறீர்கள். இது சத்தியமாகும். 146. யாரோ ஒருவர் வந்து, "ஏன் நீங்கள் பெண்களைப் பற்றி பேசாமல் அப்படியே விட்டு விடக்கூடாது-?'' என்றார். சில காலத்திற்கு முன்னர் ஒரு மகத்தான மனிதன் என்னிடமாக, "ஆம், அவர்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிக் கிறார்கள். எப்படி பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என்றும் இந்த மற்ற பெரிய காரியங்களை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்றும் எப்படி ஒரு தீர்க்கதரிசிகளாக இருப்பது என்பதைக் குறித்து நீர் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாமே,” என்றும் இன்னும் பிறவற்றையும் கூறினார். 147. அதற்கு நான், "அவர்களுக்கு மகத்தான காரியங்களை போதிப்பதா-? அவர்களுக்கு முதல் மூன்று எழுத்துக்களான ABC கூட தெரியாதிருக்கையில் எப்படி என்னால் அவர்களுக்கு அல்ஜீப்ரா கணக்கைக் கற்றுக் கொடுக்க முடியும்” என்று கூறினேன். அது என்ன காண்பிக்கிறது என்றால் வெளிப் புறமாக வெளிப்படுவதானது உள்ளே என்ன இருக்கிறதென்பதைக் காண்பிக்கிறதாகும். ஆனால் எப்படியாயினும், நீங்கள் தொடர்ந்து சென்று அதைச் செய்து கொண்டே இருங்கள். என்ன-? அதைக் குறித்த கவனம் உங்களுக்கு இல்லை. 148. அதோ அங்கே அவள் இருக்கின்றாள். அவள் தன் தலைமயிரைக் கொண்டு அவருடைய பாதத்தைத் துடைக்க ஆரம்பித்து அவருடைய பாதத்தை சுத்தம் செய்து ஈரம் காய்ந்து உலர்ந்து போகும்படிக்குச் செய்தாள். அவள் மிகவுமாக பயந்து இருந்தாள். சிறிது நேரம் கழித்து இந்த பரிமள தைல குப்பியை எடுத்து அதை உடைத்தாள். அவள் அதை உடைத்து அதிலிருந்து ஒவ்வொரு சொட்டையும் அவருடைய பாதத்தில் ஊற்றினாள். அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் அழும் போதெல்லாம் அவள் குனிந்து அவருடைய பாதத்தை முத்தமிட்டாள். அவள் மிகவுமாக உணர்ச்சி பொங்க கதறி அழுதாள். 149. நீங்கள் அவருடைய பிரசன்னத்திற்குள் செல்லும் போது, அது உங்களை உணர்ச்சி பொங்க கதறச் செய்யும். நானும் அவ்வாறு தான் கதறினேன்-! அவரை விசுவாசித்து, அவரில் விசுவாசம் கொள்ளும் எந்த ஒரு மனிதனும் அவருடைய பிரசன்னத்துக்குள் செல்வானானால், அது உணர்ச்சி பொங்க கதறி அழச்செய்யும். பெந்தெகொஸ்தே நாளிலே அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் வந்த போது அவர்கள் எல்லோரும் கதறினார்கள். நீங்கள் உண்மையாக விசுவாசித்து, அதை அறிந்து, அது உங்களுக்கு அளிக்கப்பட்ட தருணமாகும் என்று கண்டு கொண்டு அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் இருக்கும் போது, அதைக் குறித்து நீங்கள் நிச்சயம் உடையவர்களாக இருப்பீர்கள். 150. அவள் சென்றாள்... (சகோ.பிரன்ஹாம் முத்தமிடுகிற சத்தங்களை இடுகின்றாள் -ஆசி), அவருடைய பாதத்தை முத்தமிட்டாள். அழுதாள், கழுவினாள், சுத்தமாகத் துடைத்தாள், (சகோ.பிரன்ஹாம் முத்தமிடுகிற சத்தத்தை இடுகின்றார் - ஆசி), மறுபடியுமாக அவருடைய பாதத்தை முத்தமிட்டாள். இயேசு தாமே தம்முடைய ஒரு காலை அசைத்து இருப்பாரானால் அவள் குதித்தெழுந்து ஓடிப் போயிருப்பாள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன ஆயிற்று தெரியுமா, அவள் அதைச் செய்யும்படிக்கு அவர் அப்படியே உட்கார்ந்துக் கொண்டார். 151. உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் அவருக்கு ஏதாவதொன்றைச் செய்வதற்கு விருப்பம் கொண்டால், நீங்கள் அதைச் செய்யும்படிக்கு அவர் விடுவார். எல்லாம் ஒழுங்கிற்கு மாறாக இருந்தாலும்கூட எப்படியாயினும் நீங்கள் செய்யும்படிக்கு அவர் விடுவார். ஆகவே அவர்..... 152. அது அவருக்கு ஒரு சேவை செய்தலாகும். அவள் அவருடைய பாதத்தை கழுவிக் கொண்டு இருந்தாள். அவர் அங்கே உட்கார்ந்து அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவள் மேல் நோக்கிப் பார்க்க பயந்தாள், ஏனென்றால் அவரைப் பார்ப்பாளானால் அவள் பயந்து ஓடிப்போய் விடுவாள். பாருங்கள். அவள் அவருடைய பாதத்தைக் கழுவிக் கொண்டு இருந்தாள். அவருக்கு ஏதாவது ஓன்றைச் செய்யும் படியாக தருணம் இது தான் என்று அவள் கண்டு கொண்டாள். அதனால் அவள்... இப்பொழுது பாருங்கள், அவள்... 153. இயேசு, அந்த பரிசேயனுக்கு பதிலளிக்கையில், அந்த ஸ்திரீயின் கிரியை களைச் சுட்டிக்காட்டி அவளை நீதிமானாக்கப்பட்டவளாக நிறுத்தினார். அவளைத் தாமே நீதிமானாக்கப்பட்டவளாக ஆக்கினார், அவளுடைய விசுவாசத்தைக் கொண்டு அவளை நீதிமானாக்கினார், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது," அவளுடைய கிரியைகள் என்னவென்று அந்த பரிசேயனுக்கு அவர் காண்பித்தார். 154. ஏனென்றால், உங்கள் கிரியைகள் உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்து கின்றது. உங்கள் தலைமயிரை வளர விடுங்கள்-! அஹ்-! சரி. இப்பொழுது, பாருங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அல்லது இல்லையா என்று அது வெளிப்படுத்திக் காட்டுகின்றது. அது தேவனுடைய வார்த்தையாகும். சத்தியத்தைத் தவிர வேதாகமத்தில் வேறொரு வசனமானது கிடையாது. அப்படியானால் நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்-? இப்பொழுது கவனியுங்கள். பெந்தெகொஸ்தேயில் ஹாலிவுட் மிக அதிகமாக உள்ளது. அது தான் காரணமாகும். இப்பொழுது நாம் காண்பது என்னவெனில்... அது தான் உண்மையாகும். அதில் ஹாலிவுட் காரியங்கள் மிக அதிக அளவில் உள்ளது. நீங்கள் அந்த காரியங்களைப் பார்த்து அதை மாதிரியாக வைத்துக் கொண்டு அதன்படியே உங்களை அமைத்துக் கொள்கிறீர்கள். 155. சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெண் (அவள் மிக இருக்கமான ஆடையை அணிந்திருந்தாள்) என்னிடமாகப் பேசினாள்... நான், "நீங்கள் ஒரு சகோதரியாக இருக்கிறபடியால் அந்த ஆடையை அணிவதை நீங்கள் விட்டுவிடலாம் அல்லவா-?” என்று கூறினேன். 156. அதற்கு அவள், "அப்படியா, அவர்கள் வேறு எந்த ஆடைகளை தயாரிப்பது இல்லையே சகோ.பிரன்ஹாம்” என்றாள். 157. அதற்கு நான், 'அவர்கள் தையல் இயந்திரங்களை தயாரிக்கிறார்கள் மற்றும் உபகரணங்களையும் கொண்டிருக்கிறார்கள் அல்லவா, ஆனால் நீங்கள் அதை அணிய விரும்புகிறீர்கள்,” என்றேன். பாருங்கள். 158. ஏன் அவ்விதம் செய்யக் கூடாது என்று நான் உங்களுக்குக் கூறுவேன். சகோதரிகளே, உங்களுக்கு இதை நான் கூறட்டும் (சபையார் கைகளைத் தட்டுகின்றனர்" - ஆசி) அஹ் - அஹ் உங்களுக்கு நன்றி. என்றாவது ஒரு நாளிலே விபச்சாரம் செய்த குற்றத்துக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். 159. நீங்கள், "ஓ, சகோ.பிரன்ஹாம், என்னால் முடிந்த வரைக்கும் என் கணவருக்கு நான் மிகவும் கற்புள்ளவளாக இருக்கிறேன்,” எனலாம். "என் ஆண் சிநேகிதனுக்கு நான் உத்தமமாக இருந்து வருகிறேன்,” அது உண்மையாகவே அப்படித் தான் இருக்கலாம். 160. ஆனால் இயேசு "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று" என்று கூறியுள்ளார். ஆகவே நீங்கள் அந்த விதமாக உங்களை வெளியே அங்கே காண்பித்தீர்கள், உங்களைக் கண்ட அந்த பாவி உங்களை அந்த விதமாகவே தன் எண்ணத்தில் வைத்து சிந்தித்துக் கொண்டிருக்கிறான், ஏனென்றால் நீங்கள் அந்த விதமாகவே உங்களை வெளியே காண்பித்துக் கொண்டீர்கள். நியாயத் தீர்ப்பின் சமயத்திலே அவன் விபச்சாரக் குற்றத்திற்கு பதிலளிக்கும் போது, யார் குற்றவாளியாக இருப்பார்கள்-? அதைக் குறித்துச் சற்று சிந்தியுங்கள்-! அஹ் - அஹ் அது முற்றிலும் சரியே. ஓ, ஸ்திரீகளே-! திரும்பி வாருங்கள், சகோதரிகளே, கிறிஸ்துவண்டை திரும்பி வாருங்கள். சகோதரர்களே, நீங்களும் அந்த விதமாகச் செய்யுங்கள். உங்கள் மனைவிகள் அந்த விதமாக செய்யும்படிக்கு விட்டு விட்டு உங்களை ஒரு மனிதன் என்றும், வீட்டிற்குத் தலைவன் என்று அழைத்துக் கொள்கிறவர்களே அஹ்-அஹ், கவனியுங்கள். நண்பனே, நாம் மிகப் பயங்கரமான ஒரு காலத்தில் இருக்கின்றோம், அதை நாம் கவனிக்கிறோம். 161. ஆகவே இங்கே இந்த சிறிய பெண் இயேசுவின் பாதத்தை முத்தமிட்டு அவருடைய பாதத்தை கழுவி தன்னுடைய தலை மயிர்களைக் கொண்டு அதைத் துடைத்தாள். திடீரென்று அங்கே அந்த ஓரத்தில் இருந்த பரிசேயன் அதை கவனிக்க நேர்ந்தது. ஓ, என்னே-! அவனுடைய நீதியான கோபமானது மேலே எழும்பினது, அவனுடைய - அவனுடைய பெரிய தாடை வீங்க ஆரம்பித்தது. அவனுடைய முகமானது கோபத்தால் வெடித்து விடும் போல இருந்தது. ஒ, என்னே-! உடனடியாக அவன், "இங்கே வாருங்கள். அங்கே பாருங்கள்,” என்றான். 162. அவன் தன்னுடைய இருதயத்தில், அவனுடைய மனதுக்குள், "அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பாரே,” என்று சொல்லிக் கொண்டான் 163. அவர் ஒரு தீர்க்கதரிசியா அல்லது இல்லையா என்று பார்க்கலாம். பாருங்கள். அவர் அந்த பரிசேயனுடைய இருதயத்தின் நினைவுகளை பகுத்தறிந்தார். உடனடியாக அவர் திரும்பினார். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்ப்பதற்கு எழுந்து கொண்டாள். அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது. அவர் திரும்பி அங்கே பார்த்தார், அவர் “சீமோனே,” என்றார். அவர், "உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும்” என்றார். ஓ, என்னே-! “இதோ சீமோனே பார், நான் உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீ அழைத்ததின் பேரில் நான் இங்கே வந்து உள்ளேன். நீ எனக்கு அழைப்பு விடுத்தாய். நான் வாசலண்டை வந்த போது நீ என்னுடைய கால்களைக் கழுவவில்லை. நான் உள்ளே வந்த போது நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை நான் உள்ளே அழுக்காக வரும்படிக்கு அப்படியே விட்டு விட்டாய். நீ எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் எனக்கு வரவேற்பின் முத்தம் செய்யவில்லை. ஆனால் இங்கே இருக்கின்ற இந்த ஸ்திரீ - அவள் எப்படிப்பட்டவளாய் இருந்தாலும் சரி - இவளோ தன் கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலை மயிரினால் அவைகளைத் துடைத்தாள், என் கால்களை அபிஷேகித்தாள், அவள் என் பாதத்தில் விழுந்த முதற் கொண்டு ஓயாமல் தொடர்ந்து முத்தம் செய்தாள்,” என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசியா, இல்லையா என்று அப்பொழுது அவன் கண்டு கொண்டான். 164. பிறகு அவர், "சீமோனே, நீ ஒன்றைக் காண வேண்டுமென்று நான் விரும்புகிறேன்,” என்றார். மேலும் அவர், ''எந்தவிதமான... நான் உனக்கு ஒரு விடுகதையை அளிக்க விரும்புகிறேன்,” என்றார். அவர், "அநேகம் மன்னிக்கப்படும் போது அன்பு அதிகம் இருக்கும்,” என்றார். அவர் இந்த பழமொழியை அவனிடம் கூறினார், அப்பொழுது சீமோன் அவருக்கு பதிலளித்தான். 165. கவனியுங்கள், அவருடைய கால்களைக் கழுவும்படிக்கு சீமோன் அவருக்கு எதுவுமே கொடுக்கவில்லை. ஆனால் இருந்ததிலேயே மிகச் சிறந்த தரமான தண்ணீர் அவருக்கு இருந்தது. அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள். ஒரு மனந் திரும்புகிற பாவியின் கண்ணீர் இயேசுவின் பாதத்தில் இருந்த அழுக்கை கழுவி அகற்றினது, ஒரு பாவியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரானது இயேசுவின் பாதத்தில் இருந்த தூசியை கழுவி சுத்தமாக்கினது. 166. ஓ, இன்றிரவு உள்ள மனிதரே, ஸ்திரீகளே-! சுவிசேஷத்தின் மேலே வருகின்ற நிந்தையை நீங்கள் காண்கையில், நாம் மிகவும் விறைத்துக் போனவர்களாக இருக்கின்றோம், நாம் அழுது கண்ணீர் சிந்தினால் நம் முகத்தில் இருக்கின்ற ஒப்பனைகள், மேக் அப் எல்லாம் கலைந்து கறைந்து போய் விடும், அப்படியே தெருவில் சென்றால் பார்ப்பதற்கு நம்முடைய முகம் மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் அப்படியே அசைவற்று விறைத்து நிற்கின்றோம். ஆனால் அங்கே மறுமையில் பரலோகத்தில் நுழைவாயிலை நோக்கிப் பார்க்கும் போது எப்படிப் பட்டவர்களாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள்-? 167. அதோ அங்கே அவள் இருந்தாள். அவள் அவருடைய பாதங்களைக் கழுவினாள், அவருடைய பாதங்களை முத்தமிட்டாள், அவருடைய பாதத்திற்கு பரிமள தைலம் பூசினாள், தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவள் செய்து கொண்டு இருந்தாள். ஏனென்றால் அவளுக்கு மன்னிப்பு தேவைப்பட்டது. அவர் என்ன செய்யப் போகிறார் என்று அப்பொழுது திடீரென்று அவளுக்கு அவளுக்கு யோசனையாயிற்று. 168. தாம் ஒரு தீர்க்கதரிசி என்று சீமோனுக்கு காண்பித்தார், அவனுடைய திட்டமானது அவனுக்கு எதிராகவே முடிந்தது, ஏனென்றால், "அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல," என்று அவன் கூறியிருந்தான். அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் அவர் தான் தேவனுடைய வார்த்தை என்றும் அப்போது நிரூபிக்கப்பட்டது. இப்பொழுது அவன் அங்கே தன் முகம் கோபத்தால் வீங்கினவனாக அங்கே நின்றுக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த சிறு பெண்ணைத் தன் கையால் பிடித்து இழுத்து சபையிலிருந்து அவளை, வெளியே தள்ள முடியும். 169. ஆனால் அவளுக்கோ தான் கேட்டது எதுவோ அதை அவள் பெற்றுக் கொண்டாள். ஆமென். மற்ற ஏனையோர் என்ன கூறினாலும் அது சிறிதளவு வித்தியாசத்தைக் கூட அவளுக்கு ஏற்படுத்தவில்லை; தான் கேட்டதை அவள் பெற்றுக் கொண்டாள். 170. இப்பொழுது இயேசு அவளிடமாகத் திரும்புகிறார். அவளுடைய சிறு இருதயமானது மிக வேகமாக அடிக்கத் துவங்குகிறது. இப்பொழுது அவர் என்ன கூறப் போகின்றார்-? அதோ அவள் அங்கே நிற்கின்றாள், அவளுடைய சுருட்டை மயிரானது அவளுடைய இடுப்பு வரைக்குமாக தொங்கிக் கொண்டிருந்தது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது; அவருடைய பாதங்களுக்கு எண்ணெய் பூசப்பட்ட பிறகு அதற்கு அவள் ஓயாமல் முத்தம் இட்டதால் அவளுடைய முகமும் உதடுகளும் எண்ணெயால் வழ வழப்பாக இருந்தன. அவர் என்ன கூறப்போகின்றார் என்று பார்த்துக் கொண்டிருந்த அந்த வீங்கின கண்களும் மற்றும் அவள் முகம் இருந்த நிலையில் அவள் பார்ப்பதற்கு மிகவும் கோரமாக இருந்திருப்பாள் என்பது நிச்சயம். 171. அவர், ''நான் அவளுக்குக் கூறுகிறேன், அவளுடைய அதிகமான பாவங்கள் அவளுக்கு மன்னிக்கப்பட்டது,” என்றார், அது தான், "அவளுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டது." 172. அது சொல்லப்பட்டு அதை மாத்திரமே தன் செவியால் கேட்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்-! ஓ, அந்த வார்த்தைகள் தான் எனக்கும் தேவைப்படுகிறது-! ஏனைய மற்றவர் என்ன கூறினாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறை இல்லை. அவனுடைய ஸ்தாபனத்தில் நான் நின்று அவர் தான் தேவனுடைய வார்த்தை என்று அறிக்கையிட நான் தயாராக இருக்கின்றேன்-! அவர்கள் என்ன கூறினாலும் அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்கள் விரும்பினால் அதன் பேரில் எந்த விதமான அழுக்கை அவர்கள் போடட்டும். மனதின் எண்ணங்களை வசியத்தால் அறிந்து கொள்பவன் என்றும், குறி சொல்பவன் என்றும் கூறட்டும், அல்லது அவர்களால் செய்ய முடிகிறவைகளை எல்லாம் செய்யட்டும். அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர், பேரில் இருக்கும் நிந்தையை முத்தமிட்டு அகற்ற நான் விரும்புகிறேன். அது அவருடைய வார்த்தையாகும். நிச்சயமாக. அவர் அதை வாக்குத்தத்தம் செய்து உள்ளார். அன்றைக்கு அவர் இருந்தது. போல இன்றைக்கும் அதே வார்த்தையாகவே அவர் இருக்கின்றார். அவர் அவ்விதமாகக் கூறியுள்ளார். 173. இப்பொழுது, நண்பனே, அவர் தீர்க்கதரிசி என்ற காரியத்தின் பேரில் உடன்படாத மக்கள் ஒரு வேளை இங்கே உட்கார்ந்து இருக்கலாம். அவர் சுகம் அளிப்பவர் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு சபை அங்கத்தினனும் கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று இருக்கின்றது. அது அவர் தாம் இரட்சகர் என்பதாகும். 174. முடிப்பதற்கு முன்பாக இதை நான் கூற விரும்புகிறேன். சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு மனிதனும் பெண்ணும் விவாகரத்து கோரி விண்ணப்பத்திருந்த ஒரு வழக்கை வழக்கறிஞரான என் நண்பர் ஒருவர் கையாண்டுக் கொண்டிருந்தார். அந்த வழக்கறிஞர் மிக அருமையான கிறிஸ்தவர் ஆவார். அவர், "நீங்கள் பிரிந்து செல்ல வேண்டாம் - செல்ல வேண்டாம்” என்று கூறினார். அவரால் முடிந்த வரைக்கும் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே பிரயாசப்பட்டார். ஆனால் அவர்களோ, பிரிந்து விடுவது என்று மிக உறுதியாக இருந்தனர். அவர்களுக்கு இடையே ஏதோ ஒரு காரியமானது குறுக்கே வந்து விட்டது. அதற்கு பிறகு அந்த வழக்கறிஞர், ''சரி, உங்களுக்கு அங்கே ஒரு வீடு இருக்கிறது என்றால் நீங்கள் அங்கே சென்று இருக்கிறவைகளை இருவரும் சமமாக பிரித்து எடுத்துக் கொண்டால் நலமாய் இருக்கும். ஏனென்றால் அந்த வழக்கறிஞர்கள் மற்றும் பிற நபர்கள் அங்கே செல்வார்களானால், என்ன நடக்கும் என்றும் உங்களுக்குத் தெரியும். வீட்டில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் விட்டு வைக்காமல் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்” என்று கூறினார். 175. ஆகவே அந்த தம்பதியினர் அங்கு இருந்தவைகளை தங்களுக்கு சமமாக பங்கிடுவதற்காக வீட்டின் அறைகளில் சென்றனர். பிறகு வீட்டின் வரவேற்பறைக்கு சென்றனர். அங்கே இருவரும் "நான் தான் இதை வாங்கினேன்” என்றும் "நான் தான் இதை வாங்கினேன்” என்றும் வாதிட்டனர். சினங்கொண்டு குமுறினர். பிறகு அடுத்த அறைக்கு சென்றனர், அங்கிருந்த பொருட்களை தங்களிடையே பிரித்துக் கொண்டனர். பிறகு கடைசியாக அங்கே மேல் மாடத்தின் சிறு அறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள். அங்கே ஒரு பழைய இரும்பு ட்ரங்க் பெட்டி வைத்து இருந்தனர் என்று அவர்கள் நினைவிற்கு வந்தது. உடனடியாக அங்கே சென்று, "ஆம், இது என் அம்மாவினுடையது” என்றும் "இதுவும் என் அம்மாவினுடையது” என்றும் அந்த விதமாகக் கூறிக் கொண்டிருந்தனர். இருவரும் அந்த இரும்பு ட்ரங்க் பெட்டியின் உள்ளே துழாவிக் கொண்டிருந்தனர். அந்த பெட்டியைத் திறந்து வைத்து தரையில் இருவரும் முழங்காலிட்டு என்ன இருந்ததோ அதை தங்களுக்கு இடையே பிரித்துக் கொண்டனர். ஆனாலும் அவர்கள் மனம் ஒத்துப் போகவில்லை. "அது எனக்குச் சொந்தமானது, அதை நான் விலை கொடுத்து வாங்கினேன். நான் தான் வேலைக்குச் சென்று உழைத்தேன்." "உம், நீ வேலைக்குச் சென்ற போது நான் வீட்டில் இருந்து வீட்டுப்பணி செய்து கொண்டிருந்தேன்,” என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். 176. கடைசியில் ஒரு பொருளை வெளியே எடுத்தனர், அதை இருவரும் ஒரே நேரத்தில் பிடுங்கிக் கொண்டனர். அது என்னவாயிருந்தது-? அவர்களுடைய விவாக இணைப்பினால் பிறந்து இருந்த, பிறகு தேவன் எடுத்துக் கொண்ட ஒரு சிறு குழந்தையின் ஒரு ஜோடி காலணியாக இருந்தது. அவர்களால் வாதம் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர்களிருவருக்கும் பொதுவான ஒன்றை அவர்கள் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்கள் கைகளால் அதைப் பிடித்து இருக்கையில், அவள் தான் அந்த குழந்தையின் தாய் என்பதை அவன் நினைவு கூர்ந்தான். அவன் அந்த குழந்தையின் தகப்பன் என்பதை அவள் நினைவு கூர்ந்தாள். அந்த சிறு காலணியை அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கையில் அவர்களிருவரும் ஒருவரை ஓருவர் இழுத்து தங்கள் கைகளால் அணைத்துத் தழுவிக் கொண்டனர். அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. ஏன்-? அவர்கள் தங்களுக்கு பொதுவான ஒன்றைக் கொண்டு இருந்ததை கண்டு கொண்டனர். 177. இந்த வாரத்தில் பரிசுத்த ஆவி உள்ளே வந்து, இந்த வார்த்தைகளையும் அதைச் சார்ந்த காரியங்களையும் உறுதிப்படுத்துவதை கண்டும் நீங்கள் என்னுடன் உடன்படாமல் இருந்திருக்கலாம். அதனோடு நீங்கள் இணங்காமல் இருக்கலாம். வியாதியஸ்தர் சுகமளிக்கப்படும் காரியத்துடன் நீங்கள் இணங்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு காரியம் நமக்கு பொதுவானதாக இருக்கின்றது; அது நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகும். இன்றிரவு அவருடைய பாதத்திலிருக்கிற அழுக்கை நீங்கள் கழுவி சுத்தம் பண்ணுவீர்களா-? 178. ஒரு க்ஷணப் பொழுதிற்கு நமது தலைகளை தாழ்த்துவோமாக. நினைவில் கொள்ளுங்கள். அவர் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காத்துக்கொள்கிறார். அவர் ஒவ்வொரு வாக்குத் தத்தத்தையும் காத்துக் கொள்கிறார். "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும். நீங்கள் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்தால் உங்கள் பாவங்கள் எல்லாம் உங்களுக்கு மன்னிக்கப்படும்” என்று அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். 179. இப்பொழுது, நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், எத்தனைப் பேர் தங்கள் கரத்தை உயர்த்தி, "சகோ.பிரன்ஹாம், நான் விரும்புவது... அவர் அவமானத்தில் அப்படியே உட்கார்ந்திருக்கும்படிக்கு என் எஞ்சியுள்ள வாழ்நாளில் அந்த நிலையிலே அப்படியே அவரை விட்டுவிட மாட்டேன். அந்த சிறு பெண்ணுக்குக் கிடைத்த தருணத்தைப் போலவே எனக்கும் ஒரு தருணம் கிடைக்கப் பெற்றுள்ளது. என் சாட்சியைக் கொண்டு அவரில் இருந்து, அவருடைய விலையேறப் பெற்ற நாமத்திலிருந்து அழுக்கை நான் கழுவி சுத்தமாக்க விரும்புகிறேன்,” என்று கூற விரும்புகிறீர்கள். நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி "சகோ.பிரன்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்,” என்று கூறுவீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது ஆகும். 180. பரலோகப் பிதாவே, இப்பொழுது அநேக அநேக கரங்கள் இங்கே உயர்த்தப்பட்டன. இயேசு கிறிஸ்துவின் நாமமானது அழுக்கினுள் முரட்டுத்தனமாக மிதித்துத் தள்ளப்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம். பரலோகத்தில் இருக்கின்ற ஒவ்வொன்றும் அதன் பேரில் தான் பெயரிடப்பட்டுள்ளன. பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அதன் பேரில் தான் பெயரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சபை அங்கத்தினனும், கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் திருமதி. இயேசுவாய் இருக்கிறார்கள். பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் அதைக் கண்டு அதைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். உம்முடைய கிருபை தாமே இப்பொழுது இந்த மக்களின் மீது வந்து, ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, இவர்கள் தாமே இப்பொழுது உம்முடைய பிரசன்னத்தில் இருப்பதை அறிந்து கொள்ளவும் செய்யட்டும், நீர் தாமே இங்கே இருக்கின்றீர் என்று இவர்கள் அறிந்து கொள்வார்களாக. உம்முடைய பரிசுத்த ஆவி தாமே இப்பொழுது இவைகள் எல்லாவற்றையும் போதிக்கட்டும், மேலும் எங்களுடைய எல்லா பாவங்களில் இருந்தும் எங்களுடைய தவறுகளில் இருந்தும் எங்களுக்கும் மன்னிப்பு அருளப்படுவதாக. இன்றிரவு முதல் நாங்கள் தாமே உம்முடைய ஆவியால் நிரப்பப்பட்டு புது சிருஷ்டிகளாக இருப்போமாக. அதை அருளும். நாங்கள் தாமே உம்முடைய பிரசன்னம் இங்கே உள்ளது என்பதின் உணர்வு நிலையில், நாங்கள் இருப்போமாக. இதை உம்முடைய நாமத்தில் நாங்கள் கேட்கின்றோம். 181. நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தி இருக்கையில், இன்றிரவு நான் நினைப்பது என்ன என்றால்... இப்பொழுது, நான் பாவிகளிடமும், சபை அங்கத்தினர்கள் இடத்திலும், பின்மாற்றம் அடைந்தவர்களிடமும் மற்றும் பரிசுத்த ஆவியைக் கொண்டிராதவர்களிடமும் நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். நான் உங்கள் இடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். அந்த பரிசேயன் ஏன் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை-? 182. நாமோ, "ஓ, கர்த்தாவே, நீர் எப்போது வரப்போகின்றீர்-?'' என்று கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். உங்கள் குழந்தை வியாதியாய் இருந்த போது அவரைக் கூப்பிட்டீர்கள். அவர் இரக்கமுள்ளவராய் இருந்தார் என்பதில் சந்தேகமே கிடையாது. அங்கே அந்த ஆபத்தை சந்திக்க இருந்த போது அவரை நோக்கிக் கூப்பிட்டீர்கள். அவர் - அவர் உங்களை அதிலிருந்து வெளியே வரும்படிக்குச் செய்தார். ஆனால் என்ன வியப்பென்றால், இவ்வளவு காரியங்களுக்காக நாம் அவரைக் கேட்கிறோமே, அவரை அழைக்கிறோமே, அப்பொழுது இந்த விதமாக அவர் நம்மை சந்திக்க வரும் போது நாம் வெட்கமடைகிறோம் என்பதில் ஆச்சரியம் தான். 183. “ஆம், நான் ஒரு சபையின் அங்கத்தினனாக இருந்து வந்துள்ளேன், ஆனால் இன்றிரவு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் அவரை நான் காண விரும்புகிறேன். அவர் எனக்கு தேவையாயிருக்கிறார். எனக்கு அவர் வேண்டும். ஏனைய உலகமானது அவரைக் குறித்து என்னக் கூறினாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை . அவர் எனக்குத் தேவை,” என்று மாத்திரம் கூறுங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா, அப்படி ஆனால், நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்ளப் போகிறேன். நான் இப்பொழுது எங்கே இருக்கின்றேனோ அங்கே நீங்கள் வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சரியாக இங்கே வந்து, இங்கே இந்த இடத்தில் சரியாக என் பக்கத்தில் நில்லுங்கள். இங்குள்ள ஒவ்வொரு நபரும், முதலாவதாக இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் இங்கே நடந்து வந்து ஒரு நிமிடத்திற்கு இங்கே நிற்பீர்களா-? 184. அவர் ஜெபத்தைக் கேட்பவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது நாங்கள் ஒரு பாடலின் ஒரு அடியை நான் பாடுகையில் இங்கே நீங்கள் வந்து ஒரு நிமிடத்திற்கு நிற்பீர்களா-? அது என்ன பாடல்-? “மிருதுவாகவும் கரிசனையாகவும் இயேசு அழைக்கின்றார்.” சரி, நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டு இருக்கையில், ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொண்டு இருக்கையில், நேராக இங்கே வந்து சரியாக இந்த இடத்தில் நில்லுங்கள். மிருதுவாகவும் கரிசனையாகவும் இயேசு..... நண்பர்களே, வாருங்கள், எல்லா இடத்திலும் உள்ளவர்களே, வருவீர்களா-? உன்னை என்னையும்..... அழைக்கின்றார். 185. இயேசு இந்த கடைசி நாட்களில் சரீரப் பிரகாரமான தம்முடைய தோன்றுதலுக்கு முன்னர், இப்பொழுது அழுக்கு படிந்த பாதத்துடன் அமர்ந்துக் கொண்டு இருக்கிறார். நீங்கள் இங்கே வந்து அவருடைய நாமத்தின் பேரிலுள்ள நிந்தையை எடுத்துப் போடும்படிக்கு உங்கள் உறுதியான நிலையைக் கொள்ள வருவீர்களா-? ஓ பாவியே, வீட்டிற்கு வா என்று அழைக்கிறார்-! வீட்டிற்கு வா................ 186. சீக்கிரமாக இப்பொழுது வெளியே வாருங்கள். ஒரு முடிவை எடுத்து உங்கள் மனத்தைத் தயார் படுத்துங்கள். இப்பொழுதே நேராக வாருங்கள். நமக்கு அதிக நேரம் இருக்கின்றது. நாளை ஞாயிற்றுக் கிழமையாகும். ஞாயிறு ஆராதனை 9.30 மணிக்கு முன்னால் துவங்காது. இப்பொழுது வாருங்கள். .......... சோர்ந்து போயுள்ளவர்களே, வீட்டிற்கு வாருங்கள். அக்கறையுடனும், கரிசனையுடனும்.............. இயேசு இங்கே இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா-? ஓ பாவியே வீட்டிற்கு வா என்று அழைக்கின்றார்-! வீட்டிற்கு வா. .... 187. அது சரியே. அங்கே அரங்கத்தின் மேல் பகுதியில் உள்ளவர்களே வாருங்கள். நாங்கள் உங்களுக்கு காத்திருப்போம். பாருங்கள். நேராக வாருங்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் வாருங்கள். நேராக வந்து இங்கே உங்கள் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ... இது உங்கள் வாழ்க்கையை வழி நடத்தி.... 188. என்ன சம்பவிக்கும்-? பூமியெங்கும் ஏற்படுகின்ற பூமியதிர்ச்சிகளைப் பாருங்கள், அவை மறுபடியுமாக பூமியைக் குலுக்கிக் கொண்டு இருக்கின்றன. எல்லா இடங்களிலும் நடக்கும் காரியங்களைப்பாருங்கள். காலமானது மிக அருகாமையில் இருக்கின்றது. இன்னும் சிறிது பொழுதிற்கு பிறகு கதவானது அடைக்கப்படும்; அப்பொழுது நீங்கள் உள்ளே வரும்படிக்கு அழுதாலும் கூட உங்களால் உள்ளே வர முடியாது. 189. சில காலத்திற்கு முன்னர் ஒரு வாலிபப் பெண்ணுடன் நான் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு பாப்டிஸ்ட் சபையில் கூட்டம் ஒன்றை நான் நடத்திக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அந்த இரவு நான் அவளை கிறிஸ்துவிடம் வரும்படிக்கு கேட்டேன். அவ்விதமாகச் செய்ய அவளுக்கு மனமில்லை. அதற்கு பிற்பாடு அவள் என்னை வெளியே சந்தித்து, ''அந்த விதமான ஒரு தர்மசங்கடமான நிலையை மறுபடியுமாக எனக்கு ஏற்படுத்தாதீர்-!” என்று கூறினாள். ஒரு வருடம் கழித்து நான் தெருவில் சென்று கொண்டிருந்த போது... அவள் ஒரு நன்மதிப்பு வாய்ந்த வாலிபப்பெண் ஆவாள். நான் தெருவில் சென்று கொண்டிருந்த போது அவளுடைய உள்ளாடை கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் ஒரு சிகரெட்டை புகைத்துக் கொண்டு தெருவில் சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு டீக்கனின் மகளாவாள். அப்பொழுது நான், “இதோ பாருங்கள். ஹலோ ....." என்றேன். அதற்கு அவள், “ஹலோ, பிரசங்கியே” என்றாள். அவளுடைய கொச்சைமொழி உச்சரிப்பு அவ்விதமாக இருந்தது, "ஹலோ பிரசங்கி”. 190. அப்பொழுது நான், “அந்த சிகரெட்டைக் குறித்து உனக்கு வெட்கமில்லையா-?” என்று கேட்டேன். அதற்கு அவள், "ஹே, என் பாட்டிலில் இருக்கும் சிறிது மதுவை குடிக்கிறீர்களா-?” என்றாள். அவள் பாதி குடி போதையில் இருந்தாள். அப்பொழுது நான், "நீ இப்படி செய்வதினாலே உன்னைக் குறித்து உனக்கு வெட்கமே இல்லையா-?” என்றேன். அவள், "இங்கே வாருங்கள். நான் தங்குமிடத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல விரும்புகிறேன்” என்றாள். நான், "நீ வீட்டில் இல்லையா,” என்றேன். “இல்லை ” என்றாள். "நீ வீட்டில் இல்லாதிருப்பதன் காரணம் என்ன-?” என்று கேட்டேன். அதற்கு அவள், "என் பாட்டிலில் இருக்கும் சிறிது மதுவைக் குடியுங்கள், அப்பொழுது நான் உங்களுக்குக் கூறுவேன்” என்றாள். 191. நான், "நீ பாட்டிலிலிருந்து மது குடிக்கும்படிக்கு என்னிடம் கூறுகிறாயே, அந்த சிகரெட்டை அளிக்கிறாயே, உன்னைக் குறித்து உனக்கு வெட்கமேயில்லையா-?” என்றேன். 192. அதற்கு அவள், “பிரசங்கியே, நான் உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். அன்றைய இரவில் இது தான் உன்னுடைய கடைசி தருணம் என்று என்னிடம் கூறினீர்களே அதைக்குறித்து உங்களுக்குத் தெரியுமா-?” என்றாள். , நான், “ஆமாம், எனக்கு நினைவில் இருக்கின்றது,” என்றேன். 193. அதற்கு அவள், "நீர் அவ்விதமாகக் கூறினது சரியே,” என்றாள். மேலும் அவள், "அன்று முதற்கொண்டு என் ஆத்துமா மிகவும் கடினமாக இருக்கின்றது,” என்றாள். அவள் கூறினாள்... இதோ அவள் எடுத்துரைத்த காரியம். அதை நினைக்கும் போது என் முதுகு பகுதி முழுவதுமாக நடுங்க வைக்கின்றது, அவள், "என் தாயின் ஆத்துமாவானது நரகத்தில் ஒரு பணியாரம் எண்ணெயில் பொறிக்கப்படுவது போல பொறிக்கப்படுகின்றதையும், அவளை நோக்கி சிரிக்கப்படுவதையும் என்னால் காணமுடிகின்றது,” என்றாள். 194. அந்த நிலையில் இருக்கத் தக்கதாக நீங்கள் அங்கே செல்ல விருப்பமா-? அவரைப் புறக்கணிக்க வேண்டாம். ஆகவே சரியாக இப்பொழுதே முன்னே வந்து இவர்களோடு கூட சேர்ந்து நீங்களும் நிற்பீர்களா-? வீட்டிற்கு வாருங்கள். வீட்டிற்கு வாருங்கள்... 195. இயேசுவை புறக்கணித்தல், அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவரை கடைசி முறையாக புறக்கணிக்க நேரிடும். ... வீட்டிற்கு வாருங்கள்; அக்கறையுடனும், கரிசனையுடனும்..... 196. அவர் தம்முடைய எல்லா சந்திப்புத்திட்டங்களையும் காத்துக்கொள்கின்றார். இப்பொழுது அவருடனான ஒரு சந்திப்பின் நேரமானது உங்களுக்குக் கிடைத்து இருக்கின்றது. ஒன்று நீங்கள் அவரை இங்கே சந்திக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் அவரை நியாயந்தீர்ப்பில் சந்திக்கப் போகிறீர்கள். ஓ பாவியே, வீட்டிற்குள் வா என்றழைக்கிறார்-! 197. உங்களுக்குத் தெரியுமா, நான் மிகவும் ஆச்சரியம் கொள்கின்றேன். என் இருதயம் மிக விசித்திரமான உணர்வைப் பெற்றுள்ளது. நான் இன்றைக்கு ஜெபித்துக் கொண்டிருந்த போது, நான் நினைத்தேன்... பேசுவதற்கென வேறொரு செய்தியை வைத்திருந்தேன். இதைச் செய்யும்படிக்கு அவர் என்னிடமாகக் கூறினார். இதைக் கூறவேண்டுமென்று என்னிடமாக அவர் கூறினார். குட்டை மயிரைக் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் இங்கே பீடஅழைப்பின் போது நின்று இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். பாருங்கள், நீங்கள் மிகவுமாக கடினப்பட்டு மிகவுமாக அகன்று சென்று விடுகிறீர்கள். காரியமானது எழும்பி வருகின்ற நேரத்திலே அந்தக் கோட்டைக் கடந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்காமல் சென்று விடுகிறீர்கள், பாருங்கள். அது நிச்சயமாக நடக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் நினைப்பதைக் காட்டிலும் காலமானது மிகவுமாக கடந்து சென்று விட்டது என்று நான் நினைக்கின்றேன். நினைவில் கொள்ளுங்கள், இரத்தமானது என் கைகளில் இல்லை, தேவனுடைய ஆலோசனை ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் அது இருக்கின்ற விதமாகவே அதை நான் அறிவித்து உள்ளேன். 198. நினைவில் கொள்ளுங்கள், உள்ளே இருக்கின்ற ஏதோ ஒன்று வெளியில் உள்ளதை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அருமை சகோதரியே அதினின்று அப்பாலே செல்லுங்கள். சகோதரனே, அவளுடைய கரத்தைப் பிடித்து இங்கே மேலே வாருங்கள். ஏன் நீங்கள்... ஏன் நீங்கள்... ஒரு உண்மையான கிறிஸ்தவளாக இருக்க உங்களுக்கு விருப்பமில்லையா-? இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் பாதி வழி வாழ்க்கை வாழ்ந்து ஆக்கினைக்குள்ளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையினால் என்ன பிரயோஜனம்-? அவ்விதமான ஒரு வாழ்க்கையில் நீங்கள் வாழவேண்டாம். "உம், எனக்கு...'' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் என்ன செய்திருந்தாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. உங்கள் கனிகளினாலே தான் நீங்கள் அறியப்படுகின்றீர்கள். 199. நான் இடைவெளியில்லாமல் தொடர்ந்து அமெரிக்கா முழுவதுமாக சென்று வருகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் அமெரிக்கா பிரதேசம் முழுவதுமாக கடக்கையில் அது இன்னுமாக மிக மிக மோசமாகத் தான் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஆகவே, ஏதோ ஒரு தவறு இருக்கின்றது என்று எனக்குத் தெரியும் கிருபையின் நாட்கள் கடந்து கொண்டே இருக்கின்றன. இங்கே டாம்பாவில் (Tampa) அது நிகழும்படிக்குச் செய்யாதீர்கள். மிகப்பெரிய, மகத்தான புகழ் பெற்ற ஒரு நகரத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். இந்நகரத்தில் ஹாலிவுட்டைப் போலவே எல்லாமே முழுவதுமாக கவர்ச்சிகரமாக இருக்கின்றது. 200. முழு உலகமே அசுத்தத்தால் சீர்குலைந்து போயுள்ளது. தொலைக்காட்சிகளில் இருப்பவை எல்லாமே அந்த முழு அசுத்தம், மிக அவலட்சணமான, பச்சையான (vulgar) அசுத்தமான காரியங்களே. அதை ஒரு உதாரணமாக, மாதிரியாக (pattern) வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வீர்களா-? நீங்கள் அவரை... அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்க மாட்டீர்களா-? சரியான காரியங்களாக இருக்கின்ற இவைகளை செய்ய உங்களுக்கு விருப்பமில்லையா-? 201. நீங்கள் இன்னுமாக பரிசுத்த ஆவியைக் கொண்டு இருக்கவில்லை என்று உத்தமமாக கூறும் எத்தனைப் பேர் இங்கே இருக்கின்றீர்கள்-? கண்ணாடியிலே உங்களைப் பார்த்து, நீங்கள் இன்னுமாக பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்று அறிந்துக் கொள்ளுங்கள். உங்கள் -உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாருங்கள், நீங்கள் காரியங்களை எப்படி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை சற்று பாருங்கள். 202. நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்துக் கொண்டு இருப்பதால் அல்ல - "நான் மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்தவன், பிரஸ்..." அது எல்லாம் சரி தான். அதற்கெதிராக நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் உங்களைக் கேட்பது எல்லாம் என்ன என்றால், உங்களுக்கு இயேசு கிறிஸ்துவைத் தெரியுமா-? அவர் உங்களுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறாரா-? அப்படியென்றால், அவர் தம்மைத் தாமே அங்கே அடையாளப்படுத்திக் கொள்வார். அவர் உள்ளே இருக்கிறார் என்றால் அவர், தம்மை தாமே உங்களுக்குத் தெரியப்படுத்தியே ஆக வேண்டும். உங்களால் அவரை மறைக்க முடியாது; அவர் வெளியே இருக்கின்றார். 203. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை, அதைப் பெறவில்லை என்று கூட நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் உத்தமமாக இருங்கள். "நான் இன்னுமாக பரிசுத்த ஆவியைக் கொண்டு இருக்கவில்லை. நான் அதைப் பெறவில்லை என்று எனக்குத் தெரியும்” என்று கூறுங்கள். அந்த விதமான உத்தமத்திற்காக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த உத்தமத்தை தேவன் கனம் பண்ணுவார். உங்களுக்கு பரிசுத்த ஆவி தேவை என்றால் நீங்கள் இங்கே முன்னே வந்து இவர்களுடன் கூட, தன் பாவங்களுக்காக மனந்திரும்புகின்ற இவர்களுடன் கூட இப்பொழுது வந்து நிற்பீர்களா-? இந்த சமயத்தில் நீங்கள் வரலாமல்லவா-? நாங்கள் இந்தப் பாடலை பாடும்போது நீங்கள் மேலே வந்து நில்லுங்கள். "சகோ.பிரன்ஹாமே, அது எனக்குத் தேவை,” என்று கூறுங்கள். அப்படிச் செய்யும் போது என்ன ஆகுமென்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று கொண்டு இருக்கப் போகிறீர்கள். அது முற்றிலும் சரியே. 204. இப்பொழுது, நீங்கள் நினைவுகூறுங்கள். தேவன் உங்களிடம் பேசுகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அது இயேசு கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இந்த வாரத்தில் நீங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு அது கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி, அப்படியானால் உங்கள் இடமானது பீடத்தண்டை தான் உள்ளது. 205. பெண்களே, உங்களுக்கு வெட்கம் உண்டாவதாக-! ஆண்களே, அவள் அவ்விதமாக செய்யும்படிக்கு அனுமதிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கம் உண்டாவதாக-! இங்கே உள்ள ஆண்களே, அந்த விதமான காரியங்களை நீங்கள் செய்கின்றீர்கள். 206. மேய்ப்பர்களாகிய நீங்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைக்கு பதிலாக அந்த மகத்தான டாலருக்காக (பணம்-தமிழாக்கியோன்) சபை மக்கள் அந்த விதமான ஒரு சீர்கேடான நிலையை அடையும்படிக்கு செய்துள்ளீர்களே, ஏதோ ஒரு ஸ்தாபன கொள்கைக்காக..... 207. நான் வாசிக்கின்ற அதே வேதாகமத்தைத் தான் நீங்கள் வாசிக்கின்றீர்கள். உங்களைக் குறித்து உங்களுக்கு வெட்கமில்லையா-? அழுக்கு படிந்த பாதத்துடன் இயேசு இருக்கின்றார். நீங்கள் அதைக் கண்டு அதற்காக ஒரு நிலையை எடுத்து நிற்கும்படியான உண்மையான கிறிஸ்தவ வீரமானது. உங்களிடமாக இல்லையா-? அதை நீங்கள் கொண்டிருக்கின்ற ஒரு தோற்றத்தைத் தான் காண்பிக்கிறீர்கள். 208. தேவன் இரக்கமாயிருப்பாராக. இந்த ஜனத்திரளானது எங்கே உட்கார்ந்து இருக்கின்றது என்பதை உணரும்படிக்கான ஒரு திட நம்பிக்கை கொள்ளும்படிக்கு இப்பொழுது பரிசுத்தாவியை தேவன் அனுப்பவேண்டுமென்று ஜெபிக்கின்றேன். 209. இது தான் உங்களுக்கென அளிக்கப்பட்டுள்ள தருணம் என்கின்ற உணர்வு உள்ளவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா-? அந்த செய்தி கொண்டு செல்லும் பணி செய்த அந்த ஆள் செய்ததைப் போலவே நீங்கள் செய்யப் போகிறீர்களா-?, உங்களுடைய கடைசி தருணத்தை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும்படிக்கு விட்டு விடப்போகிறீர்களா-? அதை நீங்கள் செய்யப் போகிறீர்களா-? அதை நீங்கள் ஒருக்காலும் செய்யாதீர்கள். உங்களுக்கு ஏதாவதொரு சந்தேகம் இருக்குமானால் அல்லது ஏதாவது தவறில் இருப்பீர்களானால், நேராக இங்கே பீடத்தண்டையில் உங்கள் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது தான் உங்களுடைய இடமாகும். "ஆம், எனக்கு எதுவுமே வேண்டாம்..." என்று கூறலாம். 210. அவர்களும் கூட அது வேண்டாமென்று தான் கூறினார்கள். இயேசு அங்கே உட்கார்ந்து இருந்த போது அவர்கள் அங்கே அவரிடமாகச் சென்று அவர் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் அவரிடமாகச் சென்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவர்கள் சபைக்கு எதிரானதாக இருந்தது. அதைக் குறித்து... அது அவருக்கு எதிரானதாக இல்லை. ஆனால் அந்த சிறு ஸ்திரீயோ அதைக் குறித்து அவள் அக்கறைக் கொள்ளவே இல்லை. தான் ஒரு பாவி என்று அவள் அறிந்திருந்தாள். அவள் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டாள். 211. என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. அவர்கள் இன்றிரவு எங்கே இருக்கின்றனர்-? அந்த ஸ்திரீ இன்றிரவு எங்கே இருக்கின்றாள், நீங்கள் அதை நினைத்துப் பார்க்கிறீர்களா-? மிக பக்தியான ஒரு மனிதனாக அவன் இருந்து இருந்தும் இன்றிரவு அந்த பரிசேயன் எங்கே இருக்கின்றான்-? அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்று அவர்கள் இருவரும் கூறுவதை நீங்கள் கேட்கலாம், எந்த நேரத்திலும் நீங்கள் அவளுடைய இடத்தை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் எவ்வளவாக பக்தி நிறைந்தவர்களாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள்... இயேசு ஒவ்வொரு சந்திப்பு திட்டத்தையும் காத்துக் கொள்கிறார், ஒவ்வொரு கட்டளையையும் காத்துக் கொள்கிறார், நீங்கள் பதிலளிக்க வேண்டிய ஒவ்வொரு கட்டளையையும் அவர் காத்துக் கொள்கிறார். 212. ஆகவே, நீங்கள் இன்னுமாக பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளவில்லை எனில், நீங்கள் இப்பொழுது வந்து விடுவது நல்லது. நீங்கள் பெற்றுத்தானாக வேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்போஸ்தலர் நடபடிகளில் அவர் கூறியுள்ளார், பேதுரு அதைச் செய்தான், ''நீங்கள் மனந் திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்பிற்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள், வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ள யாவருக்கும் உண்டாகி இருக்கிறது” என்று கூறினான். அவர் எவ்வளவு காலமாக அழைத்துக் கொண்டிருக்கின்றாரோ, அவர் இன்னுமாக பரிசுத்தாவியை அளித்துக் கொண்டிருக்கிறார். 213. நாங்கள் பாடலை மறுபடியுமாக பாடுகையில் நீங்கள் வரலாமல்லவா-? இப்பொழுது, இது தான் என்னுடைய கடைசி தருணமாகும். நினைவில் கொள்ளு ங்கள், கிறிஸ்து இங்கே இருந்தார், நீங்கள் எல்லோருமே உங்கள் கரங்களை உயர்த்தி அது அவர் தான் என்றும் அவருடைய வார்த்தை தான் என்றும், அடையாளப்படுத்தினீர்கள். என் இருதயத்தின் ஆழத்தில் இருக்கின்ற கிறிஸ்து, அவர் தாமே துயரப்படுகின் றார். 214. ஒரு சமயத்தில் எருசலேமை நோக்கிப் பார்த்து, எழுந்து நின்று, "எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளை அடைகாத்து அருகணைத்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் மேல் வந்து உன்னை கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என்றார். 215. அநேக முறைகள் நான் வரும் போது... இன்று காலை ஆகாரக் கூட்டத்தின் போது நான் கூறினதுபோல - அருமையான பெந்தெகோஸ்தே மக்களாகிய நீங்கள், மற்றும் எல்லா விதமான மக்களாகிய - நான் உங்களிடையே வரும் போது, என்னுள் இருக்கின்ற பரிசுத்தாவியானவர் எத்தனை தரம் நான் அவர்களைக் கூட்டி சேர்த்துக் கொள்ள மனதாய் இருந்தேன். இன்று சபையானது அதனுடைய வல்லமையில் எப்படியாக இருந்திருக்கும். ஆனால் உனக்கோ மனதில்லாமற் போயிற்று” என்று கூறுகின்றார். பாருங்கள், உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இப்பொழுது நீங்கள் அதைச் செய்வீர்களா-? இது தான் நேரமாகும். பாரமான யாவற்றையும், உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விடுங்கள். நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். 216. இன்னும் ஒரு முறை நாங்கள் அழைப்பை விடுக்கையில், இப்பொழுது எல்லாரும் என்னோடு சேர்ந்து பாடுங்கள். எழுந்து நில்லுங்கள், நேராக இங்கே வாருங்கள். ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் இன்னுமாக பெறவில்லை எனில், நீங்கள் ஒரு பாவியாய் இருந்தால், பின்மாற்றம் அடைந்தவரானால், நீங்கள் என்னவாய் இருந்தாலும் சரி, மேலே வாருங்கள். நாம் ஒன்று சேர்ந்து ஜெபிப்போம். இப்பொழுது வருவீர்களா-? இது தான் எங்களுடைய கடைசி அழைப்பு ஆகும். மிருதுவாகவும் கரிசனையாகவும் இயேசு அழைக்கின்றார் உன்னையும் என்னையும் அழைக்கின்றார். அவர் நுழை வாயிலில் காத்திருந்து கவனித்துக் கொண்டு இருப்பதைப் பார். உனக்காகவும் எனக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார். 217. இன்றிரவு விடுக்கப்படுகின்ற இந்த பீடஅழைப்பை அந்த பரிசேயன் பின்னாலே உட்கார்ந்து கொண்டு கேட்டால் எப்படியிருக்கும்-? அவன் என்ன செய்வான்-? வீட்டிற்கு வாருங்கள், வீட்டிற்கு வாருங்கள் 218. அவன் தன்னுடைய நாளை பாவங்களைச் செய்து கழித்து விட்டான். அதே காரியத்தை நீங்களும் செய்யப் போகிறீர்களா-? அந்த செய்தி கொண்டு செல்லும் வேலையைச் செய்யும் அந்த பையன் இயேசுவுக்கு முன்பாக மறுபடியும் நின்றால் எப்படி இருக்கும்-? முதல் காரியமாக என்ன இருக்கும் ) வீட்டிற்கு வா அக்கறையுடனும் கரிசனையுடனும் இயேசு அழைக்கின்றார் ஓ பாவியே வீட்டிற்கு வா என்று அழைக்கின்றார்-! வீட்டிற்கு வாவீட்டிற்கு வா (ஓ தேவனே) சோர்ந்து போயுள்ளவர்களே... வாருங்கள் 219. இன்றைக்கு பூமியில் இருக்கும் அடையாளங்கள் உனக்கு வருத்தத்தை அளிக்கிறதா, அது என்ன என்று அறிந்திருக்கிறாயா-? அல்லவென்றால் நீங்கள் அந்த இடத்தை கடந்து சென்று விட்டீர்களா-? உங்களில் அந்த மிருதுவான இடம் இருக்கின்றதா-? அப்படியென்றால், வாருங்கள். அவர் உள்ளே வரட்டும், அந்த இடத்தை அவர் எடுத்துக் கொள்ளட்டும். அவர் உங்களை ஒரு புது சிருஷ்டி ஆக்குவார். நீங்கள் முன்பு இருந்ததை விட மிகவும் மகிழ்ச்சியுள்ள ஒருவராக இந்த இடத்தை விட்டுச் செல்வீர்கள். ஓ பாவியே வீட்டிற்கு வா என்று அழைக்கின்றார்-! 220. இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், மந்த ஓசையில் வாய் திறவாது இந்தப்பாடலைப் பாடுவோம். இப்பொழுது நீங்கள் வரலாமல்லவா-? வாலிப மனிதரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சோர்ந்து போயுள்ளவர்களே வீட்டிற்கு வாருங்கள். ஓ, பின்மாற்றக்காரனே, வீட்டிற்கு வா. அக்கறையுடனும், கரிசனையுடனும்..... 221. அக்கறையுடையவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா-? நீங்கள் உறுதி கொண்டு இருந்தால், அப்பொழுது நீங்கள் அக்கறை கொள்வீர்கள், ஆனால் அது இயேசு தான் என்று இன்னுமாக நீங்கள் உறுதிக் கொள்ளாமல் இருப்பீர்களானால், அப்பொழுது உங்களால் அக்கறை கொள்ள முடியாது. வீட்டிற்கு வா.. 222. இப்பொழுது இங்கே பொது ஜனங்களின் மத்தியில், உங்களால் அதிகம் பேச முடியாது, ஏனென்றால் அறிக்கை செய்யத் தான் நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். 223. சில காலங்களுக்கு முன்னர் ஒரு சிறு சம்பவமானது என்னிடமாகக் கூறப்பட்டது. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். டானி மார்ட்டீன் என்னும் பெயரைக் கொண்ட ஒரு மனிதன் இருந்தார். அவர் தேசமெங்கிலும் மேலும் கீழும் சென்று அநேக எழுப்புதல் கூட்டங்களை நடத்தினார். ஒரு இரவில் சொப்பனத்தில் தான் மரித்துப் போனதாக அவர் கண்டார் என்று அவர்கள் கூறினார்கள். அவர் பரலோகத்திற்கு உள்ளாக செல்லத் தொடங்கினார், அப்பொழுது பரலோக வாசலில் அவரை ஒருவர் நிறுத்தினார். "இங்கே வருவது யார்-?” என்று கேட்டார். 224. அதற்கு அவர், “நான், டானி. மார்ட்டீன், நான் ஒரு சுவிசேஷகன்” என்றார். 225. அப்பொழுது வாசலில் இருந்த அந்த மனிதன், "உங்கள் பெயர் இங்கேயுள்ள இந்த புத்தகத்தில் இருக்கிறதா என்று பார்க்கலாம்,” என்று கூறினார். பார்த்த பிறகு, "உங்கள் பெயர் இங்கே இல்லை,” என்றார். அதற்கு அவர், "ஓ, நான் ஊழியக்காரனாக இருந்தேன்” என்றார். 226. அதற்கு அந்த மனிதன், ''நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் பெயர் இங்கே இல்லை என்றால் உங்களால் இந்த கதவிற்குள் பிரவேசிக்க முடியாது, அது மிகவும் இறுக்கமாகத் தாளிப்பட்டுள்ளது. உங்கள் பெயர் இங்கே இருந்தாலொழிய... இந்த புத்தகத்தில் உங்கள் பெயர் இருந்தாக வேண்டும்,” என்று கூறினார். அதற்கு டானி மார்ட்டீன், “அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்-?” என்று கேட்டார். 227. அதற்கு அந்த மனிதன், "நீங்கள் விரும்பினால் தேவனுடைய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை நோக்கி மேல் முறையீடு, அப்பீல் செய்யலாம்,” என்று கூறினார். ஓ, சகோதரனே, சகோதரியே, அந்த வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பிற்கு ஒருக்காலும் செல்ல விரும்பாதீர்கள். 228. அப்பொழுது அவர், ''என் காரியத்தைக் குறித்து மேல் முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியும் எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார். 229. பிறகு அவர் கூறினார். அப்பொழுது அவர் முடிவாக எங்கோ செல்ல ஆரம்பித்தது போல இருந்தது; தான் எங்கே இருக்கின்றோம் என்றும் கூட அவருக்குத் தெரியவில்லை. இது அந்த மனிதனின் சொப்பனமாகும். மேலும் அவர், “நான் ஒரு ஒளிக்குள்ளாக வந்தேன் அது... அது எந்த ஒரு இடத்திலிருந்து வந்தது என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அப்பொழுது என் நடையின் வேகம் குறைந்தது, சிறிது நேரத்திற்கு பிறகு நான் நடப்பதை நிறுத்தினேன். அப்பொழுது ஒரு சத்தம், “என்னுடைய நியாயத் தீர்ப்பின் சிங்காசனத்தை நோக்கி நியாயத் தீர்ப்பிற்காக நடந்து வருவது யார்-?” என்று கூறினதை நான் கேட்டேன்,” என்றார். 230. அதற்கு, "நான் தான், டானி மார்ட்டீன். அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சுவிசேஷகனாவேன். நான் - நான் - நான் - நான் ஆத்துமாக்களை சம்பாதித்தவன், ஆனால் என்னை அங்கே வாசலில் தடுத்து நிறுத்தி அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்,” என்று கூறினார். 231. அதற்கு அவர், "அது சரி, என்னுடைய நீதிமன்றத்தில் உன்னுடைய வழக்கு விசாரிக்கப்பட மேல் முறையீடு செய்திருந்தாயானால் நீ நியாயந்தீர்க்கப்பட்டாக வேண்டும், அது எனக்குத் தேவையாயிருக்கிறது,” என்றார். அதற்கு டானி, "நான் கற்பனைகளைக் கைக்கொண்டு வந்தேன்,” என்றார். அதற்கு அவர், "டானி மார்ட்டீன், உன் வாழ்க்கையில் நீ எப்பொழுதாவது பொய் சொல்லி இருக்கின் றாயா-?” என்று கேட்டார். . 232. அதற்கு டானி, "நான் ஒரு உண்மையுள்ள மனிதனாகத் தான் இருந்தேன் என்று நினைத்தேன். ஆனால் அந்த ஒளியின் பிரசன்னத்தில் நான் செய்து இருந்த சில காரியங்கள் சந்தேகத்திற்கிடமானதாகவும் நேர்மையற்றதாகவும் இருந்ததை நான் உணர்ந்தேன்,” என்றார். மேலும் அவர், "ஆம் ஐயா, நான் பொய்களைச் சொன்னேன்,” என்றார். "நீ எப்பொழுதாவது திருடியிருக்கின்றாயா-?” என்றார். அதற்கு டானி, "நான் உத்தமனாக இருந்தேன் என்று நினைத்தேன், ஆனால் அப்பொழுது சில காரியங்களை நான் செய்திருந்தேன்,” என்றார். 233. அப்படியானால் அந்த ஒளியின் பிரசன்னத்திற்குள்ளாக செல்லும் வரைக்கும் சற்று காத்திரு. இப்பொழுது நீங்கள் சரியாகத் தான் இருக்கின்றீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள், ஆனால் அந்த ஒளியின் பிரசன்னத்திற்குள் செல்லும் வரைக்கும் சற்று பொறுங்கள். குட்டைத் தலைமயிருடனும், சிகரெட்டுப் புகைத்துக் கொண்டும் ஒரு முறை அவரை அணுக முயலுங்கள் பார்க்கலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நான் அதை வெறுமனே கூறுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? இங்கே வேதாகமத்திலிருந்து அதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன். அது முற்றிலும் சரியே. குட்டைக்கால் சட்டைகளையும், நீண்ட கால் சட்டைகளையும் அணிந்து கொண்டு அவரை அணுக முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்-? வேதாகமமானது அது தேவனுடைய பார்வையில் அருவருப்பானது என்று கூறியிருக்கையில் நீங்கள் எந்நிலையில் உள்ளீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். ஒரு முறை முயற்சி செய்யுங்கள். உங்களுடைய மனசாட்சி எங்கே உள்ளது-? அவர், "சரி, நீ இந்த காரியத்தைச் செய்துள்ளாய் அல்லவா-? அதைச் செய்து இருக்கின்றாய் அல்லவா-?” என்றார். “ஆமாம்,” என்று கூறினார். "டானி, நீ எப்பொழுதாவது பாவம் செய்திருக்கின்றாயா-?” என்றார். அதற்கு டானி, "ஆம் நான் பாவம் செய்துள்ளேன்,” என்றார். 234. அப்பொழுது "என்னுடைய பிரசன்னத்தை விட்டு என்றென்றுமாய் இருக்கும் நரகத்திற்குள்ளாக கடந்து செல்,” என்று கூறவிருக்கின்ற ஒரு சத்தத்தை அவர் கேட்க ஆரம்பித்தார்... அவ்விதமாகக் கூறப்படப் போவதைக் கேட்க ஆயத்தப் படுகையில் தன்னுடைய எலும்புகள் அதனுடைய இணைப்புகளிலிருந்து வெளியே வருவது போலக் காணப்பட்டது, என்றார். 235. அப்பொழுது அவர் இதுவரை கேட்டிராத ஒரு இனிமையான ஒரு சத்தத்தை அவர் கேட்டார், அது என்ன என்று பார்க்கும்படிக்கு தான் திரும்பினதாகக் கூறினார். அப்பொழுது, தான் இதுவரையில் கண்டிராத ஒரு இனிமையான முகத்தை அவர் கண்டார் என்றும் கூறினார்.' 236. அப்போது அவர், “பிதாவே, அது உண்மை தான், எப்படி ஜீவிக்க வேண்டும் என்று டானி அறிந்திருந்த வரைக்கும் அதன் ஒவ்வொன்றையும் ஜீவிக்க ''டானி,'' முயற்சி செய்தான், ஆனாலும் அவன் தவறும் கூட செய்தான். ஆனால் ஒரு காரியத்தை அவன் செய்தான். கீழே பூமியில் அவன் எனக்காக நின்றான். அவன் எனக்காக நின்றான், எனக்காகவும், என்னுடைய எல்லா வார்த்தைக்காகவும் காரியத்தை எடுத்துச் செய்தான். இங்கேயும் இப்பொழுது எனக்காக நிற்பான்,” என்று கூறினதாக டானி கூறினார். 237. அதைத் தான் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இங்கே அவருக்காக ஒரு நிலையை எடுத்து நிற்கின்றீர்கள். அவரும் பிதாவின் முன்னிலையில் உங்களுக்காக ஒரு நிலையை எடுத்து உங்களுக்காக நிற்பார். 238. கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுது நீர் தாமே இரக்கமுள்ளவராக இருக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இந்த மக்களின் பாவங்களுக்கான மன்னிப்பை அருளும். ஒரு நிலையை மேற்கொண்டு நின்ற அவர்கள் இங்கே வந்து உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கப்பட அருளச் செய்யும். கர்த்தாவே, இவர்கள் இந்த ஜனக்கூட்டத்திற்கு முன்பாக ஒரு சாட்சியாக இங்கே நிற்கையில், உம்முடைய மகிமைக்கென்று அவர்களை நான் உரிமை கோருகிறேன். 239. அவர்களின் சிலர் சபை அங்கத்தினர்கள் ஆவர், சிலர் பின்மாற்றம் அடைந்தவராவர், சிலர் உம்மை இதற்கு முன்னர் ஏற்றுக் கொள்ளாதவர்கள், அவர்கள் எல்லோரும் இங்கே நிற்கின்றனர். ஒரு உண்மையான, உத்தமமான கிறிஸ்தவ அறிக்கைக்குப் பிறகு பின் தொடரும் அழுக்குப்படிதலை அவர்கள் காண்கின்றனர். அந்த ஸ்திரீயைப் போன்று இவர்களும் இப்பொழுது ஒரு நிலையை எடுத்து நின்று தாங்கள் பாவிகள் என்று அறிக்கை செய்ய தயாராக இருக்கின்றனர். தங்கள் மனந்திரும்புதலின் கண்ணீரினாலே உம்முடைய நாமத்தின் பேரில் படிந்துள்ள அழுக்கை கழுவி சுத்தம் செய்ய 'அவர்கள் விரும்புகின்றனர், கர்த்தாவே, அவர்கள் அதைச் செய்யும்படிக்கு அதை அருளுவீராக. 240. இப்பொழுது, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கே நீங்கள் இந்த பொது ஜனத்திற்கு முன்பாக இருக்கத் தேவையில்லை. அங்கே பின்னாலே உங்களுக்கென அறைகளை ஆயத்தப்படுத்தியுள்ளோம். நீங்கள் மனந்திரும்ப விரும்பினால் நீங்கள் திரும்பி அங்கே செல்வதற்கு முன்னால், அங்கே பின் பக்கமாக செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே படியின் வழியாக ஏறி இங்கே வாருங்கள். ஆகவே தான்.... அங்கே அந்த வழியினூடாகச் செல்லுங்கள். நீங்கள் எனக்காக அதை இப்பொழுது செய்வீர்களா-? நேராக இங்கே இதன் வழியாக வாருங்கள். நண்பனே, இங்கே உனக்காக இடங்களை ஆயத்தப் படுத்தி வைத்துள்ளோம். நேராக இந்த வழியாக மேலே ஏறி வாருங்கள். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. 241. இப்பொழுது அவர்கள் அங்கே செல்கையில் இங்கே வரவேண்டும் என்று விருப்பம் கொள்கிற இன்னும் சிலர் யாராவது இங்கே இருக்கிறீர்களா-? இக்கூட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் இங்கே வந்து திரும்பிச் செல்லலாம். இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்கள் உங்களை சந்திப்பார்கள். இந்த இரவு இதற்காகத் தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தான் சமயமாகும். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதை இது வரைக்கும் பெற்றுக் கொள்ளவில்லை எனில், அதைப் பெற்றுக் கொள்வதற்கு இது தான் சமயமாகும். தேவனுடன் உங்களைச் சரிப்படுத்திக் கொள்ள இது தான் சமயமாகும். இன்னுமாக நீங்கள் தேவனுக்கென்று ஒரு நிலையை, தீர்மானத்தை மேற்கொள்ளலாம். இப்பொழுது, நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், அங்கே அவர் உங்களுக்காக நிற்க மாட்டார். உங்கள் உடைய வாழ்க்கையை தேவனிடமாக சமர்ப்பியுங்கள். 242. கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. ஒவ்வொருவரும் செல்வது போலக் காணப்படுகிறது. அவர்கள் உண்மையாகவே மிகவும் உத்தமமானவர்களாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீண்ட காலத்திற்கு பிறகு டாம்பாவில் நாம் கண்டதிலேயே மிகவும் மகத்தான ஒரு இரவாக இது இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். இன்னும் யாராவது சிலர் இப்பொழுது முன்னே வருவீர்களா-? அங்கே மக்களுடன் செல்வது இங்கே பணி செய்யும் பணியார்களே. அவர்கள் தங்கள் அடையாளக் குறியுடன் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே அவர்கள் உடன் இருக்கத் தக்கதாக நாங்களும் இன்னும் சில நிமிடங்களில் அங்கே உள்ளே செல்ல இருக்கின்றோம். அவர்கள் உள்ளே இன்னுமாக கட்டிடத்தில் இருப்பார்கள். சகோதரர்களாகிய நீங்கள் அங்கே உள்ளே சென்று அவர்களுடனே இருங்கள், செல்லுங்கள், அங்கே அறையில் அவர்களைத் தனித்தனியாக பிரித்து வையுங்கள். இன்னும் ஒரு நிமிடத்தில் நான் உங்களுடனே இருப்பேன். 243. மக்கள் உள்ளே சென்றுக் கொண்டு இருக்கையில் இன்னும் யாராவது சீக்கிரமாக வரலாமல்லவா-? வந்து அப்படியே நில்லுங்கள். 244. இந்த நாளிலே இயேசு அப்படியே உட்கார்ந்திருக்கும் படிக்கு அப்படியே நீ விட்டு விடுவாயா-? நீங்கள், "நான் மட்டும் அங்கே அந்த சமயத்தில் இருந்து இருப்பேனானால், அங்கே அவர் யாரும் கவனிப்பாரற்று உட்கார்ந்திருப்பதை நான் பார்ப்பேனானால், அவர் அப்படியே இருக்கும்படி விட்டுவிட மாட்டேன்,” என்று கூறலாம். அப்படியானால் சரியாக இப்பொழுதைக் குறித்து என்ன-? இப்பொழுது நீங்கள் கொண்டு இருக்கின்ற மனப்பான்மையானது அந்த நாளில் நீங்கள் எப்படி இருந்து இருப்பீர்கள் என்பதை அடையாளம் காண்பிக்கிறது. பாருங்கள்-? இப்பொழுது நீங்கள் கொண்டு இருக்கின்ற மனப்பான்மையானது இந்நேரத்தில் உங்களிடம் எந்த ஒரு குறையும் இன்றி நலமாகத்தான் இருக்கிறீர்கள் என்பதாக நீங்கள் உணரும்படிக்குச் செய்கின்றதா-? சரி, அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் இருக்கின்ற ஒன்றாகும். நீங்கள் இப்படி அப்படி என்று நியாயம் தீர்ப்பது எனக்கானதல்ல. நான் வார்த்தைக்கு மாத்திரம் பொறுப்பாளி. புரிகின்றதா-? இங்கே இக்கூட்டங்களில் அவர் இருக்கின்றார். அவர்களும் கூட சபைகளை விட்டு வெளியே வந்தவர்களே, ஆனால் சரியாக இப்பொழுதே காரியத்தை சரி செய்யப் போகின்றார்கள். அவ்வளவு தான். அவர்கள் ஆயத்தமாய் இருக்கிறார்கள், எதற்காக நீங்கள் ஒரு பாதி வழி கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள்-? ஒன்று தேவனுக்காக நில்லுங்கள் அல்லது அவருக்கு எதிராக நில்லுங்கள், அதினாலே உலகமானது உங்கள் நிறத்தையும் மற்றும் நீங்கள் எந்த ஒரு நிலையில் நிற்கின்றீர்கள் என்பதை கண்டறிந்து கொள்ளுமே. 245. அவர்கள் செல்கையில் தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. தங்களுக்கு தாங்களே மரிக்கும்படிக்கு தானே அவர்கள் உள்ளே செல்கின்றனர். அவர்கள் தங்கள் ஜீவனை அளிக்கும்படிக்குச் செல்கின்றனர். அவர்கள் கல்வாரிக்கு செல்கின்றனர். அவர்கள் உலகத்தின் காரியங்களுக்கும், நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்நாளின் கவர்ச்சியூட்டுகின்ற நவநாகரீகங்களுக்கும் சிலுவையில் அறையப்படும்படிக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் மரிக்கும்படிக்கு செல்கின்றனர். அவருடைய பிரசன்னமானது சரியாக இப்பொழுது இங்கே இருக்கின்றது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே மரித்து இயேசு கிறிஸ்துவுக்கு உள்ளாக புது சிருஷ்டியாக பிறக்கும்படிக்கு செல்கின்றனர். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக.. ' நாம் இப்பொழுது மெதுவாகப் பாடுகையில் இங்கே வரவேண்டுமென்று வேறு யாராவது இருக்கின்றனரா-? அக்கறையுடனும், கரிசனையுடனும் இயேசு அழைக்கின்றார் ஓ பாவியே வீட்டிற்கு வா என்று அழைக்கின்றார்-! வீட்டிற்கு வாவீட்டிற்கு வா.... நீங்கள் அதைச் செய்வீர்களா-? வீட்டிற்கு வா சோர்ந்து போயுள்ளவர்களே வீட்டிற்கு வாருங்கள் 246. இப்பொழுது, அக்கறையுடனே பரிசுத்தாவியானவர் என் இருதயத்தில் இருந்துக் கொண்டு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார். மிக அநேகம் பேர் அதை தவற விட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று எனக்குத் தெரியும். ஓ பாவியே வீட்டிற்கு வா என்று அழைக்கின்றார்-! 247. மாடி முகப்புகளில் இருந்தும், எல்லா இடங்களிலும் இருப்பவர்களே, நான் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவை அளிக்கின்றேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா-? நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா-? என் சகோதரியே, ஏற்றுக் கொள்வீர்களா-? என் சகோதரனே, ஏற்றுக் கொள்வீர்களா-? வாருங்கள், வந்து உங்கள்... உங்கள் பொருத்தனைகளை புதுப்பித்து, அவருக்கு ஊழியம் செய்வேன் என்று ஒரு உறுதிப் பிரமாணத்தை மேற்கொள்ளுங்கள். 248. நான் பகுத்தறிதலின் கீழ் இல்லாதிருந்தால் நான் இங்கே நின்று கொண்டு அதைக் கூறிக்கொண்டு இருந்திருக்க மாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாரோ ஒருவருக்கு அவருடைய கடைசி அழைப்பானது சென்றுக் கொண்டு இருக் கின்றது. ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் ஜனங்களை வெளியே இழுப்பது என்பது தர்மசங்கடமான ஒன்றாகும். இந்த விதமாக பார்க்கும் போது அது - அது வெட்கக்கரமான ஒன்றாகும். ஆனால் அது அந்த விதமாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் யூகிக்கின்றேன். இப்பொழுது அது .... 249. உங்களுக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். இங்கே பாருங்கள், அவர் இன்னுமாக இங்கே இருக்கின்றார் என்பதை உங்களுக்குக் காண்பிக்கவே, வியாதி உள்ள மற்றும் தேவைகள் உள்ள மக்கள். 250. முகருகின்ற சக்தியை இழந்து உள்ள ஒரு நபரை நான் நேராக நோக்கிப் பார்க்கின்றேன், இதோ இங்கே உட்கார்ந்து உள்ள ஒரு பெண்ணாவாள். அவள் தன்னுடைய காரியத்தைக் குறித்து சரியாக அப்பொழுது ஜெபித்துக் கொண்டு இருந்தாள். பெண்ணே, அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 251. இங்கே கடைசியில் ஒரு வயதான பெண்மணி உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த பிரதேசத்துக்கு இன்று தான் வந்து உள்ளார்கள். அவர் ஜார்ஜியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உள்ளாக ஒரு பெரிய சதை வளர்ச்சியைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது மிகவும் மோசமான ஒரு நிலையில் உள்ளது. அவர்கள் விசுவாசிப்பார்களானால், சுகமடைய முடியும். இப்பொழுது தான் வந்து உள்ளார்கள். அவர்களுடைய பெயர் செல்வி டர்னர் ஆகும். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? 252. நீங்கள் தேவனில் விசுவாசம் கொள்கிறீர்களா-? நீங்கள் இந்த இடத்திற்கு அந்நியரா-? ஜெப அட்டை உங்களிடம் இல்லை, அப்படித் தானே-? இன்று தான் நீங்கள் வந்து உள்ளீர்கள். யாரோ ஒருவர் வந்து உங்களை இங்கேக் கொண்டு வந்து உள்ளார். நீங்கள் ஜார்ஜியா மாநிலத்திலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். அது - அது தேவனால்... என்று நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா, உங்கள் மகன் உங்களிடம் வந்து உங்களை இங்கே அழைத்து வந்து உள்ளார். அது சரியே. இப்பொழுது உங்களைக் குறித்த காரியத்தை நான் தெரிந்து வைத்திருப்பதென்பது முற்றிலும் கூடாத காரியம் என்று உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் சற்று முன்னர் தான் நீங்கள் உள்ளே வந்து இங்கே அமர்ந்தீர்கள், அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள்-? 253. அதைக் கூறுகின்ற அந்த அதே பரிசுத்தாவியானவர் தாமே இப்பொழுது சரியாக மக்களுக்கு எதிராக காரியத்தை அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொண்டு இருக்கின்றார். பாருங்கள்-? ஜனங்களே, அவர் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றார். அதைச் செய்யாதீர்கள், செய்யாதீர்கள், செய்யவே வேண்டாம். நீங்கள் - நீங்கள் மிகவும் மோசமான ஒரு தவறைச் செய்கின்றீர்கள். நான் உங்களை நேசிக்கின்றேன். நான் பேசுவதைக் கேட்கத் தான் இங்கே வந்து உள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை நான் பாராட்டுகின்றேன். அன்பு திருத்துகின்ற ஒன்றாகும். 254. இங்கே தெருவில் உங்கள் பிள்ளையைக் கண்டு, அவனிடமாக "பையனே, நீ அவ்விதமாகச் செய்யக் கூடாது,'' என்று மாத்திரமா கூறுவீர்கள்-? நீங்கள் அவனை நேசிப்பீர்களானால், நீங்கள் அங்கே சென்று அவனை உள்ளே கொண்டு வந்து உள்ளேயே இருக்கும்படிக்குச் செய்வீர்கள். 255. அன்பு திருத்துகின்ற ஒன்றாகும்; உங்களைத் தட்டிக் கொடுப்பதல்ல. நான் உங்களைத் திட்டி கடிந்து உரைக்க வேண்டியதாக உள்ளது. நான் இங்கே இருப்பதற்கும் மற்றும் இந்த கூட்டத்திற்கான செலவுகளுக்கும் உங்களுடைய காணிக்கைகளும் மற்றும் காரியங்களும் தான் தேவைகளைச் சந்திக்கின்றன. நான் உங்களை நேசிக்கின்றேனா-? ஆம்... என்னுடைய முழு இருதயத்தோடும் நான் நேசிக்கின்றேன். 256. சகோதரியே, நீங்கள் செய்துக் கொண்டு இருக்கின்ற காரியங்களுக்காக நான் உங்களுக்கு எதிராக நான் உள்ளேன் என்பதனாலே நான் உங்களுக்கு எதிரி என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம். சகோதரியே, உங்களுக்கு எதிராக நான் காரியங்களைக் கொண்டு உள்ளேன் என்பதல்ல. ஆனால் அது நான் உங்கள் பேரில் கொண்டு உள்ள தேவ அன்பு தான். 257. யாரோ ஒருவர், "உனக்கு 14-வயதாக இருந்திருந்தால் அப்படியாக நீ நினைக்க மாட்டாய்” என்று கூறினார். வேதாகமம் அவ்விதமாக கூறுகின்றதே. அது மாறாத காரியமாகும். 258. அந்த தவறைச் செய்யாதீர்கள். அந்நிய பாஷையில் பேசுவதானது பரிசுத்த ஆவி என்று எண்ணி அதில் நம்பிக்கை வைக்காதீர்கள். பரிசுத்தாவி, அந்நிய பாஷை பேசும், ஆனால் நீங்கள் அதிலும், நீங்கள் செய்கின்ற காரியங்கள் பேரிலும், ஆவியில் நடனமானடுவதிலும், ஏதோ ஒரு உணர்ச்சி வசப்படுதலிலும் ஒரு போதும் நம்பிக்கை வைக்காதீர்கள். கிறிஸ்து ஒரு நபர் ஆவார். நிச்சயமாக. அவர் வார்த்தை ஆவார். அவர் அங்கே அதில் இருப்பாரானால், அவர் எப்போதுமே தம்முடைய வார்த்தை சரியாக எப்படியாக இருக்க வேண்டுமோ அதே விதமாக சரியாக அப்படியே இருக்கச் செய்வார். நீ அதை மறுத்து புறம்பாக்குவாயானால் எப்படியாக அது கிறிஸ்துவாக இருக்கும்-? வீட்டிற்கு வா, வீட்டிற்கு வா 259. கதவு இன்னுமாகத் திறந்திருக்கின்றது. நினைவில் கொள்ளுங்கள். நியாயத் தீர்ப்பு நாளிலே நான் குற்றமற்றவனாக இருப்பேன். சோர்ந்து போயுள்ளவர்களே.... 260. இயேசு கிறிஸ்து உங்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு, அந்த அதே ஆவி தான் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறார். அவர், “மனுஷகுமாரன் வெளிப் படுத்தப்படுகின்ற நாட்களிலே,'' அவர் நேற்றும், அழுக்குபடிந்திருந்த பாதத்துடனே அமர்ந்திருந்த அந்த அதே இயேசு இன்றும் மாறாதவராய் இருக்கின்றார். ஒரு மாய் மாலக்காரனுக்கு பக்கத்துணையாக அவர் இருப்பாரா-? தம்முடைய வார்த்தையை அறிந்திராத யாரோ ஒருவருக்கு அவர் பக்கத்துணையாக இருப்பாரா-? அது, வார்த்தையை அறிந்து உள்ளது என்பதற்காக அடையாளம் அதுவே தான். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகிறேன். அதைக் கடந்து சென்று விட வேண்டாம். வீட்டிற்கு வாருங்கள் 261. கடைசி முறையாக, உங்களை சந்திக்க அவர் தயாராக நின்று கொண்டு இருக்கின்றார். அறைகள், அங்கே அறையில் நிறைய இடம் இருக்கின்றது. எல்லா இடங்களிலும் ஜனங்கள் முழங்கால் படியிட்டுக் கொண்டு இருக்கின்றனர். சோர்ந்து போயுள்ளவர்களே, வீட்டிற்கு வாருங்கள். தேவன் இரக்கம் கொள்வாராக, இரக்கம் கொள்வாராக. 'அந்த சஞ்சலப்படுதலை இப்பொழுது உங்களால் உணர முடிகின்றதா-? அக்கறையுடனும் கரிசனையுடனும் இயேசு அழைக்கின்றார் ஓ பாவியே வீட்டிற்கு வா என்று அழைக்கின்றார்-! வீட்டிற்கு வாருங்கள், வீட்டிற்கு வாருங்கள். வாலிப மனிதனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மகத்தான ஒரு நிலையை, தீர்மானத்தை எடுத்துள்ளாய் ... வீட்டிற்கு வாருங்கள் அக்கறையுடனும், கரிசனையுடனும் இயேசு அழைக்கின்றார் ஓ பாவியே..... 262. பாவி என்பவன் யார்-? சிகரெட் புகைக்கிறவர்கள் அல்ல. சிகரெட் புகைத்தல் பாவம் அல்ல, மது அருந்துதல் பாவம் அல்ல. சபித்தல் பாவம் அல்ல, விபச்சாரம் செய்தல் பாவம் அல்ல. இல்லை, இல்லை. அவை அவிசுவாசத்தின் தன்மைகள் ஆகும். நீங்கள் ஒரு விசுவாசியாக இல்லாதபடியினால் அப்படியாக நீங்கள் அதைச் செய்கின்றீர்கள். 263. இரண்டு மாத்திரமே உள்ளது; ஒன்று, நீ ஒரு விசுவாசியாக இருக்க வேண்டும், அல்லது நீ ஒரு விசுவாசியாக இல்லாமலிருக்க வேண்டும். நீ ஒரு விசுவாசியாக இல்லை என்றால், நீ எவ்வளவு பக்தி உள்ளவனாக இருந்தாலும் சரி, இன்னுமாக நீ ஒரு பாவி தான். நீ இன்னுமாக பாவி தான். வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையையும், அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நீ ஏற்றுக் கொள்ளா விட்டால் நீ இன்னுமாக பாவியாகவே இருக்கின்றாய். "வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பா கிலும் ஒழிந்து போகாது." அதற்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 264. "சரி, நான் சபையைச் சார்ந்தவன், என் ஜனங்கள் ஒரு போதும்..." எனலாம். அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. “நான் இதைச் செய்கின்றேன்.” நீ எதைச் செய்திருந்தாலும் அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. 265. ஒன்று நீ விசுவாசியாக இருக்க வேண்டும் அல்லது ஒரு பாவியாக இருக்க வேண்டும். அவ்வாறு நான் கூறுவது மிகக் கடுமையாக இருக்கலாம். ஆனால் நான், ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால், உங்களுடைய இருதயங்களை அறிந்து உள்ளவர் தாமே அதை நான் கூற வேண்டும் என்று என்னிடமாகக் கூறிக் கொண்டே இருக்கின்றார். 266. எல்லோரும் வந்து விட்டார்களா-? இன்னும் சிலர் வருவதை நான் காண்கிறேன். நான் காத்துக் கொண்டு இருக்கிறேன், ஏனென்றால், இன்னும் யாராவது இருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஒரேயொரு பெண் மாத்திரமே. இப்பொழுது தண்ணீர் கலக்கப்படும் போது ஏன் நீங்கள் வந்து அதில் இறங்கக் கூடாது-? இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஒரு மகத்தான காரியமாக இருக்கும், அங்கே பின்னால் இருப்பவர்களே, வாருங்கள், நீங்கள் வருவீர்களா-? அங்கு இருந்து எழுந்து நில்லுங்கள். 267. தேவனிடமாக உங்கள் பொருத்தனைகளைச் செய்யுங்கள். "கர்த்தராகிய தேவனே, நான் செய்தவைக்காக என்னை. மன்னியும். நான் உமக்கு வாக்குக் கொடுக்கின்றேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தேன் என்று கூறினேன். ஆனால், கர்த்தாவே, எனக்கு உள்ளாக இருக்கின்ற ஒன்று நான் - நான் - நான் சரியாக இந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று தம்மை அடையாளப் படுத்திக் கொள்ளுகின்ற அவரின் பிரசன்னத்தில் இப்பொழுது நான் ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளேன் என்று கூறினது. சரியாக இப்பொழுது என்னுடைய இருதயத்தில் ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டவனாக இருக்கின்றேன். இங்கே நான் ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டவன் என்று மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை அறிந்தவனாக உள்ளேன். நான் இப்பொழுது இதை சரி செய்ய சரியாக இப்பொழுதே நான் உள்ளே செல்கின்றேன். இன்றிரவு முதல் நான் முற்றிலுமாக அவருக்காக வாழுவேன் என்று நான் சரியாக இப்பொழுதே இங்கேயே நான் பொருத்தனை செய்யப் போகின்றேன்.” நீங்கள் அதைச் செய்வீர்களா-? சரி. 268. சரி, அவ்வளவு தான் என்றால், இப்பொழுது நாம் எழுந்து நிற்போமாக, அங்கே வெளியில் உள்ளவர்களும் கூட, ஒரு நிமிடத்திற்கு நாம் நிற்போம். என்னால் பாட முடியுமானால் நலமாக இருக்கும். அந்தப் பாடலைப் பாட எனக்கு விருப்பம். கர்த்தாவே என்னை மன்னித்து இன்னும் ஒரு விசை என்னை சோதித்துப் பாரும் நீர் என்னுடையவராக இருப்பீரானால், நானும் உம்முடையவனாக இருப்பேன். நான்விழுவேனானால், அல்லது நான் தவறுவேனானால் என்னை எழச் செய்து நான் மறுபடியுமாக முயற்சி செய்யட்டும். கர்த்தாவே என்னை மன்னித்து இன்னும் ஒருவிசை என்னைச் சோதித்துப் பாரும். 269. அங்கே வெளியே உள்ளவர்களில் எத்தனைப் பேர் இப்பொழுது கிறிஸ்தவர் களாய் இருந்து, நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக நங்கூரம் இடப்பட்டு உள்ளீர்கள் என்று விசுவாசித்து, வரவிருக்கின்ற நியாயத்தீர்ப்புக்கு நீங்கள் தயாராய் இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்கள்-? எக்காளம் தொனிக்கும் போது எடுத்துக் கொள்ளப்படுவதைத் தவிர வேறே ஒன்றும் இருக்காதே, அப்பொழுது உங்களால் ஏதாவது செய்யக் கூடுமா-? இன்னுமாக எதையும் நீங்கள் செய்வதற்கென நேரம் இருக்காது, அது மிகத்துரிதமாக நடந்து விடும், "ஒரு இமைப் பொழுதில், ஒரு க்ஷணப் பொழுதில்", வருகின்ற நாட்களில் எப்படியாக இருக்கும்-? அது நடக்கும் போது நீங்கள் அதை தவறவிட்டால், என்றென்றுமாக நித்திய ஜீவனை, என்றென்றுமாக, என்றென்றுமாக, என்றென்றுமாக தவற விட்டு விடுவீர்களா-? உலகப்பிரகாரமான சந்தோஷமான இந்த சிறிய நேரத்தினால் என்ன பயன்-? ஒன்றுமே கிடையாது. 270. இப்பொழுது, நாம் எல்லோரும் இங்கே கிறிஸ்துவுக்கு என்று நம்மை அர்ப்பணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அப்படித் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? எத்தனைப் பேர் இன்றிரவு மறுபடியுமாக உங்கள் ஜீவியங்களை மறுஅர்ப்பணிப்பு செய்ய விரும்புகிறீர்கள்-? சரியாக இப்பொழுது நானும் என்னை மறுஅர்ப்பணிப்பு செய்கின்றேன். கர்த்தாவே.... இப்பொழுது உங்களை எப்பொழுதும் தொடர்ந்து நெருங்கிக் கொண்டிருக்கின்ற உங்கள் பாவமானது என்ன என்று சற்று சிந்தியுங்கள், நாம் இப்பொழுது தேவன் இடமாக நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வழியிலே செய்யுங்கள். 271. நினைவில் கொள்ளுங்கள், அவர் எங்கும் பிரசன்னராய் இருக்கின்ற சர்வ வியாபி ஆவார். இங்கே சுமார் 1800 அல்லது 2000 பேர் ஜெபித்துக் கொண்டு இருக்கின்றனர். இதே நேரத்தில் உலக முழுவதுமாக இலட்சக் கணக்கானோர் ஜெபித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் செவி கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். அவருக்குத் தெரியாமல் ஒரு குருவி கூட தெருவில் விழாது. உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு இரகசியத்தையும் அவர் அறிந்து இருக்கின்றார். 272. நாம் எல்லோருமாக நம்முடைய சொந்த வழியிலே ஜெபித்து நம்மை நாமே கிறிஸ்துவுக்கு அன்று அர்ப்பணிப்பு செய்வோமாக. 273. கர்த்தராகிய இயேசுவே, நான்... சில நிமிடங்களுக்கு முன்னர், என்னால் என் சுவாசத்தைக் கூட உணர முடியாதிருந்த அளவிற்கு உம்முடைய பிரசன்னமானது மிகப் பலமாக இருந்தது. நான் கடந்து சென்று விடப் போகின்றேன் என்பது போல இருந்தது. ஏதோ சில காரணத்தால் இந்த விதமாக அது செய்யப்பட வேண்டும் என்று நீர் விரும்பினீர். என்னால் - என்னால் அதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஆனால் கர்த்தாவே நீர் செய்கின்றீர். நீர் தேவன். நீர் தாமே உம்மை தெள்ளத் தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கின்றீர். நீர் இங்கே இருக்கின்றீர். நாங்கள் உம்மை விசுவாசிக்கின்றோம். நீர் இங்கே இருக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். 274. மேலும் இக்கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான கரங்கள் மேலே உயர்த்தப்பட்டு உள்ளன. நாங்கள் எங்களை புதிதாக அர்ப்பணித்துக்கொள்கிறோம். 275. கர்த்தாவே, நான் இங்கே பிரசங்கித்த இந்த பிரசங்க பீடத்தின் மீது, இந்த வாரத்தில் நீர் இங்கே நின்று உம்மை அடையாளப்படுத்தினதை கண்டவனாக, நான் நான் - நான் மறுபடியுமாக என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். உம்முடைய ஊழியத்திற்கென்று என்னை நான் மறுபடியுமாக மறு அர்ப்பணிப்பு செய்து கொள்கிறேன். உம்முடைய ஊழியத்திற்கென்று என்னை நான் மறுபடியுமாக புதிதாக அர்ப்பணம் செய்கின்றேன். மிகவும் களைத்துப் போயிருக்கின்றேன் என்று நான் செய்த எல்லா முறையீடுகளுக்காக என்னை மன்னியும். மேலும் - மேலும் தேவனே, நீர் தாமே என்னை உம்முடைய கரங்களில் ஏற்றுக்கொள்ளும். 276. கர்த்தாவே எங்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும். இந்த உலகக் கவலையில் இருந்தும், மற்றும் இந்த உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்தும் எங்களை அப்புறப்படுத்தி உம்மிடமாக இறுக்கிக் கட்டுவீராக, கர்த்தாவே, அதினாலே நாங்கள் தாமே முழுவதுமாக அர்ப்பணம் செய்யப்பட்டவர்களாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஊழியக்காரர்களாக இருக்க ஏதுவாக இருக்கும். பிதாவே இதை அருளும். இன்றிரவு எங்களுக்குச் செவி கொடும். 277. அங்கே பின்னாலே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறவர்களை ஆசீர்வதியும். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல், வானத்தில் இருந்து சடிதியாய் ஒரு முழக்கம் மறுபடியுமாக முழங்கட்டும். அது தாமே தேவனுடைய பீடத்திலிருந்து வருகின்ற அக்கினியினால் அங்கே இருக்கின்ற ஒவ்வொரு நபரையும் நிரப்புவதாக. அதை அருளும் கர்த்தாவே. 278. நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் உமது பிள்ளைகளாகவும், நீர் எங்கள் பிதாவாகவும் இருப்பதற்காக நாங்கள் உம்மை நன்றியால் புகழ்கிறோம். "நாங்கள் எங்கள் பாவங்களை அறிக்கை செய்தால், தேவரீர் அவர்களை மன்னிப்பீர்" என்று நீர் கூறியதால் நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். கர்த்தாவே, எங்கள் அறிக்கையின்படி எங்கள் அனைவரையும் மன்னித்து, இதுவரை கண்டிராத மாபெரும் குணப்படுத்தும் நாளாய் இருக்க அருளும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 279. கர்த்தருக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள், சகோதரன் காக்ஸ். வாருங்கள்...